எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (108) ஆரிய பூமி என்பதற்கு ஆதாரம் எங்கே?

நேயன் திருக்குறளுக்கும் ஆரியர்களுக்கும் என்ன தொடர்பு? தமிழில், தமிழரால் எழுதப்பட்ட ஒப்பற்ற உயர்நூல் திருக்குறள். திருக்குறளுக்கு இணையாக உலகில் வேறு ஒரு நூல் இல்லை. இது உலகமே ஒப்புக் கொண்ட உண்மை. அப்படியிருக்க, தமிழரின் முதன்மை நூலான திருக்குறளை ஆரியர்களின் சொத்து என்பது மோசடியான கருத்தல்லவா? சிலப்பதிகாரம் இளங்கோ அடிகள் என்னும் தமிழரால் எழுதப்பட்ட காப்பியம்; தமிழ்ப்பெண் ஆண்டாள் எழுதியது திருப்பாவை; தஞ்சை பெரிய கோயில் தமிழ்மன்னன் ராஜராஜனால் கட்டப்பட்டது. கட்டியவர்கள் தமிழர்கள். இப்படி முழுக்க முழுக்க […]

மேலும்....

சிறுகதை “எக்ஸ்க்யூஸ் மீ! எங்க வீடு எங்க இருக்கு?”

கோ. ஒளிவண்ணன் எனக்குத் திடீர்னு ஒரு பிரச்சினை. வீட்டுக்கு எப்படிப் போறது? எவ்வளவு யோசிச்சுப் பார்த்தாலும் எங்க வீடு எங்க இருக்குன்னு நினைவுக்கு வரல. ரொம்ப நேரமா யோசிக்கிறேன். எப்படி யோசிச்சுப் பார்த்தாலும் நினைவுக்கு வந்து தொலைய மாட்டேங்குது. இதுக்கு முன்னால நுங்கம்பாக்கத்தில் இருந்த வீடு நினைவுக்கு வருது. இப்போ அடையாறு பக்கம் வீடு மாத்திக்கிட்டுப் போனோம். அது என்னவோ ஒரு நகர்… சாஸ்திரியா? காந்தியா? இந்திராவா? சுத்தமா நினைவுக்கு வரலையே! வயசாயிடுச்சா? எந்தப் பஸ்ல ஏறது? […]

மேலும்....

நாராயண குரு (கி.பி.1856-1928)

“சமூகச் சிக்கல்களின் தோற்றுவாயாக ஜாதிய முறை இருப்பதைக் கண்டுணர்ந்த நாராயண குரு, அதை ஒழித்துக்கட்ட முடிவு செய்தார்; உறுதி பூண்டார். அதற்கு இரண்டு செயல் திட்டங்களை வகுத்தார். 1. ஜாதிக் கொடுமைகளை _ உணர்வுகளை மக்கள் மத்தியிலிருந்து களைதல். 2. அவர்களிடம் நிலவும் மூட நம்பிக்கைகளை அகற்றுதல். நாயர்கள் தங்களைத் தீண்டுவதில்லை; இழிவாக, தீண்டத்தகாதவர்களாக நடத்துகிறார்கள் என்று ஈழவர்கள் இவரிடம் சொன்னபோது, “முதலில் நீங்கள் உங்களுக்குக் கீழாக நினைக்கும் புலையர்களைச் சமமாக நடத்துங்கள்; உங்களோடு அவர்களைச் சேர்த்துக்-கொள்ளுங்கள்’’ என்றார். […]

மேலும்....

சிந்தனைக் களம் : ஹிந்துராஷ்டிராவை அமைக்கத் துடிக்கும் சங்கிகள்

சரவணா ராஜேந்திரன் கார்ப்பரேட் நலன், ஆட்சி, தொடர மக்கள் ஆதரவு வேண்டும் என்கிறார் மோடி. ஆனால், கடந்த ஏழு ஆண்டுகளாக இவரது ஆட்சியின் அவலம் மக்கள் மனதில் பெருங்கோபமாக உருவெடுத்து உள்ளது. இதனால், ஹிந்துத்துவா என்ற வறட்டுக் கத்தலை ஹிந்து அமைப்புகள் முன்னெடுத்துச் செல்ல, அதன் பின்னால் வரும் வாக்குகளை தேர்தல் வெற்றியாக மாற்றும் வேலையில்தான் மோடி இறங்கியுள்ளார். நாடு முழுவதிலும் ஹிந்து தேசத்திற்கான கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்து விழிப்புணர்வுப் பரப்புரைகளை நடத்தும் ஹிந்துத்துவ அமைப்பான ஹிந்து […]

மேலும்....

ஆய்வுக்கட்டுரை மதம் பெரிதில்லை; மக்கள் நலமே பெரிது!

பாவலரேறு பெருஞ்சித்திரனார் பொதுவாக, மதம் என்பது நாமெல்லாம் விதந்து பேசுமளவிற்கு அத்துணை உயர்ந்ததன்று என்றாலும், மிக வலிந்த ஒன்று, பொது மக்களைக் கட்டுப்படுத்தும் ஒரு கட்டமைப்பு. ஒரு பெரிய நம்பிக்கை வலை. நாம் விரும்பாமலேயே வீழ்ந்து கிடக்கும் ஒரு படுசேற்றுப் பள்ளம். அதை ஒரு கடவுட்-கட்சி என்றுங்கூட விளங்கிக் கொள்ளும்-படி கூறலாம். இக்கால் உள்ள திரைப்படங்-களுக்குள்ள கவர்ச்சியும் விளம்பர ஆரவாரங்களும் மதங்களுக்கு உண்டு. திரைப்-படங்கள் மக்களமைப்பையே நஞ்சாக்கும் வகையில் வளர்ந்து சிறந்து வல்லமை பெற்றாலும், அவற்றை எப்படி ஒழித்துவிட […]

மேலும்....