அறிவு கொண்டு சிந்திப்பதே நாத்திகம்!

பகுத்தறிவு என்பது மனிதனுக்கு ஜீவநாடி-; உயிர்நாடி ஆகும். ஜீவராசிகளில் மனிதனுக்குத்தான் பகுத்தறிவு உண்டு. இதில் மனிதன் எவ்வளவுக்கு எவ்வளவு தாழ்ந்த நிலையில் இருக்கின்றானோ அவ்வளவுக்கு அவ்வளவு காட்டுமிராண்டி என்பது பொருள். மனிதன் எவ்வளவுக்கு எவ்வளவு பகுத்தறிவில் தெளிவு பெறுகின்றானோ அவ்வளவுக்கு அவ்வளவு பக்குவமானவன் என்பது பொருள். பகுத்தறிவு பெறும்படியான சாதனம் நமக்கு நீண்ட நாளாகவே தடைபடுத்தப்பட்டு வந்துள்ளது. நம்மை அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்திய பார்ப்பனர்கள் நாம் பகுத்தறிவு வளர்ச்சியடைய ஒட்டாமல் தடை செய்து கொண்டே வந்து உள்ளார்கள். […]

மேலும்....

அண்ணா முடிவெய்திவிட்டார் – அண்ணா வாழ்க! – பெரியார் இரங்கல்

பெரியார் பேசுகிறார் ‘‘அண்ணா முடிவெய்திவிட்டார். அண்ணா வாழ்க.” அதாவது அண்ணா தொண்டு வாழ்க. தோழர்களே! “நோய்வருவதும், முடிவெய்துவதும் மனித ஜீவனுக்கு இயற்கையேயாகும். இதில் யாரும் தப்ப முடியாது.” ஆனால், அதற்காக மக்கள் வருந்துவதும், துக்கம் கொண்டாடுவதும் மக்களுக்கு ஒரு சம்பிரதாயமேயாகும் என்றாலும், இவ்விஷயத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் சம்பிரதாயத்தை எல்லாம் தாண்டி மக்களின் உச்ச நிலைத் துக்கக் கொண்டாட்டத்தைப் பெற்றுவிட்டார். யானறிந்த வரை, சரித்திரம் கண்டவரை, அண்ணா முடிவுக்குப் பொதுமக்கள் காட்டிய துக்க கொண்டாட்டத்தில் 4இல், 8இல் […]

மேலும்....

எனது பொங்கல் பரிசு – தந்தை பெரியார்

பெரியார் பேசுகிறார் தீபாவளிப் பண்டிகை ஆரியர் உயர்வுக்கும், திராவிடர் இழிவுக்கும் ஆகவே கற்பிக்கப்பட்டது என்றும், அதைத் திராவிடர் கொண்டாடுவது தன்மானமற்ற இழிசெயல் என்றும், சற்றேறக்குறைய 25 ஆண்டுகளாக சுயமரியாதை இயக்கம் மக்களிடையே செய்துவந்த வேண்டுகோளுக்குத் தன்மானத் தமிழர்கள் பலர், தீபாவளியைக் கொண்டாடுவது மானமற்றதும், அறிவற்றதுமான செய்கைதான் என்றாலும் மக்கள் இன்பத்துக்குப் பண்டிகை ஒரு சாதனமாக இருப்பதால் தமிழர்கள் அவர்களது குடும்பம் கூடிக்குலாவி இன்பமடைய ஏதாவது ஒரு பண்டிகை வேண்டுமே அதற்கென் செய்வது? என்று கேட்ட காலத்தில் பொங்கல் […]

மேலும்....

எல்லோருக்கும் படிப்பு எப்படிக் கிடைத்தது?

நாம் மிகப் பெரிய சமுதாயம், நாம் எவ்வளவு முன்னுக்கு வரவேண்டியவர்கள். நாதியற்றுப்போய் காட்டுமிராண்டியாக அல்லவா இருக்கிறோம்? சொல்லுங்கள், வெளிநாட்டுக்காரனைப் பார், வெள்ளைக்காரனைப் பாரய்யா! நீ வேட்டி கட்டிக்கிட்டு இருந்தபோது, அவர்கள் ஆண் பிள்ளையும், பெண் பிள்ளையும் அம்மணமாக இருந்தவர்கள். நீ உன் பெண்டாட்டி, மகள், அக்காள் தங்கச்சி என்று முறை வைத்திருந்தபோது, அவர்களுக்கு அக்காள் தங்கச்சி முறை கிடையாது. அவ்வளவு காட்டுமிராண்டியாய் இருந்தவர்கள். இன்றைய தினம் அவர்கள், ஆகாசத்துக்கு அல்லவா பறக்கிறார்கள் _ -ஆகாசத்துக்கு மேலேயல்லவா போய்விட்டு […]

மேலும்....

டிசம்பர் 6 – புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாள்

டாக்டர் அம்பேத்கர் உலகறிந்த பேரறிஞர் ஆவார் அம்பேத்கர் பெருமையைப் பற்றிப் பேச வேண்டியது தேவை இல்லை. அவர் உலகமறிந்த பேரறிஞர். நாம் அம்பேத்கர் அவர்களை அம்பேத்கர் என்று அழைப்பதற்குப் பதில் பெரியார் அம்பேத்கர் என்று அழைக்க வேண்டும். என்னை பெரியார் என்று அழைக்கின்றார்கள். ஆனதினால் எனக்கு அப்படிக் கூற சற்று வெட்கமாக இருக்கின்றது. அம்பேத்கர் அவர்கள் மனிதத் தன்மையில் தீவிரமான கருத்தும் தைரியமான பண்பும் கொண்டவர் ஆவார். அவர் சமுதாயத் துறையில் தைரியமாக இறங்கிப் பாடுபட்டவர். மக்களால் […]

மேலும்....