வரவேற்கிறேன் … தந்தை பெரியார் …

தோழர் வீரமணி அவர்கள், நான் உள்பட பலர் வேண்டுகோளுக்கும், விருப்பத்திற்கும் இணங்க, கழகத்திற்கு முழு நேரத் தொண்டராய் இருக்கத் துணிந்து பத்திரிகைத் தொண்டையும் பிரச்சாரத் தொண்டையும் தன்னால் கூடிய அளவு ஏற்றுக்கொண்டு தொண்டாற்ற ஒப்புக் கொண்டு குடும்பத்துடன் சென்னைக்கே வந்துவிட்டார். இது நமது கழகத்திற்கு, கிடைக்க முடியாத ஒரு பெரும் நல்வாய்ப்பு என்றே கருதி திரு.வீரமணி அவர்களை மனதார வரவேற்பதோடு கழகத் தோழர்களுக்கும் இந்த நற்செய்தியைத் தெரிவித்துக்கொள்கிறேன். வீரமணி அவர்கள் வக்கீல் தொழிலில் ஈடுபட்ட சிறிது நாட்களுக்குள் […]

மேலும்....

அறிவுக்கு முழு சுதந்திரம் தேவை

… தந்தை பெரியார் … ஜாதி என்பது இன்றைக்கு நமது சமுதாயத்தில் இருந்து வருகிற ஒரு மாபெரும் கேடாகும். இது இன்று நேற்றிலிருந்து வரவில்லை. சுமார் 2000, 3000 ஆண்டுகாலம் தொடங்கி இருந்து வருகிறது. நமது நாட்டில் எத்தனையோ முனிவர்கள், மகான்கள், மகாத்மாக்கள் தோன்றி வந்திருக்கிறார்கள். அவர்கள் யாராலும் ஜாதி ஒழிக்கப்படவில்லை. ஆகவே, இனி ஒரு மகான் தோன்றி, ஜாதியை ஒழிப்பார் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. ஜாதியின் காரணமாகத்தான் 100க்கு 97 பேராக உள்ள திராவிட […]

மேலும்....

சரஸ்வதி பூஜை ஓர் அர்த்தமற்ற பூஜையே !

– தந்தை பெரியார் சரஸ்வதி பூஜை என்பது ஓர் அர்த்தமற்ற பூஜை. கல்வியையும், தொழிலையும் ஒரு பெண் தெய்வமாக்கி, அதற்குச் சரஸ்வதி என்று பெயர் கொடுத்து, அதைப் பூஜை செய்தால் கல்வி வரும், வித்தை வரும் என்றும் சொல்லி, நம்மைப் பார்ப்பனர்கள் ஏமாற்றி, கல்வி கற்கச் சொந்த முயற்சி செய்து கொள்ளாமல், சாமியையே நம்பிக் கொண்டு இருக்கும்படி செய்து விட்டு, நாம் அந்தச் சாமி பூஜையின் பேரால் கொடுக்கும் பணத்தைக் கொண்டே, அவர்கள் படித்து, பெரிய படிப்பாளியாகிக் […]

மேலும்....

பெரியார் பேசுகிறார்! – கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்பதற்கு விளக்கம்

… தந்தை பெரியார் … பொதுவாகச் சொல்கிறேன், உலகிலேயே கடவுளை வணங்குகிற எவனும் கடவுள் என்றால் என்ன? அது எப்படிப்பட்டது? அதன் தன்மை என்ன? குணம் என்ன? என்பனவாகிய விஷயங்களை உணர்ந்தோ, அல்லது உணர்ந்ததன்படியோ வணங்குவதே இல்லை. மற்றெப்படியென்றால், “கடவுளை” மனிதனாகவே கருதிக்கொண்டு, மனித குணங்களையே அதற்கு ஏற்றிக் கொண்டு, தான் எப்படி நடந்துகொண்டான், தான் எப்படி நடந்து கொள்கிறான், தான் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பனவாகியவைகளைப் பற்றிக் கவலைப்படாமல், தான் நடந்துகொண்ட கூடாத்தன்மைகளுக்குப் பரிகாரம் (பாவ […]

மேலும்....

பெரியார் பேசுகிறார்!

நான் மனிதனே! – தந்தை பெரியார் நான் சாதாரணமானவன்; என் மனத்தில்பட்டதை எடுத்துச் சொல்லியிருக்கிறேன். இதுதான் உறுதி, இதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் என்று சொல்லவில்லை; ஏற்கக்கூடிய கருத்துக்களை உங்கள் அறிவைக் கொண்டு நன்கு ஆய்ந்து ஏற்றுக் கொள்ளுங்கள்; மற்றதைத் தள்ளிவிடுங்கள். எந்தக் காரணத்தைக் கொண்டும் மனிதத் தன்மைக்கு மீறிய எந்தக் குணத்தையும் என்மீது சுமத்தி விடாதீர்கள். நான் தெய்வத் தன்மை பொருந்தியவனாகக் கருதப்பட்டுவிட்டால் மக்கள் என் வார்த்தைகளை ஆராய்ந்து பார்க்கமாட்டார்கள். “நான் சொல்லுவதை நீங்கள் நம்புங்கள்; […]

மேலும்....