எச்சரிக்கைத் தொடர் – ஊடகங்கள் நம் கைக்குள் இருக்க வேண்டும்! (யூதர்கள் இரகசிய அறிக்கை)

2023 கட்டுரைகள் செப்டம்பர் 1-15,2023 மற்றவர்கள்

(யூதர்கள் இரகசிய அறிக்கை)

சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் நடைமுறையில் இருக்கும் சட்டங்களுக்கு, அதிபர் புதிய வியாக்யானங்களை அளிப்பார். அது, நமது வழிகாட்டுதலின் கீழ் நடைபெறும். தேவைப்படும் பட்சத்தில், நமக்கு வேண்டாத சட்டங்களைச் செல்லாது என்றும் அவர் அறிவிப்பார். மேலும் தற்காலிகச் சட்டங்களை இயற்றவும், அரசியல் சாசனத்தில் திருத்தங்களைக் கொண்டு வரவும் அதிபருக்கு அதிகாரம் உண்டு. நாட்டின் ஒட்டுமொத்த நன்மையையும் பாதுகாக்கும் பொருட்டு அந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி அதைச் செய்ய வேண்டும்.

கொஞ்சம் கொஞ்சமாக, சிறிது சிறிதாக இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் அரசியல் சாசனத்தில் அறிவிக்கப்பட்டுள்ள மக்களுக்கான அதிகாரங்களை இல்லாமல் ஆக்க வேண்டும். அவை ஆரம்ப கால ஆட்சி மாற்றத்தின்போது இருந்த கட்டாயத்தில், அவர்களுக்கு நாம் வழங்கியவையாகும். பின்னர், நமது படிப்படியான நடவடிக்கைகள் மூலம் அவர்களுக்கு வழங்கப்பட்ட அரசியல் சாசன உரிமைகள் பறிக்கப்படும். சர்வாதிகாரத்தை நோக்கி அரசாங்கம் இட்டுச் செல்லப்படும்.

நாம் ஊடகத்தின் விஷயத்தில் பின்வரு-மாறு நடந்துகொள்ள வேண்டும்; இன்றைய சமுதாயத்தில் ஊடகத்தின் பங்கு என்ன? நம் நோக்கங்களை நிறைவேற்றுவதற்குப் பெரும் சாதனமாகப் பயன்படும் இது, மக்களை உலக மோகத்தின்பால் ஈர்த்து, அதன் பக்கம் அவர்களை உற்சாகத்தோடு அழைக்கும் பணியை மேற்கொள்கிறது. அல்லது அரசியல் கட்சிகளின் சுயலாபங்களுக்காகக் குரல்கொடுக்கும் வேலையைச் செய்கிறது. பெரும்பாலும் ஊடகம் என்பது உப்பு சப்பில்லாத விஷயங்களை மக்களுக்கு வழங்குவதாகவும், பொய்யான, அநீதியான ஒன்றாகவுமே விளங்குகிறது. யாருடைய லாபத்திற்காக இந்த ஊடகம் செயல்படுகிறது என்பதைப் பற்றிய அறிவு, பெரும்பாலானோருக்குச் சிறிதளவுகூட இருப்பதில்லை.

இந்த ஊடகம் என்னும் குதிரைக்குக் கடிவாளமிட்டு, அதன் முதுகில் ஏறி, சவாரி செய்வோம். அனைத்து வகையான அச்சு ஊடகச் செய்தித் தயாரிப்புகளுக்கும் கடிவாளமிட வேண்டும். செய்தித்தாள்களின் தாக்குதல்களிலிருந்து நாம் தப்பித்து விட்டு, துண்டுப் பிரசுரங்களையும் புத்தகங்களையும் விட்டுவைத்தால் அது சரியாக இருக்குமா? அதன் தாக்குதல்களுக்கு நாம் இலக்கானால் நம் நடவடிக்கைகள் அர்த்தமுள்ளதாகாது.

எனவே, ஊடகத் துறையை மிகச் செலவு பிடிக்கும் துறையாக ஆக்கி, அரசாங்கத்திற்குப் பெருத்த வருவாய் ஏற்படுத்தித் தருவதாக ஆக்க வேண்டும். பதிப்பகமோ, அச்சகமோ இவற்றில் எந்த ஒன்றைத் தொடங்குவதாக இருந்தாலும், அதற்காக அரசாங்கத்திற்கு மிகப்பெரிய அளவில் அவர்கள் முன்தொகை செலுத்த வேண்டும்.
மேலும், முத்திரைத் தாள் வரியும் கட்ட வேண்டும். நம்மிடம் அவர்கள் கட்டிய முன்தொகை, அரசாங்கத்தைத் தாக்கமாட்டார்கள் என்ற உத்தரவாதத்தை அளிக்கும்.

எந்தத் தாக்குதலாக இருந்தாலும், கொஞ்சம்கூட கருணை காட்டாமல், வாங்கிய முன்தொகையிலிருந்து அதிக அளவிலான அபராதங்கள் உடனடியாக விதிக்கப்படும். இந்த முத்திரைத்தாள் வரி, முன்தொகை, அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் அரசாங்கத்திற்குப் பெரும் லாபம் கிடைக்கும்.

எனினும், பணபலம் படைத்த அரசியல் கட்சிகள் புகழ் அடையும் நோக்கில், இந்த அபராத விஷயங்களைப் பொருட்படுத்தாமல் நம்மைத் தாக்கி பிரச்சாரம் செய்வதற்கு வாய்ப்பு உள்ளது என்பதை மறுக்க முடியாது. முதல் முறை எச்சரிக்கப்படும் அவர்கள், தொடர்ந்து இரண்டாவது முறையும் அவ்வாறே செய்தால், அந்தச் செய்தி நிறுவனம் இழுத்து மூடப்படும். நமது அரசாங்கத்தின் புனிதத் தன்மையை எதிர்த்து விரல் நீட்டும் எவரும் தண்டிக்கப்படாமல் இருக்கமாட்டார்கள். நியாயமான, எந்தத் தகுந்த காரணமுமின்றி அநாவசியமான கலகத்திற்கு மக்களைத் தூண்டி விட்டதாகக் கூறி அந்தச் செய்தி நிறுவனம் இழுத்து மூடப்படும்.
அதேசமயம் நீங்கள் மற்றொரு விஷயத்தையும் மறக்கக்கூடாது. நம்மைத் தாக்கி எழுதும் பத்திரிகைகளில் சில, நம்மாலேயே நிறுவப்பட்டவையாக இருக்கும். அந்தப் பத்திரிகைகளோ நம்மை விமர்சிப்பது போல் தோன்றினாலும், நாம் எதில் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என்று ஏற்கெனவே தீர்மானித்துவிட்டோமோ அதைப் பற்றி மட்டுமே அது விமர்சித்து எழுதும்.

ஊடகங்களைக் கட்டுப்படுத்துவோம்

நம்முடைய கட்டுப்பாட்டை மீறி, ஒரு சிறு அறிவிப்புகூட மக்களிடம் சென்று சேராது. இதற்கான நடவடிக்கைகளை இப்பொழுதே தொடங்கி விட்டோம். சர்வதேச செய்தி ஏஜென்சி நிறுவனங்கள் எல்லாம் ஏறக்குறைய நம்முடையவை. இந்தச் செய்தி நிறுவனங்களை மய்யமாக வைத்தே உலகச் செய்திகள் வந்து சேர்கின்றன. எதிர்காலத்தில், இவை அனைத்தும் நமக்குச் சொந்தமாகும். அப்போது, எதை அவர்களுக்குச் செய்தி என்று கூறி அனுப்பி வைக்கிறோமோ அதற்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து கோயிம் ஊடகங்கள் செய்தி வெளியிடும்.

வரி நடவடிக்கைமூலம் தேவையற்ற, விரும்பத்தகாத மூடத்தனமான எழுத்துகள் எல்லாம் ஓர் எல்லைக்குள் கட்டுப்படுத்தப்படும். அத்துடன், அபராத நடவடிக்கைக்குப் பயந்து எழுத்தாளர்களும் நம்மைச் சார்ந்தே இருப்பார்கள். நமக்கு எதிராக யாரேனும் ஒருவர் எழுத விரும்பினால், அதை அச்சடித்து வெளியிட அந்த எழுத்தாளருக்கு யாரும் கிடைக்க மாட்டார்கள். அப்படியே கிடைத்தாலும், நம் அனுமதியை எதிர்பார்த்து அச்சகத்தார் நிற்க வேண்டும். இவ்வாறாக, நமக்கு எதிரான வேலைகள் அனைத்தையும் முன்கூட்டியே அறிந்து, அதற்குரிய காரண காரியத்தோடு அவற்றைத் துடைத்தெறிந்துவிடலாம்.

இதனால் நம் அரசாங்கம் அதிக எண்ணிக்கையிலான பத்திரிகைகளுக்கு உரிமையாளராக விளங்கும். இதன் வழியாக, நம் அரசுக்குக் கேட்டை ஏற்படுத்தும் தனியார் ஊடகங்களின் தாக்கம் சரிக்கட்டப்படும். மக்கள் சிந்தனையில் அளப்பரிய தாக்கம் ஏற்படுத்தக் கூடியவர்களாக நாம் விளங்கலாம். 10 பருவ இதழ்களுக்கு அனுமதியளித்தால், 30 பருவ இதழ்களை நாம் நடத்துவோம். எனினும், இந்த நடவடிக்கைகள் மக்களுக்கு அய்யத்தை ஏற்படுத்திவிடக்கூடாது. அதன் பொருட்டு, நாம் நடத்தும் இதழ்களில் பெரும்பாலானவை கருத்திலும், தோற்றத்திலும், நடவடிக்கைகளிலும் நமக்கு எதிரானதாகவே இருப்பது போன்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்த வேண்டும்.

இதன்மூலம், நம்முடைய பத்திரிகைகளின் மேல் நம்பகத்தன்மை உருவாக்கப்படும். அதன் தொடர்ச்சியாக, நம் கண்களுக்குப் புலப்படாத எதிரிகள்கூட அந்தப் பத்திரிகைகளின்பால் ஈர்க்கப்பட்டு அதை நோக்கி வருவார்கள். நமது வலையில் சிக்கிக்கொள்ளும் அவர்கள், எல்லா வகையிலும் நமக்குப் பாதகமற்றவர்களாக மாறி விடுவார்கள்.

அரசாங்க சார்புடைய பத்திரிகைகளைப் பொறுத்தவரை, அவை முன் வரிசையில் நிற்கும் முன்னணிப் படையாகும். அவை எப்போதும் நமது விருப்பத்திற்குப் பாதுகாவலாகச் செயல்படும். அய்யமில்லாமல், மக்களிடம் அவை ஏற்படுத்தக்கூடிய தாக்கம் அளப்பரியதாக இருக்கும்.
இரண்டாவது தரத்தில், நடுநிலைப் பத்திரிகைகள் செயல்படும். இவை பெரிதுபடுத்தத் தகாத, உப்பு சப்பில்லாத சின்னச் சின்ன விவகாரங்களை மட்டும் தாக்கி எழுதும்.

மூன்றாவது படிநிலையில் முழுக்க முழுக்க நமக்கு எதிரான பத்திரிகைகள். அவற்றின் மத்தியில் நம்மால் உருவாக்கப்பட்ட பத்திரிகைகளுக்கும் இடமுண்டு. அது தன் கொள்கை நிலையிலும், தோற்றத்திலும் முழுக்க முழுக்க நமக்கு- எதிரானது போன்று காட்சியளிக்கும். நமது எதிரிகள் அந்தப் பத்திரிகைகளை மனப் பூர்வமாக ஏற்று, தங்களுடைய துருப்புச் சீட்டுகளை (திட்டங்களை) அந்தப் பத்திரிகைகளிடம் வெளிப்படுத்துவார்கள்.

(தொடரும்)