தொல்லாய்வு

2023 ஆகஸ்ட் 16-31,2023 கட்டுரைகள் மற்றவர்கள்

அறிய வேண்டிய
அரிய தொல்லியல் குறிப்புகள்
புலவர் செ. இராசு, எம்.ஏ., பிஎச்.டி..,

“ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்கள் மூன்று கொலைகார பார்ப்பன சகோதரர்கள்’’. இது வரலாற்று உண்மை. இதை தற்கொலை என்று கூறி மறைக்க நடக்கும் சதி.சுந்தரசோழன்  வானவன் மாதேவியின் மூத்த மகன் ஆதித்த கரிகாலன். இளவரசு பட்டம் சூட்டப்பட்டு தந்தையின் சார்பில் ஆட்சி புரிந்தவன். தன் பெயரிலேயே கல்வெட்டு பொறிக்கும் உரிமை பெற்றவன். அவன் கொல்லப்பட்டான். கொலை செய்தவர்கள் மூன்று பார்ப்பன சகோதரர்கள் அவர்கள்,
சோமன் (பிற்பகுதி அழிக்கப்பட்டுள்ளது, இவன் தம்பி ரவிதாசனான பஞ்சவன் பிரமாதிராசன், இவன் தம்பி பரமேஸ்வரனான இருமுடி சோழ பிரமாதிராசன் ஆகியோர்.

இது கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் உடையார்குடி காட்டுமன்னார்குடி அனந்தேசுரர் கோயில் கருவறை மேற்குச் சுவரில் பொறிக்கப்பட்ட இராசராசனின் இரண்டாம் ஆண்டுக் கல்வெட்டில் தெரியவரும் செய்தியாகும். (கி.பி.987).

இக்கல்வெட்டில் இராசராசன் கூற்றாகவே “கரிகால சோழனைக் கொன்ற துரோகிகள்’’ என்ற தொடர் இடம் பெற்றுள்ளது.
இக்கல்வெட்டை மத்திய அரசு தொல்லியல் துறை கல்வெட்டுப் பிரிவினர் 1920 ஆம் ஆண்டு படியெடுத்துள்ளனர். (ARE 577 OF 1920) தென்னிந்திய கல்வெட்டுத் தொகுதி 32இல் 230ஆம் கல்வெட்டாய்ப் பதிப்பித்துள்ளனர். (பக்கம் 369, 370) எபிகிராபியா இதழ்

21இல் 168-170 பக்கங்களில் இது பற்றிய விரிவான கட்டுரை வெளிவந்துள்ளது. இவை அனைத்தும் ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்கள்
மேற்காட்டப்பட்ட மூன்று பார்ப்பனச் சகோதரர்களே என்று மிகத் தெளிவாகக் கூறுகிறது. இவை கூறும் ஆங்கில வாசகம்,
According to that soman, his younger brothers, Ravidasan alias Panchavan Bramadhirajan and his younger brother Paramesvaran alias Irumudich Cholabramadhirajan had been found guilty of treason as they murdered Karikala chola, whom took the head of Pandya.

சொத்துக்கள் பறிமுதல்

உடையார்குடிக் கல்வெட்டு இராசராசன் “வடகரை பிரமதேயம் வீரநாராயணச் சதுர்வேதிமங்கலப் பெருங்குறிப் பெருமக்களுக்கு எழுதிய ஓலை (ஸ்ரீமுகம்) ஆகும். கொலைகாரச் சகோதரர்கள் இவர்கள் தம்பிமார், இவர்கள் மக்கள், இவர்கள் மனைவிமார், சித்தப்பா, பெரியப்பா, இவர்கள் மக்கள், பிள்ளை கொடுத்த மாமன், தாயோடு உடன்பிறந்த மாமன், இவர்கட்குப் பெண் கொடுத்தோர். இவர்கள் பெண்களை மணம் செய்தோர் ஆக அனைவர் நிலமும் பறிமுதல் செய்யப்பட்டது. இப்போது உடன்பிறந்த மலையனூரனான தேவதாசக்கிரமவித்தன், இவர்கள் மக்கள், தாய் பெரிய நங்கைச்சானி ஆகியோர் நிலம் பறிமுதல் செய்யக் கூறுகிறது.’’
கொலைகாரப் பார்ப்பனச் சகோதரர்கள் மூவரும் உத்தம சோழன் ஆட்சிக் காலத்தில் தண்டிக்கப்படவில்லை. சேர நாட்டிற்குத் தப்பிச்சென்ற அவர்கட்குக் காந்தளூர்ச் சாலை அடைக்கலம் கொடுத்தது.

பட்டம் ஏற்றதும் ஒற்றர் மூலம் செய்தி அறிந்த இராசராசன் படையுடன் சென்று காந்தளூர்ச் சாலையை அழித்துக் கொலைகாரர் மூவரையும் கொன்றான் என்று ஆய்வாளர் கணியன் பாலன், நடன காசிநாதன் ஆகியோர் கூறுகின்றனர். செங்கம் பகுதி நடுகல் “சாலை கல்மறுத்து அங்குள்ள மலை ஆளர் தலை அறுத்து’’ என்று கூறுகிறது. இதனால்தான் இராசராசன் மெய்க்கீர்த்தியில் முதல் வெற்றியாகக் காந்தளூர்ச் சாலை கலமறுத்தது கூறப்படுகிறது.
இதற்கான கல்வெட்டுச் சான்றுகள்: நெ.230 & நெ.67