மாயவரம் சி.நடராசன்

2023 மற்றவர்கள் ஜனவரி 1-15, 2023

தந்தை பெரியார் காங்சிரசில் இருந்த காலம் முதல் சுயமரியாதை இயக்கம் கண்ட காலம் அளவும் அவரோடு ஒன்றி நின்று பொதுப்பணியில், சுயமரியாதை இயக்கப் பணிகளில் தீவிரமாகத் தொண்டாற்றியவர் மாயவரம் சி.நடராசன். இவர் மாயவரத்தில் 7.1.1902 இல் ந.சிதம்பரநாதன் – மங்கையர்க்கரசி இணையருக்குப் பிறந்தார். ‘‘காங்கிரஸ், ஜஸ்டிஸ், சுயமரியாதை உலகில் நடராசனை அறியாதவர் வெகு சிலரே இருக்கலாம். சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்த காலம் முதல் இன்றுவரை அருந்தொண்டாற்றி வந்தவர். தமக்கென வாழாதவர். தமக்கென ஒரு அபிப்பிராயமும் காட்டிக்கொள்ளாத போர் வீரராய் இருந்தவர். பணங்காசைப் பற்றியோ; தண்டனை, அச்சுறுத்தல் பற்றியோ, துன்பம், தொல்லை ஆகியவை பற்றியோ சிறிதும் கவலை கொள்ளாமல் தலைவரால் என்ன உத்தரவு பிறப்பிக்கப்படுகிறதோ அதற்கு இசையவே படையை நடத்திய தளபதி திடீரென்று முடிவு எய்திவிட்டார் என்று தந்தி வந்தது! நம்ப முடியவில்லை, எழுதுவதற்குப் பேனா ஓடவில்லை. ‘குடிஅரசு’ வீரவணக்கம் செலுத்தி அந்தத் தளபதியை நினைவு கூர்வோமாக’’ என தந்தை பெரியாரின் ‘குடியரசு’ தலையங்கம் கூறுவதினின்று இவர் பெருமையை உணரலாம். இவர் 10.7.1937இல் மறைந்தார்.