கட்டுரை: முகநூலா… முப்புரி நூலா?

2023 கட்டுரைகள் ஜனவரி 1-15, 2023

வி.சி.வில்வம்

மார்க் ஜுக்கர்பெர்க் தமது நண்பர்களுடன் 2004 ஆம் ஆண்டில் தொடங்கியது தான் “ஃபேஸ்புக்’’ என்கிற சமூக வலைத்தளம்!
தமிழில் முகநூல் என அழைக்கப்படுகிறது. தற்சமயம் முக “நூல்’’ எனப் பிரித்து எழுதப்படும் நிலைக்கு வந்து நிற்கிறது!
உலகம் முழுவதும் 112 மொழிகளில் இயங்குவதாகச் சொல்கிறார்கள். அப்படி-யென்றால் சமஸ்கிருதம் இருக்கிறதா எனக் கேட்காதீர்கள். அது எதற்கும் பயன்படாத மொழி என்பதற்கு இதுவும் ஒரு சான்று!
“வளர்ந்து வரும் அறிவியல் வளர்ச்சி சமூக மாற்றத்தையும், முற்போக்குத் தன்மையையும் அதிகரிக்கும்’’ எனப் பெரியார் பேசியிருப்பார்.
அவ்வகையில் முகநூல் வந்த பிறகு ஒவ்வொருவரும் எழுதத் தொடங்கினார்கள்; பிரச்சினைகளைப் பேசத் தொடங்கினார்கள்; தாமுண்டு தம் வேலையுண்டு என இருந்தவர்களைச் சமூக மனிதர்களாய் மாற்றிய வலிமை சமூகத் வலைத்தளங்களுக்கு உண்டு!
அதற்கு முந்தைய காலங்களில் பார்ப்பனப் பத்திரிகைகள் என்ன செய்தி தருகிறதோ அதுதான் “வேதம்’’. அவர்கள் தங்கள் அழுக்கு-
களை நம் மீது சுமத்தினார்கள்.

கால வளர்ச்சியில் சமூக ஊடகங்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு பக்கம் கிடைத்தது. அதில் அனைவருமே பத்திரிகையாளர்களாக,
எழுத்தாளர்களாக, பேச்சாளர்களாக மாறிப் போனார்கள். தங்களுக்குப் பிடித்தவாறு தலையங்கம் தீட்டினார்கள்; துணிச்ச
லாக விமர்சனம் செய்தார்கள்; நகைச்சுவையாக எழுதிக் குவித்தார்கள்; மொத்தத்தில் பொது நல மனிதர்கள் ஒன்றும் கூடும் இடமாக அது மாறிப் போனது!
அதேநேரம் அறிவியல் வளர்ச்சியைநம்பாதவர்களும் அங்குதான் இருக்கிறார்கள்.
கிறித்துவர்கள் கண்டுபிடித்த வலைத்தளத்தில், இந்து மதத்தை வளர்க்கிறார்கள். இவை மட்டுமின்றி கிறிஸ்துவ மக்களைக் கடுமை
யாகச் சாடுகிறார்கள் _ எப்படி இஸ்லாமிய நாடுகளின் பெட்ரோல், டீசலில் பயணம் செய்து கொண்டே, முஸ்லிம் வெறுப்பு பேசுகிறார்களே அப்படி!

ஆக முற்போக்கு அறிவியல் சாதனத்தை, பிற்போக்கு மனிதர்கள்தாம் அதிகம் பயன்படுத்து-கிறார்கள்!
இந்நிலையில் தமிழ்நாட்டின் திராவிட இயக்கச் சிந்தனைகள் இந்தச் சமூக ஊடகங்-களின் வரவுக்குப் பின் அதிவேகம் பெற்றன. உடனுக்குடன் பதில் வழங்குவது, வரலாற்றுத் தகவல்களை எடுத்து வைப்பது, ஆதாரங்களை அள்ளி வீசுவது எனப் பகுத்தறிவு, சுயமரியாதைக் கருத்துகள் மக்களிடம் அதிக செல்வாக்கை அடைந்தன! தவிர உலகம் முழுவதுமுள்ள முற்போக்குத் தமிழர்கள் ஒன்று சேரத் தொடங்-கினார்கள்!
இரண்டாயிரம் ஆண்டு கால நயவஞ்சக பார்ப்பனியம் இதைப் பார்த்துப் பொறுக்குமா? அலறித் துடித்தன! நாங்கள்
சொல்வது, நாங்கள் செய்வது, நாங்கள் எழுதுவதுதானே வேதம், இதை எல்லோரும்
செய்துவிட்டால் என்ன தர்மம்?

உடனே பார்ப்பனிய மூளை வேலை செய்தது. முகநூல் நிருவாகத்தில் தங்களின் நூலை உள்ளே செலுத்தினார்கள். எந்த ஒன்றிலும் உள்ளே நுழைவது அவர்களுக்குச் சிரமம் கிடையாது.
இந்தியாவிற்குள் நுழைந்த பிறகு இந்த நாட்டு மக்களை, இந்த நாட்டு மன்னர்களை, படையெடுத்து வந்த கிறிஸ்துவ, இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பல ஆட்சியாளர்களைத் தங்களின் கெடுமதியால் வஞ்சித்தும், கெஞ்சியும், மிரட்டியும் உருட்டியும், காலில் விழுந்தும், காலை வாரியும் விடுகிற உலக வன்முறைகளின் ஒட்டுமொத்த வடிவம் தானே பார்ப்பனியம்! உலகம் தோன்றிய காலத்தில் இருந்து ஓர் “இசம்’’ எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு இவர்களே எடுத்துக்காட்டு!
இப்படியான சூழலில் அமெரிக்காவின் முகநூல் தலைமை நிலையத்திலும், இந்தியாவிற்கான முகநூல் நிருவாகத்திலும் வெட்கமில்லாமல் அமர்ந்து கொண்டு இவர்கள் செய்கிற ஆதிக்க ஆணவத் திமிர்ப் போக்கு அதிகரித்துவிட்டது.
நாம் நினைப்பதைப் போல நியாயமான செய்திகளைக் கூட இப்போது எழுத முடிவதில்லை. ஒரு கட்டுப்பாட்டைக் கொண்டு வந்துவிட்டார்கள். முற்போக்காளர்கள் இயங்குவதை முடக்கிவிட்டார்கள். நாம் வெகு இயல்பாக எழுதும் “பார்ப்பனர்” என்கிற சொல்லாடலையே அங்கு பயன்படுத்த முடியாது!

இந்து மதம், ஆர்.எஸ்.எஸ், பாஜக குறித்தெல்லாம் எழுத முடிவதில்லை. சில வார்த்தைகளைப் பயன்படுத்தினாலே தானாக (Automatic) மறைத்துக் கொள்ளும் அல்லது நீக்கிவிடும் நுட்பத்தைக் கையாள்கிறார்கள். ஆனால், கிறிஸ்துவ, இஸ்லாமிய மதம் குறித்து கடுமையாக எழுதுவதற்கு எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை.
“இப்படித்தான் எழுத வேண்டும், இந்த வார்த்தைகளைத் தான் பயன்படுத்த வேண்டும், அடக்க ஒடுக்கமாய் இருக்க வேண்டும், மீறிச் செயல்பட்டால் வெளியேற்றப்படுவீர்கள்”, என்பது தான் இந்திய “நூல்” முகநூல் வழியாக நமக்கு எச்சரிக்கைக் கொடுக்கிறது!
கடந்த நாள்களில் முகநூலின் வளர்ச்சி வீழ்ச்சியில் செல்வதாக செய்திகள் வருகின்றன. பார்ப்பனர்களுக்கு அதுகுறித்துக் கவலை கிடையாது. எந்த ஒன்றும் தங்களுக்குப் பயன்பட வேண்டும்; இல்லாவிட்டால் அழிந்து போக வேண்டும்!
பிறர் அழிவில் வாழ்பவர்கள் அவர்கள்!
முகநூல் நிருவாகம் விழித்துக் கொள்ள
வேண்டும்!