அறிவோம் : தமிழ்நாடு அரசின் சில உதவித்தொகைகள்!

2022 மற்றவர்கள் ஜுலை 01-15 2022

பத்தாம் வகுப்பு முதல் முனைவர் ஆய்வு Ph.D., வரை…

1. ஈ.வெ.ரா. நாகம்மை உதவித்தொகை
தமிழ்நாடு அரசால் மாணவிகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது இது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் முதுகலையில் கலை மற்றும் அறிவியல் பாடங்களைப் படிப்பவர்களுக்கு இந்த உதவித்தொகை கிடைக்கும். இதற்கு இளங்கலையில் குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்-பெண்ணுடன் தேர்வாகியிருக்க வேண்டும். இந்த உதவித்தொகை மதிப்பெண்ணைப் பொறுத்தும், படிக்க விருக்கிற பாடப்பிரிவைப் பொறுத்தும் மாறுபடும்.
2. Ph.D.,, ஸ்காலர்ஷிப் ஆஃப் தமிழ்நாடு
அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் றிலீ.ஞி. படிக்கிற மாணவர்களுக்-கான உதவித்தொகை இது. மாதம் 3000 ரூபாய் வழங்கப்படும். முதுகலையில் 60 சதவிகித மதிப்பெண்ணுடன் தேர்ச்சியடைவதோடு, ஆராய்ச்சிப் படிப்பை நேரடி வகுப்பில் படிப்பவர்களுக்கே இந்த உதவித்தொகை வழங்கப்படும்.
இந்த இரு உதவித் தொகைக்கான விண்ணப்பம் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தில் வழங்கப்படும். சென்னையில் வசிக்கிற மாணவர்-கள் நேரடியாக இயக்குநரகத்துக்குச் சென்று விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்து, அதை தங்கள் கல்லூரி மூலமாக அனுப்ப வேண்டும். மற்ற மாணவர்கள் தங்கள் முகவரி எழுதப்-பட்ட அஞ்சல் உறையை கல்லூரிக் கல்வி இயக்குநகரத்துக்கு அனுப்பி விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
3. தந்தை பெரியார் நினைவு உதவித் தொகை
ஒவ்வொரு மாவட்டத்திலும், பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில், மதிப்பெண் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த இரண்டு மாணவர்களுக்கும் இரண்டு மாணவிகளுக்கும் வழங்கப்படுகிற உதவித்-தொகை இது. பாலிடெக்னிக் போன்ற தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளுக்கு மூன்று ஆண்டுகளுக்கு தலா 3,000 ரூபாய் வீதம் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்-பட்டோர், சீர் மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமேயானது இந்த உதவித்தொகை.
4. பேரறிஞர் அண்ணா நினைவு உதவித்தொகை
ப்ளஸ் டூ தேர்வில் மதிப்பெண் அடிப்படை-யில் முதலிரண்டு இடங்களைப் பிடித்த பிற்படுத்தப்-பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர் மரபினர் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் வழங்கப்-படுகிற உதவித்-தொகை, ஆண்டுக்கு 3,000 ரூபாய் வீதம் நான்கு ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
மருத்துவம், பொறியியல், சட்டம் போன்ற தொழில்சார் (Professional) படிப்புகளுக்கும் மட்டுமேயானது இந்த உதவித்தொகை.
மேற்குறிப்பிட்ட 3 மற்றும் 4ஆம் பிரிவுகளுக்-கான உதவித்தொகைகளைப் பெற உங்கள் மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கிற பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கான நலவாரியத்தை அணுகி விண்ணப்பப் படிவத்தைப் பெற்று, பூர்த்தி செய்து, தாங்கள் படிக்கிற கல்லூரி வழியே அனுப்ப வேண்டும்.