வரலாற்றுச் சுவடு : அண்ணாவின் பார்வையில் வெள்ளுடை வேந்தர் (27.4.1852 – 28.4.1925)

ஏப்ரல் 16-31,2022

தலைப்பாகையுடன் கூடிய வெள்ளுடை, சட்டைப் பையில் தங்கச் சங்கிலியுடன் கூடிய பாக்கெட் கடிகாரம், அதில் ஒரு பேனா, மூக்குக் கண்ணாடி, நெடிய தோற்றம், கம்பீரமான பார்வை இவற்றின் ஒட்டு மொத்தமான வடிவம்தான் வெள்ளுடை வேந்தர் திராவிடப் பெருந்தகை பிட்டி தியாகராயர். அவரின் 170ஆம் பிறந்தநாள் இந்நாள் (1852).

1882இல் சென்னை மாநகராட்சியின் உறுப்பினராக உள்ளே நுழைந்த தியாகராயர் 1925 ஆம் ஆண்டுவரை தொடர்ந்து பணிபுரிந்த சாதனையாளர் அவர். மாநகர சபையில் தேர்ந்து எடுக்கப்பட்ட முதல் தலைவர் அவர்தான். மூன்றுமுறை தொடர்ந்து தேர்ந்தெடுக்கப் பட்டவரும் அவரே! சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்திற்கு வித்திட்ட வித்தகரும் அவரே! தன்னைத் தேடி வந்த முதல் அமைச்சர் பதவியை வேண்டாம் என்று கூறி கடலூர் ஏ.சுப்பராயலு ரெட்டியாரை முதல் அமைச்சராகும்படிச் செய்தார்.

இவரைப் பற்றி அண்ணா கூறுகிறார்:

“சர் தியாகராயர் தோன்றி திராவிடப் பெருங்குடி மக்-களுக்குத் தலைமை பூண்டு, அவர்களின் தன்னுணர்-விற்கு வழி கோலி, அவர்களின் வாழ்வில் இருந்து வந்த அடிமைத்தனத்தை அகற்றப் பாடுபட்டு, சமுதாயத் துறை, பொருளாதாரத் துறை, அரசியல் துறை ஆகியவற்றில் நல்லிடம் பெற உழைத்தார். நமது பண்டைப் பெருமைகளையும் அவரால் உணர முடிந்-தது. அன்று தியாகராயர் திராவிடப் பெருங்குடி மக்கள் முன்னேற வேண்டு-மென்று பாடுபட்டதன் பலனை இன்று காண்கிறோம்.

அவர் காலத்திலே தூவிய விதை நன்றாக வளர்ந்திருக்கின்றது. அவர் அன்று பறக்கவிட்ட சமு-தாயப் புரட்சிக் கொடியின்கீழ் நின்றுதான் நாம் இன்று பணியாற்றி வருகிறோம்’’ என்று குறிப்பிட்டார் அறிஞர் அண்ணா.

1959ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சித் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றபோது அண்ணா அவர்கள்,

“நம்முடைய தோழர்கள் எல்லாம் நகர மன்றத்திலே நுழைகின்ற நேரத்தில்,

சர். தியாகராயர் சிலைக்கு மாலை அணிவித்து வணங்க வேண்டும்.

மகானே! நீங்கள்தான் தமிழர் சமுதாயத்திற்கு முதன்முதல் அறிவூட்டினீர்கள். வாழும் மார்க்கத்தைக் கற்றுக் கொடுத்தீர்கள். உங்களது வழிவந்த நாங்கள் நீங்கள் பட்ட தொல்லைகளைவிட அதிகமாக அவதிப்பட்-டோம். நீங்களாவது செல்வச் சீமான்; நாங்கள், பஞ்சைப் பராரிகள்! ஆனால், சீமான்கள் உங்களை மதிக்க மறந்தார்கள்; ஏழைகளாகிய நாங்கள் உங்களை மறக்கவில்லை என்று வீரவணக்-கம் செய்துவிட்டு உள்ளே நுழைந்து கடமையாற்ற வேண்டுகிறேன்’’ என்றார்.ஸீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *