ஆசிரியர் பதில்கள் : இதுதான் சரியான ‘பார்முலா’!

பிப்ரவரி 1-15,2022

கே:       அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அதிகாரிகளை மாநிலங்களிலிருந்து ஒன்றிய அரசு அழைத்துக்கொள்ள வசதியாய் சட்டம் இயற்றுவது பாசிச செயல்பாடல்லவா?

               – குமார், மதுரை

ப:           நன்றாக நடைபெறும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில நிருவாகத்திற்கு இடைஞ்சல் செய்யும் திட்டமாக இது அமைந்துவிடக் கூடும் என்ற அச்சம் பல மாநிலங்களில் உள்ள அதிகாரிகளுக்கும், முதல் அமைச்சர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. பிரதமர் இதனைக் கைவிடுவது முக்கியம்.

கே:       உ.பி. தேர்தலில் சமாஜ்வாடி கட்சியும், காங்கிரசும் தனித்து நின்று களம் காண்பதைத் தவிர்க்க தமிழ்நாட்டின் முதல்வரும், நீங்களும் உச்சபட்ச முயற்சி எடுக்க வேண்டும் என்று நாடே எதிர்பார்க்கிறது. முடியாமல் போனாலும் முயற்சித்துப் பார்த்தால் என்ன?

               – பெரியார் செல்வம், திருவள்ளூர்

ப:           ஒவ்வொரு மாநிலத்தில் ஒவ்வொரு வகையான சூழல் அரசியலில் நிலவும் நிலையில் நாம் நம் உயரத்தை உணர்ந்து, பக்குவமாக நடந்து கொள்வதே அறிவுடைமை.

கே:       பள்ளியில், ‘கலைஞர் அரங்கம்’ என்று பெயர் சூட்டியதற்கு ஏற்காடு எம்.எல்.ஏ., தரையில் அமர்ந்து தர்ணா செய்வதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

               – எஸ்.திவ்யா, கண்ணூர்பட்டி

ப:           வெட்கமும் வேதனையும் அடைகிறோம்.

கே:       அண்ணாவுக்கும் பெரியாருக்குமான உறவு அரசியலுக்கு அப்பாலும் உயிர்ப்புடன் நிலைத்தது எதனால்?

               – மகிழ், சென்னை

ப:           கொள்கை _ லட்சியத்தின் அஸ்திவாரத்தில் அமைந்த காரணத்-தாலும், அப்பா _ பிள்ளை பாசமும் கொள்கையும் இருந்ததாலுமே ‘அந்த வசந்தம்’ என்று பதவிக்குப் போன பிறகும் அண்ணாவால் எழுத முடிந்தது!

கே:       ‘நீட்’ தேர்வு விலக்கு, தமிழகத்திற்கு முறையாகத் தரவேண்டிய நிதியைப் பெறுவது போன்ற மாநில உரிமைகளுக்காக ஒருங்கிணைந்த பெரும் போராட்டத்தை அறிவித்து நடத்தினால் என்ன?

               – கு.நா.இராமண்ணா, சென்னை

ப:           பெருந்தொற்று பரவிவரும் சூழலில் மக்கள் உயிர்ப் பாதுகாப்பு முக்கிய-மாயிற்றே! மக்களைத் திரட்ட அது பெரும் இடையூறாக உள்ளதே!

கே:       பா.ஜ.க. ஆட்சியின் அனைத்து பாசிச செயல்பாடுகளுக்கும் ஒரே தீர்வு ஆட்சி மாற்றமே என்று எல்லோரும் ஒப்புக்கொள்ளும் நிலையில், அதை நிகழ்த்த மதச்சார்பற்ற சக்திகள் ஒற்றுமையுடன் செயல்படாமல் எப்படி சாத்தியம்?

               – சித்தன், புதுவை

ப:           நிச்சயம் காலம் இதற்குரிய பதிலைத் தரும்.

கே:       வ.உ.சி.யைவிட, தியாகம் செய்தவர்கள் எவர்? அப்படியிருக்க அவரைப் புறக்கணிக்கக் கூறப்படும் காரணம் சரியா?

               – அன்புச்செல்வன், சேலம்

ப:           ‘விடுதலை’ அறிக்கைகளைப் படியுங்கள்.

கே:       எந்தெந்தக் கட்சிகளுக்கு எந்த மாநிலத்தில் வெற்றி வாய்ப்பு உள்ளதோ அவர்களுக்கு மற்றவர்கள் விட்டுக்-கொடுத்து உடன்பாடு காண முடியாதா?

               – ஆறுமுகம், கூடுவாஞ்சேரி

ப:           இதுதான் சரியான ‘ஃபார்முலா’. அதை அரசியல் தொலைநோக்கோடு, தங்களது கட்சிகளை முன்னிலைப்படுத்தாமல் பொது எதிரியை முன்னிலைப்-படுத்தினால் நிச்சயம் நாட்டுக்கு விடியல் கிட்டும். ஒரே வழி அதுதான்!

கே:       செந்தில்வேல், ‘யு டூ புருட்டஸ்’ மைனர், அதர்மம் மனோஜ் இவர்களின் கொள்கைத் தெளிவு பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அவர்களை திராவிட கட்சிகள் ஒழுங்குப்படுத்தி பயன்-படுத்தினால் என்ன?

               – மருதன், புழல்

ப:           கட்சி முத்திரைகள் இல்லாமல் சுதந்திரப் பறவைகளாகவே அவர்கள் சிறகடிக்-கட்டும்! பலன் அதிகம் கிட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *