உடல் நலம் : மாதுளையின் மகத்துவம்

செப்டம்பர் 1-15,2021

நிறைய மருத்துவ குணங்களும், பிளேக், புற்றுநோய் போன்றவற்றை குணமாக்கும் ஆற்றலும் கொண்டது.

¨           உடலில் நைட்ரிக் ஆக்ஸைடு (Nitric oxcide) என்னும் தனிமம் குறையும்போது மன அழுத்தம் ஏற்படும். மாதுளை ‘நைட்ரிக் ஆக்ஸைடு’ அளவை அதிகரிக்கும் தன்மை கொண்டது. இதை உண்பதால் மன அழுத்தம் குறையும்.

¨           மாதுளையில் உள்ள எல்லஜிக் அமிலம் (Ellagic Acid) சூரிய வெப்பத்தால் தோலில் ஏற்படும் கருமையையும், தோல் புற்று நோயையும் தடுக்கும்.

¨           நாளும் உண்பதால் மூளையில் உள்ள நரம்பியல் கடத்திகள் இயற்கையாகவே தன் ஆற்றலை அதிகரித்து, மூளையைச் சுறுசுறுப்பாக்கும். நினைவாற்றலை அதிகரிக்கச் செய்யும்.

¨           முதுமையைத் தள்ளிப் போடும் பெரும்பாலான ‘ஆன்டிஏஜில்’ பாகு மாதுளம் பழத்தின் கொட்டைகளில் இருந்துதான் தயாராகிறது. பழமாகச் சாப்பிடும்போது அதைவிட அதிக பலன்கள் கிடைக்கும்.

¨           அயல்நாடுகளில் பிறந்த குழந்தையின் மூளையில் எந்தப் பாதிப்பும் வராமல் தடுப்பதற்கு மாதுளம் பாகைத்தான் குழந்தைகளுக்கு கொடுக்கிறார்கள். கர்ப்பிணிப் பெண்கள் மாதுளம் பழச்சாறு குடித்துவர, குழந்தையின் மூளை வளர்ச்சி நன்றாக அமையத் துணை புரியும்.

¨           மாதுளை வயிற்றில் குவிந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்கும் தன்மை உடையது. செரிமானச் சிக்கல்களைச் சீராக்கி, உடல் எடை குறைவதற்கும், டைப் 2 வகை சர்க்கரை நோயைக் குறைப்பதற்கும் துணை புரியும்.

¨           திருமணமான பெண்களுக்கு கருவுறுதலில் சிக்கல் இருந்தால், ஹார்மோன் குறைபாடுகள் நீங்கி, கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கச் செய்யும்.

¨           மெனோபாஸ் காலங்களில் ஈஸ்ட்ரோஜென் உற்பத்தி குறைவதால், மூட்டுவலி மற்றும் எலும்புத் தேய்மானம் அதிகரிக்கும். இதுபோன்ற காலங்களில் பெண்கள்  மாதுளம்பழச் சாறு குடிக்கலாம். அது உடலில் ஈட்ஸ்ரோஜென் உற்பத்தியைத் தூண்டும். எலும்புகள் வலுப்பெற உதவும்.

¨           அண்மையில் நடந்த ஓர் ஆய்வில், ஆன்டி ஆக்ஸிடெண்ட் நிறைந்த மாதுளம் பழத்தை உண்பதால், ஈறுகள் மற்றும் பற்களில் மறைந்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் அழிகின்றன என்பதை நிரூபித்திருக்கிறார்கள் ஆய்வாளர்கள். ஸீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *