தலையங்கம்: என்று ஒழியும் இந்த மூடத்தனம்?

ஜனவரி 01-15, 2021

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக _ அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்களது வற்புறுத்தலின் காரணமாக, K. பிளான் (காமராஜ் பிளான்) என்பதை ஏற்று தமிழ்நாடு முதல் அமைச்சர் பதவியிலிருந்து விலகி பொறுப்பேற்றார்.

முதல் முறை பல வடமாநிலங்களில் சுற்றுப் பயணம் செய்துவிட்டு சென்னை திரும்பிய அ.இ.கா.க. தலைவர் காமராசர் அவர்கள், செய்தியாளர்களைச் சந்திக்கும்போது ஒரு அருமையான கருத்தை வெளியிட்டார்!

வடஇந்திய பல மாநிலங்களைச் சுற்றிப் பார்க்கச் சென்றுவிட்டுத் திரும்பினேன். அந்த மக்களுடைய மூடநம்பிக்கையும் அரசியல் தலைவர்களின் ஜோதிடப் பைத்தியமும் எவ்வளவு சீர்கேடான நிலையில் அவர்களை வைத்துள்ளது என்பதை நேரில் பார்த்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். அவர்களை எல்லாம் திருத்துவதற்கு ஒரு பெரியார் அல்ல; நூறு பெரியார் தேவை என்று முடிவுக்கு வந்தேன் என்று அந்தப் பேட்டியில் கூறினார்!

இப்போது அதுவும் காவிகளின் ஆட்சியான பா.ஜ.க. ஆட்சியில் அது பல மடங்கு உச்சத்திற்கு (Superlative degree யில்) மூடத்தனத்தின் முடைநாற்றம் சென்றுள்ளது என்பதற்கு கும்பமேளா நிர்வாண சாமியார்கள் நடமாட்டம், மாந்திரீகம் என்ற பெயரால் நரபலி உள்பட பெண் குழந்தைகளைக்கூட பலியிடுதல் போன்றவை எடுத்துக்காட்டுகளாக உள்ளன. அக்குழந்தைகளின் உடல் உறுப்புகளைத் தின்றால் குழந்தைப் பேறு இல்லாதவருக்கு குழந்தை பிறக்கும் என்று எண்ணிய காட்டுமிராண்டிக் காலத்திற்கு நம் நாடு போய்க் கொண்டே இருக்கிறது. காட்டுமிராண்டி யுகத்திற்கு நாடு சென்று தற்போது திரும்பித் கொண்டிருப்பது மகா மகா வெட்கக்கேடு.

மும்பையிலிருந்து 50 ஆண்டுகளுக்கு மேலாக புகழ்பெற்ற வார ஏடான ஆராய்ச்சிக் கட்டுரைகள் நிரம்பிய “Economic & Political Weekly,” 21.11.2020  இதழில் ஆசிரியருக்குக் கடிதங்கள் என்ற பகுதியில் வெளிவந்த அதிர்ச்சிக்குரிய செய்தி இதோ:

Effects of Superstitions

On the night of Diwali, 14 November 2020, a seven-year-old girl in Uttar Pradesh’s Kanpur district was kidnapped and sexually assaulted before she was murdered by two men, who were allegedly paid by one of their relatives to get the child’s liver for tantric practices. According to the police, as per media reports, the relatives had been childless since their marriage in 1999 and were of the view that tantric practices that included eating the girl’s liver would help them have a child.

The incident is a plain case of illiteracy, bad shamanism, damaged cognition and emotional instability. The acceptance of superstitions and trust in magic leads to the belief in paranormal healing claimed and normalised by fake shamans and believed by many. There are many sociological factors responsible for it—regional beliefs, local population structure and social influences—as well as the belief in the powers of paranormal beings in solving problems of human beings. There is a social construction of myths and mythical creatures and a belief in devils, demons, ghosts, djinns and evil spirits who demand human sacrifice to solve human problems. People believe that such practices are to be followed silently and not questioned or analysed on scientific lines. Resultantly, the practitioners of such faiths even exploit childless women sexually under the pretext of curing their infertility. More often than not, these practices even encourage witch-hunting and witchcraft trials that further abuse women. It is noteworthy to mention that every year, witch-hunting takes many innocent lives in India. Women are humiliated, sexually assaulted and even beaten to death.

The need of the hour is to ban such local shaman practitioners along with a thorough overhaul of the healthcare system of the country. Besides this, there is an urgent need for research on the “paranormal in India” as the paranormal has become almost real and normal now, well propagated by cinema and the horror content available online. Further, there should be studies on people’s obsession for black magic (sorcery) and why the masses in some Indian rural belts still resort to such practices either for treatment or to harm others. The government has to stop bad shamanism if not faith healing in its entirety, apart from addressing rural illiteracy and control of fake shamans.

– Adfer Rashid Shah,  New Delhi

இதன் தமிழாக்கம்:

2020, நவம்பர் 14 தீபாவளி அன்று, இரவில் உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூரில் 7 வயது சிறுமி  ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டார்,

அதன் பிறகு அந்தச்சிறுமியைக் கொடூரமாகக் கொலை செய்து கல்லீரல் வெட்டி எடுக்கப் பட்டது, தீபாவளி அமாவாசை அன்று சிறுமி ஒருவரின் கல்லீரலை வைத்து பூஜை செய்யும் நோக்கில் பணம் கொடுத்து இந்த கொடூர நிகழ்வு நிகழ்த்தப் பட்டுள்ளது.

திருமணமாகி நீண்ட ஆண்டுகளாகக் குழந்தை இல்லாத தம்பதியினருக்கு ஒரு சாமியார் ஒருவர் சிறுமியின் கல்லீரல் கொண்டுவந்து பூஜை செய்தால் குழந்தை பிறக்கும்  என்று கூறியதை அடுத்து சிறுமியின் கல்லீரலைக் கொண்டுவரப் பணம் கொடுத்து இந்தக் கொடூரச்செயல் செய்யப் பட்டுள்ளது.

தாந்திரீக முறையில் பெண் குழந்தையின் கல்லீரலைச் சாப்பிட்டால் குழந்தை பிறக்கும் என்கிற மூடநம்பிக்கையே இதற்குக் காரணம்

இந்த நிகழ்வு கல்வி அறிவற்ற சமூகத்தினர் எந்த ஒரு செயலையும் அறிவோடு சிந்திக்காமல் உணர்ச்சி மற்றும் பிறரது வார்த்தைகளில் அதிகம் நம்பிக்கை கொள்வார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு ஆகும்.

மூடநம்பிக்கைகளை ஏற்றுக்கொள்வதும், மந்திரத்தின் மீதான நம்பிக்கையும் மந்திரவாதிகள் என்று தங்களைக் கூறிக்கொள்பவர்களால் அறிவுறுத்தப்பட்ட கொடூரமான மனிதாபிமானமற்றசெயல்களுக்கு வழிவகுக்கிறது மற்றும் பலரால் நம்பப்படுகிறது.

மக்கள் நம்பிக்கை நம்பிக்கைகள், உள்ளூர் மக்கள் அவர்கள் சார்ந்த அமைப்புகள் அந்த அமைப்புகளின் நடவடிக்கை அதன் தாக்கங்கள் அதோடு மனிதர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அற்புத சக்திகள் மீதான நம்பிக்கையும் இவை போன்றவற்றை நம்புவதற்கு மேலே கூறிய காரணிகள் உள்ளன.

புராணங்கள் மற்றும் அதில் உள்ள கதைகள் கதாபாத்திரங்கள் போன்றவை தங்களின் பிரச்சினைகளைத் தீர்க்க உயிர்ப்பலி கேட்கிறது என்றும் பிசாசுகள்,  பேய்கள், தீய ஆவிகள் போன்றவைகளால் கெடுதல் நடக்கிறது இதற்குப் பலிகள் தேவை என்று நினைக்கின்றனர். கல்வியறிவற்ற மக்கள் இதை மூடநம்பிக்கை என்று எடுத்துக் கூறினால் அவர்கள் கேட்கமாட்டார்கள்

இத்தகைய நம்பிக்கைகளைப் பின்பற்றுபவர்கள் குழந்தை இல்லாத பெண்களை தங்கள்  பாலியல் வல்லுறவிற்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.  பெரும்பாலும் பில்லி சூனியம், மாந்திரீகம் போன்றவற்றுக்குப் பெண்கள் அதிகம் பயன்படுத்தப் படுகின்றனர். ஒவ்வோர் ஆண்டும், சூனியக்காரி என்ற பெயரில் இந்தியாவில் பல அப்பாவி பெண்கள் கொல்லப் படுகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது. வயது பாராமல் பெண்கள் அவமானப்படுத்தப்படுகிறார்கள், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள், அடித்துக் கொல்லப்படுகிறார்கள்.

இந்தியாவில் குறிப்பாகக் கல்வியறிவற்ற மாநிலங்களில் மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் கூட்டம் மதநம்பிக்கை மாய மந்திரம் மற்றும் புராணக் கட்டுக்கதைகளைக் கூறி மக்களை நம்பவைத்து அதன் மூலம் ஏதோ ஒன்று உங்களுக்கு நடக்கும் அல்லது நடக்கும் அனைத்துமே தீய சக்திகளின் தாக்கம் என்று கூறி மக்களை மூடர்களாக்குவது, இதன் மூலம் கொடூரமான நிகழ்வுகளைச் செய்ய வைப்பது போன்றவை இந்தியாவில் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது,

இதற்கான விழிப்புணர்வை ஊட்ட அரசு முன்வரவேண்டும், ஆனால், இங்குள்ள சில அரசுகள் இது போன்ற செயல்களுக்கு ஆதரவளிக்கும் விதத்தில் மதநம்பிக்கை தொடர்பானவை என்று கூறி குற்றமிழைத்தவர்களை மட்டும் தண்டிக்கும் நோக்கில் செயல்படுகிறது. அரசின் நடவடிக்கை இது போன்ற செயல்களைச் செய்பவர்களை மேலும் ஊக்கமளிக்கும் விதத்தில் தான் உள்ளது. அரசு தீர்க்கமான முடிவுகளை எடுத்து இது போன்ற கோடூரமான செயல்களைச் செய்யும் மாய மந்திரவாதிகள் என்றும், பில்லி சூனியம் எடுப்பவர்கள் என்றும், இதர கற்பனையான செயல்களாகச் சாத்தான்களை ஏவுகிறோம் என்று எல்லாம் கூறி மக்களை ஏமாற்றும் சாமியார்களை (ஷிமோன்) கடுமையான சட்டங்கள் கொண்டு கண்டிக்கவேண்டும்,

அதே நேரத்தில் மக்களுக்குக் கல்வியறிவைப் பெறச்செய்து விழிப்புணர்வை ஊட்டி இது போன்ற செயல்களிலிருந்து பாதுகாக்கவேண்டும்

அது மட்டுமா? சமூக வலைதளத்தில் வந்த மற்றொரு கேவலமான கேலிக்கூத்துச் செய்தி! அதுவும் இந்த

கோவிட்-19 உணவுப் பஞ்சகாலத்தில்.

“கோயில் அடித்தளத்திற்காக தோண்டப்பட்ட குழியில் 11,000 லிட்டர் பால், நெய் ஊற்றி வழிபாடு!’’

ராஜஸ்தானில் கோயில் கட்டுமான பணிக்காக தோண்டப்பட்ட குழியில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான பால் மற்றும் தயிரை ஊற்றி பக்தர்கள் வழிபாடு செய்துள்ளனர்.

ஜலாவர் மாவட்டத்தில் தேவநாராயண கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அங்கு நடந்த ஒரு நிகழ்வு தற்போது அனைவராலும் பேசப்படுகிறது. ஏனென்றால் கோயில் அடித்தளத்திற்காக தோண்டப்பட்ட குழியில் சுமார் 11,000 லிட்டர் பால், தயிர் மற்றும் நெய்யை ஊற்றி பூஜை செய்துள்ளனர்.

மொத்தமாக உள்ள 11,000 லிட்டரில், 1500 லிட்டர் தயிர், 1 குவிண்டால் நெய் அடங்கும். மற்றவை அனைத்தும் பால் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதற்காக ரூ.1.50 லட்சம் வரை செலவிடப்பட்டுள்ளது. இந்த நடைமுறை கடந்த காலத்தில் இருந்தே இருக்கிறதா என அப்பகுதி மக்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கட்டாயமாக இதனை செய்ய வேண்டிய அவசியமில்லை என்றாலும், ஓரிரு முறை இந்த முறை பின்பற்றப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடவுள் தங்களுக்காக நிறைய செய்யும் போது, அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தாங்கள் செய்தது மிகக் குறைவு தான் என்றும் தெரிவித்துள்ளனர். கடவுள் கால்நடைகளை பாதுகாப்பதால், அவைகளிடம் இருந்து கிடைத்த பாலை அடிக்கல் நாட்டும் போது நிலத்தில் ஊற்றி நன்றி தெரிவித்ததாகக் கூறியுள்ளனர். இந்தக் கோயில் கட்டுமானப் பணிக்காக ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து கோயில் முறைப்படி திறக்கப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் திருவண்ணாமலை தீபம் என்ற பெயரால் ஆண்டுமுழுதும் எத்தனை நாடா துணி, நெய் – எண்ணெய் டன் டன்னாக கொட்டி விளக்கெரித்தல் எவ்வளவு மூடத்தனத்தின் முகப்போவியம்!

இந்திய அரசியல் சட்டம் கூறும் 51ஏ கூறுகள்  (Articles) செயல்படும் முறையா? அனைத்து மக்களுக்கும் அறிவியல் மனப்பாங்கைப் புகட்ட வேண்டாமா?

இதைவிட தேசிய குற்றம் (National Crime) வேறு உண்டா?

மக்கள் பட்டினியால் வாடுகிறார்கள். இங்கே இப்படி விரயம் நாசம் எல்லாம்! நியாயந்தானா? பக்தர்களே சிந்தித்துப் பாருங்கள்!

‘பக்தி வந்தால் புத்தி போய்விடும்’ என்ற பெரியார் கூற்றுக்கு இதைவிட நல்ல எடுத்துக்காட்டு வேறு வேண்டுமா?

“கடவுளை மற; மனிதனை நினை” என்ற தந்தை பெரியாரின் அறிவுரை எவ்வளவு பொருள் பொதிந்தது என்பது இப்போதாவது புரிகிறதா?

 

–  கி.வீரமணி,

ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *