பெரியாரை அறிவோமா?

ஜூலை 16-31

1)    கஷ்டப்பட்டு இழிவுபடுத்தப்பட்டு பட்டினி கிடந்து துன்பப்படும் மக்களில் அநேகர், தங்கள் நிலைக்குக் காரணம் அநியாயமான அரசாங்கச் சட்டம், செல்வர்களின் சூழ்ச்சி, சோம்பேறிகளின் தந்திரம் ஆகியவற்றால் அடிமைப்படுத்தப்படுவதே என்பதை எதனால் உணருவதில்லையெனப் பெரியார் சொல்கிறார்?

அ)    தலைவிதியில் நம்பிக்கை ஆ)    முன் ஜன்மக் கர்மபலன் என்ற நம்பிக்கை
இ)    கடவுள் சித்தம், ஆண்டவன் கட்டளை அவ்வாறு செய்துவிட்டன என்று நம்புவது    ஈ)    மேற்சொன்ன எல்லாம்

2)    ஒங்வொரு காலத்திலும் பலாத்காரத்தில்  இறங்கித்தான் துலுக்கனும் காப்பாத்தினான், அவன் மதத்தை கிருத்துவனும் காப்பாத்தினான், அவன் மதத்தை இந்துக்கள் என்கிற பார்ப்பானும் (அவ்வாறே) காப்பாத்தினான் என்று சொல்லும் பெரியார் தமது இயக்கத்தையும் சுயமரியாதைக் கொள்கைகளையும் காப்பாற்றுவதை எதன்மூலம் சாதிக்கலாம் என்கிறார்?

அ)    பலாத்காரத்தால்    ஆ)    அரசாங்க ஒத்துழைப்புடன் இ) அறிவுத் தெளிவை மக்களுக்கு உண்டாக்குவதால்  ஈ)    பார்ப்பனரை அடக்குவதால்

3)    20. 6. 1956இல் பெரியார் தெரிவித்த கருத்து இது:  . . . . . இல்லையானால் மனித சமுதாயமே வேண்டாம் என்று தோன்றுகிறது.   எவை இல்லை என்றால் ?

அ.    சுயமரியாதை    ஆ) சுதந்திரம் இ)    கடமை உணர்வு    ஈ) ஒழுக்கமும் அன்பும்

4)    வருணாசிரம தர்மத்தை அடிப்படையாகக் கொண்டு, மக்களைப் பல ஜாதிகளாகப் பிரித்து வைத்து, ஏற்றத் தாழ்வைக் கற்பித்து, அதை அரசாங்க அடக்கு முறையால் நிறுவி, அவர்களிடையே சமுதாய ஒற்றுமையைக் குலைத்து, பார்ப்பனர்கள் தங்களுடைய ஆதிக்கத்தை உண்டாக்கிக் கொண்டார்கள்.  அதற்குக் காப்புகளாகவும் கவசங்களாகவும் அவர்கள் ஏற்படுத்திக் கொண்டார்கள் எனப் பெரியார் கூறுபவை எவை?

அ) மதமும் கடவுளும் அவைபற்றிய   மூடநம்பிக்கைகளும் ஆ)    தேசமும் தேசியமும்
இ)    வேத இதிகாச புராண தர்ம சாத்திரங்கள் ஈ)    மேலே சொன்ன எல்லாம்

5)    இந்தியாவில் நாலாம் ஜாதி (சூத்திரர்), அய்ந்தாம் சாதி (அவர்ணர், பஞ்சமர்) எனப்படுவோரின் பொருள் , செல்வாக்கு,  மதி, திறமை, ஊக்கம், உணர்ச்சி ஆகியவை முதன்மையாக எதற்குச் செலவிடப்பட  வேண்டும் என்பது பெரியாரின் விருப்பம் ?

அ) அறிவும் மானமும் பெறுவதற்கு ஆ) பிறவித் தாழ்வையும் இழிவையும் நீக்குவதற்கு இ) முற்போக்கும் வளர்ச்சியும் பெறுவதற்கு ஈ) மேலே சொல்லப்பட்ட எல்லாவற்றிற்கும்

6)    ஆத்திகனுக்கும்  நாத்திகனுக்கும் உள்ள உண்மையான வித்தியாசம் எதுவெனப் பெரியார் கூறுகிறார்?
அ)    ஆத்திகன் கடவுளை நம்புகிறான், நாத்திகன் மறுக்கிறான். ஆ)    புராணங்கள் கூறுவனவற்றை எல்லாம் உண்மை என்று நம்பவேண்டும் என்கிறான், ஆத்திகன் , நாத்திகன் அவற்றை அப்படியே ஒப்புக்கொள்ள மறுக்கிறான் இ)    ஆத்திகன் கோயிலுக்குச் செல்வான்;  நாத்திகன் செல்வதில்லை
ஈ)    ஆத்திகன் முன்னோர் சொல் கேட்பான்;  நாத்திகன் கேட்பதில்லை

7)    1931இல் விருதுநகரில் சுயமரியாதை வாலிபர் மாநாடு நடந்தது. அதில் மக்களுக்குச் சமத்துவமும் விடுதலை யும் அடையும்படி செய்யமுடியாதவர்களைக் குறித்த ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவர்கள் யாவர்?

அ)    வர்ணாசிரமத்திலும், கடவுள் செயல்
என்பதிலும் நம்பிக்கைகொண்டிருப்பவர்கள்.

ஆ)    காங்கிரசுக்காரர்கள்     இ)    மதவாதிகள் ஈ)    ஆங்கில ஆட்சியாளர்கள்

8)    எந்தக் காரணத்தைக் கொண்டும் மனிதத் தன்மைக்கு மீறிய எந்தக் குணத்தையும் என்மீது சுமத்திவிடாதீர் கள்..இவ்வாறு பெரியார் சொல்லக் காரணம் என்ன?

அ)    மதங்களை நிறுவியவர்களோடு தாமும் இடம்பிடிக்க விரும்பவில்லை ஆ)    அப்படி ஓர் உயர்ந்த குணம் தமக்கு இல்லை என்றும் அவதாரபுருசர்களுக்கே உண்டு என்றும் நம்பினார் இ)    தெய்வீக ஆற்றலிலும் தன்மையிலும் மக்கள் நம்பிக்கை வைத்தால்,  அவர்களுக்குத் தங்கள் முயற்சியின்மீதும் அறிவின்மீதும் நம்பிக்கை இல்லாமல் போய்விடும்;  அதனால் சமுதாயச் சமத்துவமும் முன்னேற்றமும் தடைப்படும். ஈ)    தெய்வத்தின்மீது அவருக்கு இருந்த மதிப்பு

9)    நாம் மூடப்பழக்க வழக்கம் எனச் சந்தேகமற நன்றாய் அறிந்த சிறு விசயத்தை மாற்றிக் கொள்ளவேண்டுமானாலும் நடுங்குவது எதனால் எனப் பெரியார் சொல்கிறார் ?

அ)    சாமி, மதம், ஸ்மிருதி, புராணம் ஆகியவை தடைக்கல்லாய் இருக்கின்றன.
ஆ)    பெரியவர்கள் (முன்னோர்கள்) நடந்த வழியை மீறக்கூடாது என அஞ்சுகிறோம்
இ) ஜாதி, சம்பிரதாய முறைக்கு மாறாக நடக்கக்கூடாது என நினைக்கிறோம்
ஈ)    மேற்கூறிய எல்லாமும்

10)    பெரியார் தமது சொற்பொழிவுகளில் அடிக்கடி வற்புறுத்துவது யாது?

அ)    நான் சொல்லுவதை அப்படியே நம்பாதீர்;  அதன்படி நடக்க வேண்டுமென உடனே இறங்கிவிடாதீர்.
ஆ)    சொல்வதைச் சிந்திக்க வேண்டும்;  சரியா, தப்பா என்று ஆராய வேண்டும் ;  உங்களுக்கு எது சரி என்று பட்டதோ அதை ஒத்துக் கொள்ள வேண்டும்.
இ)    எந்தக் காரியம் சரியென்று அறிவுக்கும் அனுபவத்திற்கும் தோன்றுகிறதோ அதைச் செய்ய வேண்டும்
ஈ) மேற்கூறிய எல்லாமும்


ஜூலை 1-_15 இதழில் வெளியான பெரியாரை அறிவோமா கேள்விகளுக்கான விடைகள்

1.ஆ, 2.அ, 3.ஆ, 4.ஆ, 5.ஈ, 6.அ, 7.ஆ, 8.அ, 9.ஆ, 10.ஆ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *