புதிய கண்டுபிடிப்புகள்

மார்ச் 01-15
  • பூகம்பம் போன்ற இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்களைக் காப்பாற்றுவதோடு பல பயன்பாடுகளைக் கொண்ட ரெஸ்க்யூ ரோபோவை தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மூன்றாமாண்டு அய்.டி.துறை மாணவர்களான ரகுநாத், தமிழ்ச்செல்வன் கண்டுபிடித்துள்ளனர்.
  • ரோலிங் லேடர் மூலம் மின்சாரம் எளிய முறையில் தயாரிக்க முடியும் என்று சென்னை, ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த மெக்கானிக் கே.ஜி. சுதர்சன் கண்டுபிடித்துள்ளார்.
  • குடல் புற்றுநோயை நாய்கள் மோப்ப சக்தியால் கண்டறிகின்றன என்பது ஜப்பானில் லேப்ரடார் வகையைச் சேர்ந்த நாய்மூலம் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • தொண்டைவலி, சளித் தொந்தரவினை துத்தநாக மாத்திரை குணமாக்கும் என்று சண்டிகர் சி.டி. எஸ். ஆர். மருத்துவ ஆராய்ச்சி மய்யத்தினர் கண்டுபிடித்துள்ளனர்.
  • ஹைப்பர் டிரிக்ஸ் இன்போல்பஸ் நிறுவனம் தயாரித்துள்ள அதிநவீன அய்போன் (வீஜீலீஷீஸீமீ) செல்போனில் திருக்குறள் படிக்கும் மென்பொருளைத் தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா வெளியிட்டுள்ளார்
  • மனிதனைப் போல உள்ள ரோபோ-வை உருவாக்கி மேன்னி எனப் பெயரிட்டுள் ளனர் அமெரிக்காவின் பாட்டலே ஆய்வுக்கூட நிறுவனத்தினர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *