செய்திக்கூடை

மார்ச் 01-15
  • சமச்சீர் கல்வித் திட்டத்தின்கீழ் அடுத்த ஆண்டு 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்குச் செய்முறைத் தேர்வு கட்டாயமாவதால், இந்த ஆண்டே 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்குச் செய்முறைத் தேர்வு நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
  • தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மருத்துவப் படிப்புக்குப் பொது நுழைவுத் தேர்வு இருக்காது என்று சட்டசபையில் அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
  • 2008 ஆம் ஆண்டு பெங்களூரில் நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக கைதான அப்துல் நசீர் மதானியின் ஜாமீன் மனுவினை பெங்களூர் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
  • பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பேநசீர் பூட்டோ கொலை வழக்கில் முன்னாள் அதிபர் முஷாரப்புக்கு எதிராக ஜாமீன் பெறமுடியாத பிடிவாரண்ட் உத்தரவினை மத்தியப் புலானய்வுத் துறை ராவல்பிண்டியில் உள்ள நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
  • தமிழ்நாட்டில் முதன்முறையாக 844 திருநங்கைகள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
  • ஜ    தெற்கு சூடானில் சண்டை நிறுத்தத்தை மீறிய தீவிரவாதிகளுடன் இராணுவம் நடத்திய மோதலில் 105பேர் உயிரிழந்துள்ளனர்.
  • எகிப்தின் எழுச்சியைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு நாடான ஈரான், வட ஆப்ரிக்க நாடான லிபியா, அரபு தீபகற்ப நாடான ஏமன், வளைகுடா நாடான பக்ரைன் ஆகியவற்றிலும் அரசுகளுக்கு எதிரான மக்கள் கிளர்ச்சி தீவிரமடைந்துள்ளது.
  • செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்வதற்கான கியூரியாசிட்டி (curiosity)  என்ற ஆய்வு ஊர்தியினை அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
  • வீணாகும் வெப்பத்திலிருந்து மின்சாரம் தயாரிக்கும் முயற்சியில் முன்னேற்றம் கண்டுள்ளனர் இங்கிலாந்து நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.
  • தமிழ்நாட்டில் காலாவதியான மருந்து விற்பனை செய்து குண்டர் சட்டத்தில் கைதானவர்களை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *