இவர்கள் பகுத்தறிவாளர்கள்

மார்ச் 01-15

பென் & டெல்லர்

பெயர் : பென் & டெல்லர் (Penn Jillette & Raymond Joseph Teller).

பிறப்பு : பென் (05.03.1955), டெல்லர் (14.02.1948).

நாடு : சான் பிரான்சிஸ்கோ (San Fransisco), அமெரிக்கா.

துறை : மாய வித்தை, திரைத்துறை, இசைத் துறை, எழுத்து, மேடை நகைச்சுவை, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அடங்கிய பொழுதுபோக்குத் துறை.

சிறப்பு : பென் அண்டு டெல்லர் என்ற ஆங்கிலத் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் உலகப் புகழ் பெற்றார்கள்.

கடவுள்களின் பெயரால் ஏமாற்றும் மதவாதிகளைத் தோலுரித்தும், மூட நம்பிக்கைகளை அம்பலப்படுத்தியும் நிகழ்ச்சிகளை வழங்கியவர்கள். இந்த நிகழ்ச்சிகளில் அறிவியல் விளக்கங்கள், கடவுள் மறுப்பு ஆகிவையும் இணைந்திருந்ததால் இவர்கள் பெரும் பிரபலத்தைப் பெற்றனர். கடவுள் மறுப்பு மற்றும் இயற்கைவாத அமைப்பான பிரைட்ஸ் அமைப்பின் ஆதரவாளர்கள்.

பென் யாருக்கு நினை வொப்பம் (autograph) எழுதினாலும் “கடவுள் இல்லை” (There is no god) என்று எழுதியே கையொப்பம் இடுகிறார்.

பணி : மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கல்வி நிலையத்தில் (Massachusetts Institute of Technology)  கௌரவ விரிவுரையாளர்களாகப் பணியாற்றினார்கள்..

பெற்ற விருதுகள் : 2005ஆம் ஆண்டுக்கான ரிச்சர்ட் டாக்கின்ஸ்  விருது.

2001ஆம் ஆண்டுக்கான ஹக் எம். ஹேப்னர் ஃபர்ஸ்ட் அமெண்ட்மெண்ட் விருது (Hugh M. Hefner First Amendment Award). புல்ஷிட் (Bullshit!) என்ற தொலைக்காட்சித் தொடருக்காக, 2004ஆம் ஆண்டுக்கான  ரைடர்ஸ் கைட் ஆஃப் அமெரிக்கா விருதினைப் (Writers guide of America) பெற்றனர்.

நாத்திக பஞ்ச் : பைபிளில் இருக்கும் சம்பவங்களும், கதாபாத்திரங்களும் முற்றிலும் கற்பனைக்காக அர்ப்பணிக்கப்பட்டது.

அதில் உள்ளது போல ஏதாவது நடந்தால் அது தற்செயலாக நடப்பதே ஆகும்.

– புருனோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *