பதிவுகள்

ஜனவரி 16-31
  • ஈரானில் டிச 20 இல் 6.5 அலகுகளாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
  • முல்லைப் பெரியாறு அணையில் அய்வர் குழுவினர் டிச 21 இல் ஆய்வினை மேற்கொண்டுள்ளனர்.
  • அணுசக்தி, மின்சார உற்பத்தி உள்ளிட்ட 30 புதிய ஒப்பந்தங்களில் இந்தியாவும் ரஷ்யாவும் டிச 21 இல் கையெழுத்திட்டுள்ளன.
  • அணு ஆயுதங்களைச் சுமந்து, 350 கி.மீ. தூரம் சென்று தாக்கக்கூடிய பிருத்வி – 2 ஏவுகணைகள் ஒரிசாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து டிச 22 இல் வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது.
  • காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல் தொடர்பாக, சுரேஷ் கல்மாடியின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் டிச 4 இல் சி.பி. அய் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
  • பாகிஸ்தானில் பெண் மனித வெடிகுண்டு டிச 25 இல் நிகழ்த்திய தாக்குதலில் 46 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • சென்னையில், தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை முதல் அமைச்சர் கலைஞர் டிச 27 இல் தொடங்கி வைத்துள்ளார்.
  • சென்னை மாநகராட்சி 200 வார்டுகளாக விரிவுபடுத்தப்பட்ட தீர்மானம் டிச 30 இல் நடைபெற்ற மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் வலுவாக உள்ள உல்பா தீவிரவாத இயக்கத் தலைவர் அரபிந்த ராஜ்கோவா டிச 30 இல் ஜாமீன் கிடைத்து ஜன 1 இல் விடுதலை செய்யப்பட்டார்.
  • பிரேசில் நாட்டின் முதல் பெண் அதிபராக டில்மா ரவுசப் ஜன 1 இல் பொறுப்பேற்றுள்ளார்.
  • பாகிஸ்தான் அரசு, நீதித்துறையுடன் கொண்டிருந்த மோதல் போக்குக்கு முடிவுகட்டும் வகையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்கான சட்டத்திருத்தத்தில் அதிபர் சர்தாரி ஜன 2 இல் கையெழுத்திட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *