வரலாற்றுச் சுவடுகள் – கடைசிக் கட்டம்

அறிஞர் அண்ணா தீகர்கள், தமக்கு ஓர் வாய்ப்புக் கிடைத்த விட்டதாகக் கருதிக் களிப்படைகிறார்கள். நாட்டுக்குக் கிடைத்துள்ள விடுதலையைத், தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு, சரிந்துபோன தமது செல்வாக்கை மீண்டும் புதுப்பித்துக்-கொண்டு வாழலாம் என்று மனக்கோட்டை கட்டுகிறார்கள். இதற்காக, இப்போது, சாஸ்திரிகளும், கனபாடிகளும், தமிழ் இனத்தவரான சில வைதிகர்களும், ஓயாமல், சளைக்காமல், ‘பண்டைப் பண்பாடு’ என்பது பற்றிப் பேசுகின்றனர்.சுயாட்சியை அடைந்துவிட்டோம். எனவே நாம் நமது பரம்பரைப் பண்பாட்டைப் புதுப்பிக்க வேண்டும் என்று, பேசுகின்றனர். பிரிட்டிஷ் பிடி நீங்கியதும், இதுபோன்றதோர் முயற்சி […]

மேலும்....