மதத்திலிருந்து விடுதலை

– முனைவர் வா.நேரு  தந்தை பெரியார் அவர்களின் 50-ஆம் ஆண்டு நினைவு நாள் 2023, டிசம்பர் 24, தந்தை பெரியார் அவர்களின் தொலை நோக்குப் பார்வையை எண்ணிப் பார்க்கிறபோது நாம் வியப்படைகிறோம்.மற்றவர்களெல்லாம் நாட்டின் விடுதலை என்று பேசிக்கொண்டிருந்தபோது, ஜாதியிலிருந்து விடுதலை, மதத்திலிருந்து விடுதலை, அடிமைத்தனத்திலிருந்து பெண்களுக்கு விடுதலை என்று சிந்தித்து அருந்தொண்டாற்றி யவர் தந்தை பெரியார் அவர்கள். மனித சமுதாயத்தின் பாதியளவு உள்ள பெண்களின் வாழ்வைப் பெரும் துன்பமாக்கும் வேலையை இன்றைக்கும் மதங்கள் செய்து கொண்டிருக்கின்றன. அண்மையில் […]

மேலும்....

கணினி பெரியதா? சுயமரியாதை பெரியதா?

… முனைவர் வா.நேரு … டிசம்பர் 2. சுயமரியாதை நாள். தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பிறந்த நாள். நாமெல்லாம் மகிழ்ச்சியாகக் கொண்டாடும் நாள். தந்தை பெரியாருக்குப் பின் ,அவரின் இயக்கம் இருக்காது, அவரின் கொள்கைகள் இருக்காது என்று நினைத்தவர்களுக்கு மத்தியில் தந்தை பெரியாருக்குப் பின் அவரின் இயக்கமும் அவரின் கொள்கைகளும் இன்னும் வலிமையாக இருக்கின்றன என்பதை நம் பரம்பரை எதிரிகளும் ஒத்துக்கொள்ளும் காலகட்டம் இது. தமிழ்நாட்டின் ‘திராவிட மாடல் ‘ ஆட்சிக்கு மட்டுமல்ல, […]

மேலும்....

உண்மையின் ஒளிச்சிதறல் பெரியார்!

… முனைவர் வா.நேரு … திராவிட இயக்கம் தம் கொள்கைகளை மக்கள் மத்தியில் பரப்ப, உணரச் செய்யப் பயன்படுத்திய கலை நாடகம். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர், சி.பி.சிற்றரசு, தில்லை வில்லாளன், எஸ்.எஸ்.தென்னரசு, கே.ஜி.இராதாமணாளன் எனத் திராவிட இயக்க நாடகப் படைப்பாளர்களின் பட்டியல் மிக நீளும். எதிர்ப்புகள் எத்தனை வந்த போதிலும் உண்மையைப் போதிக்கும் நாடகங்களை தமிழ்நாடு முழுக்க நடத்தினர். “இனி வரப்போகும் நாடக உலகமானது இதுவரை இருந்தது போலவே இல்லாமல், உண்மை […]

மேலும்....

கணினித் திரையிலா ? காகிதப் பக்கங்களிலா?

முனைவர் வா.நேரு மதுரையில் புத்தகத் திருவிழா அக்டோபர் 12-ஆம் தொடங்கி அக்டோபர் 22 வரை, 11 நாட்கள் நடந்து முடிந்திருக்கிறது. எதிர் எதிர்க் கருத்துகளைக் கொண்ட புத்தகங்களைக் கூட ஒரே இடத்தில் வாங்கக்கூடிய இடமாகப் புத்தகச் சந்தை திகழ்கிறது. இதனைப் போல தமிழ்நாட்டின் பல நகரங்களில் தொடர்ச்சியாக இந்தப் புத்தகத் திருவிழாக்கள் நடைபெறுவதும், மக்கள் அலை அலையாக வருவதும், புத்தகங்களை வாங்கிச்செல்வதும் பெரும் மகிழ்ச்சியை நமக்கு அளிக்கிறது. இலட்சக்கணக்கான புத்தகங்கள் கிண்டிலில் ஒரு கணினிக்குள் கிடைக்கின்றன. விரும்பியதை […]

மேலும்....

உணவும் வறுமை ஒழிப்பும்

முனைவர் வா.நேரு 1945ஆம் ஆண்டில் அக்டோபர் 16 அன்று உருவாக்கப்பட்ட அய்க்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் சார்பாக 1979ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற்ற 20ஆவது பொது மாநாட்டில், ஆண்டுதோறும் அக்டோபர் 16ஆம் நாளை உலக உணவு நாள் எனக் கடைப்பிடிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த உலகத்தில் உள்ள அனைவருக்கும் தரமான, ஊட்டச்சத்து உள்ள உணவுகளைக் குறைந்த விலையில் கொடுக்கவேண்டும் என்பது தான் இந்த உணவு நாளின் நோக்கமாகும். இந்தநாள் உலகம் […]

மேலும்....