மூளைக்குள் கருவி – முனைவர் வா.நேரு

அலெக்சாண்டர் கிரகாம் பெல் உலகம் மாறி இருக்கிறது. 200 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த மனிதன் இன்று உயிர் பெற்று வந்தால், இன்றைய உலகம் அவனுக்குப் புரியாது. அவ்வளவு புதிய புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் உலகத்தை மாற்றி இருக்கிறது. 1847 மார்ச் 3, தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரகாம் பெல் அவர்களின் பிறந்த நாள். 177 ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர். இன்று செல்பேசியை, தொலைபேசியை உபயோகிக்கும் பலருக்கு இவரின் பெயர் தெரியாது. ஆனால், உலகத்தின் மாற்றத்தில் மிகப்பெரும் பங்கு […]

மேலும்....

தனித்து-தலை நிமிர்ந்து நிற்கும் தமிழ்நாடு! – முனைவர் வா.நேரு

ஒரு நாடு முன்னேற வேண்டுமானால், வளர்ச்சியை நோக்கிப் பயணமாக வேண்டுமென்றால் அதற்கான அடிப்படைத் தேவை அமைதி, ஒற்றுமை. ஒற்றுமைக்கும், அமைதிக்கும் அடிப்படை ஒருவரை ஒருவர் மதித்தல். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் மனிதர்களை மனிதர்களாக மதித்து மரியாதை கொடுத்தல், அதன்மூலம் மரியாதையைப் பெற்றுக்கொள்ளுதல். இதற்கான அடித்தளத்தைத் தமிழ்நாட்டில் விதைத்தவர்,பரப்பியவர் தந்தை பெரியார் அவர்கள். அதற்கு அடிப்படையாக அமைந்தது சுயமரியாதை இயக்கம். அடுத்த ஆண்டு சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட இருக்கும் இந்த நேரத்தில் தமிழ்நாடு இந்திய […]

மேலும்....

தமிழ்நாடும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களும்

 – முனைவர் வா.நேரு ஆர்வம்தான் எல்லா முயற்சிகளுக்கும் அடிப்படை. ஆர்வம் தான் புதிய புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழி வகுக்கின்றது. ஆர்வம் தான் புதிய புதிய பாதைகளைக் காட்டுகிறது. ஆர்வத்தின் அடிப்படையில்தான் புதிய புதிய சிந்தனைகள் தோன்றுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டின் ஆர்வம், திராவிட மாடல் அரசின் ஆர்வம் ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்னும் நோக்கத்தைக் கொண்டது. இருக்கும் வாய்ப்புகளை அனைவருக்கும் பகிர்ந்து அளித்து அனைவரையும் உயர்த்துவது என்னும் உயர்ந்த நோக்கம் கொண்டது. புத்தொழில் முனையும் (ஸ்டார்ட் அப்) செயல்பாட்டுத் […]

மேலும்....

இந்திப் பாம்பும் தடியெடுக்கும் தமிழ்நாடும்

முனைவர் வா.நேரு “மொழி என்பது உலகப் போட்டி போராட்டத்துக்கு ஒரு போர்க் கருவியாகும்” என்றார் தந்தை பெரியார். வர்ணத்தின் அடிப்படையில் ஜாதிக்கொடுமையால் படிக்கக்கூடாது என்று தடுக்கப்பட்ட சூத்திரர்களும் பஞ்சமர்களும் இன்றைக்கு உலகப் போட்டியில் வெற்றி பெறுவதற்கு, தாங்களும் சுயமரியாதை உணர்வு மிக்க மனிதர்களாக ஆவதற்கான கருவியாகத் தந்தை பெரியார் வழியில் கல்வியைக் கையில் எடுத்திருக்கிறார்கள். தாங்கள் படித்து முன்னேறுவது மட்டுமல்ல, தங்களைப் போல இருக்கும் ஒடுக்கப்பட்ட மாணவர்கள் முன்னேறுவதற்கான வழிகாட்டுதல்களையும் கொடுப்பவர்களாக மாறுகின்றார்கள். ஆங்கிலேயர் ஆட்சியில் தாங்கள் […]

மேலும்....

அறிவியல் தரும் வாய்ப்புகள்

— முனைவர் வா.நேரு — “இன்று உலகத்தின் வேறு பல பாகங்களில் உள்ளவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பல அற்புதங்களும், அப்பாகங்கள் அடைந்துள்ள முற்போக்குகளும் முதலாகியவை எல்லாம் -அந்நாட்டவர் பழையவற்றோடு திருப்தி அடைந்து, அதுவே முடிவான பூரண உலகம் என்று கருதி அப்பழையவற்றையே தேடிக் கொண்டு திரியாமல், புதியவற்றில் ஆர்வம் கொண்டு நடுநிலை அறிவோடு முயற்சித்ததன் பலனாலேயே ஏற்பட்டவை ஆகும். அவை இன்று எல்லா மக்களாலும் ஆதரவோடு அனுபவிக்கப்படுகின்றன. ஆகவே இதை உணர்ந்தவர்கள்தாம் இனிச் சில நூற்றுக்கணக்கான ஆண்டுகளில் எப்படிப்பட்ட […]

மேலும்....