வரலாற்றுச் சுவடுகள் – பம்பாயில் பார்ப்பனர் கொடுமை

“மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா” என்பது ஓர் பழமொழி. அத்தகையதே நமது பார்ப்பனர்களின் தன்மையாகும். பல நூறு ஆயிரம் ஆண்டுகளாக பார்ப்பனரல்லாத பெருங்குடி மக்களை, தூர்த்தர்களான பார்ப்பனர்கள் தங்களின் வயிற்றுப் பிழைப்பைக் கருதி உண்டாக்கிய சாஸ்திரங்களை ஆதாரமாக வைத்துக்கொண்டு அட்டை போல் உறிஞ்சி வந்தனர் – வருகின்றனர். எத்தகைய கேவலத் தொழிலையும் செய்யப் பின்வாங்காத இழிதகைமை படைத்த இப்பார்ப்பனக் கூட்டம் இந்துக்களின், அதாவது பார்ப்பனரல்லாதாரின் மதகுருவென்றும், சுபாசுப காரியங்களை நடத்தி வைக்கும் புரோகிதர்களென்றும் மக்களை ஏமாற்றி ஆதிக்கஞ் […]

மேலும்....

மதத்தைப் பற்றிய விபரீதம்

மத சம்பந்தமான புரட்டுகளை நாம் வெளியாக்கிக் கண்டித்து வருவதில் வைதிகக் கொள்கையுடைய பார்ப்பனரல்லாதாரிலே அநேகருக்கு மனவருத்தம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது. அதற்கேற்றாற்போல் மதத்தின் பேரால் வயிறு வளர்க்கும், பார்ப்பனர்களும் நம்மைப்பற்றி இம்மாதிரி ஆசாமிகளிடம் விஷமப் பிரச்சாரமும் செய்து வருவதால், அவசரப்பட்டு மிகவும் விபரீதக் கொள்கைக்கும் மூட வழக்கங்களுக்கும் கட்டுப்பட்டவர்களும், “பழக்கம்”, “பெரியோர் போன வழி” என்கிற வியாதிக்கும் ஆளானவர்களும் இம்மாதிரி விபரீதமாகக் கருதி வருத்தப்படுவதில் நமக்கு ஆச்சரியம் ஒன்றும் தோன்றவில்லை. தனவைசிய நாடு என்கிற நாட்டுக்கோட்டை செட்டியார்கள் […]

மேலும்....

வரலாற்றுச் சுவடுகள்

வருணாசிரமத்தைப் பற்றி மகாத்மாவின் குழப்பம் தஞ்சையில் மகாத்மா சில பார்ப்பனரல்லாத கனவான்களிடம் பேசிய பிறகு, தான் பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார் விஷயமான பூசலைப்பற்றி முன்னையை விட அதிகமாகத் தெரிந்து கொண்டதாக ஒப்புக்கொண்டு அதற்குமேல் வருணாசிரமத்தைப் பற்றிப் பேசியிருக்கிறார்:- அவ்வாறு பேசியிருப்பது, தேசியப் பார்ப்பனரல்லாதார் என்போர் பார்ப்பனரை விடுவதற்கும் தைரியமில்லாமல், பார்ப்பனரல்லாதாரை விடுவதற்கும் தைரியமில்லாமல் இரண்டுபேரையும் ஏமாற்ற நினைத்துக் கொண்டு, அங்கொருகால் இங்கொருகாலாக வைத்துக்கொண்டு இருப்பது போல், மகாத்மாவின் பிரசங்கமும் இரண்டு பேரையும் ஏமாற்ற முயற்சிப்பதாகவே காணப்படுகிறது. அதில் […]

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

பார்ப்பனர் அல்லாதாருக்கு நான் சொல்வது என்னவென்றால், தலைவர் பெரியாரிடத்தில் முழுநம்பிக்கை வைத்து மதித்து நடந்துகொள்ளுங்கள்’’ என்று அம்பேத்கர் அறிவுறுத்தினார் என்பது உங்களுக்குத் தெரியுமா? (‘குடிஅரசு’ 30.9.1944)

மேலும்....