சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்…

பெரியாரின் கனவெனும் பாத்திரத்தில் நிரம்பிய துளிகள் நாங்கள்! நூல் குறிப்பு : நூல் பெயர் : மரபுகளை உடைப்பவள் ஆசிரியர் : கௌதமி தமிழரசன் வெளியீடு : கலப்பை பதிப்பகம் பக்கங்கள் : 144 விலை : ரூ.200/- மேலோர் கீழோரும் உண்டோ? உயர்வும், தாழ்வும் பிறப்பினாலோ? குணமது குற்றமானால் கீழோர்_ இங்கே குடியதும் ஒன்றே… அது மானுட இனமே! வாழும் உரிமையும் அனைவர்க்கும் சமமே! கருவறை தொழில் மட்டும் போதும் என்றே திரிகின்ற பேதைகள் அல்லர் […]

மேலும்....

நான் விஞ்ஞானியானதற்குப் பின்புலம் தந்தை பெரியாரின் சிந்தனைகளே!

– விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை  ஞாயிறு மாலைப் பொழுதில் பெரியார் விழாவில், பெரியாரை நினைந்து போற்றும் வரலாற்று நிகழ்வைப் பார்த்தோம். பூபாலன் அவர்கள் பேசினார்கள். ஆங்கிலத்திலும், தமிழிலும் மிகச் சிறப்பாக உரையாற்றினார்கள். ‘பெரியார் விருது’ வாங்கிய திரு. பொன் சுந்தரராசு அவர்களுக்கும், மழலை மொழியில் பேசிய சிறு குழந்தைகளுக்கும் என்னுடைய வாழ்த்துகளையும், வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைக்கு இது என்னுடைய இரண்டாவது உரை சிங்கப்பூரில். இதற்குமுன் எழுத்தாளனாகப் பேசினேன். இப்பொழுது இங்கே பறந்து பறந்து வந்து, ஒரு […]

மேலும்....

மாநில உரிமை  – இறுதிப் பேருரையின் மய்யப் புள்ளி

– வெற்றிச்செல்வன்  தந்தை பெரியார் 19.12.1973 அன்று ஆற்றிய இறுதிப் பேருரை அவரது மரண சாசனமாகக் கருதப்படுகிறது. சென்னை தியாகராய நகரில் நடந்த தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டின் தீர்மானத்தை விளக்குவதற்கான கூட்டத்தில் இவ்வுரை ஆற்றப்பட்டது. தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாடு பெரியார் திடலில் 1973ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 8, 9 ஆகிய நாட்களில் நடைபெற்றது. மேற்படி மாநாட்டின் தீர்மானங்கள் 09.12.1973 நாளிட்ட ‘விடுதலை’ இதழில் வெளியிடப்பட்டுள்ளன. “தமிழர் சமுதாய இழிவை ஒழித்திட […]

மேலும்....

வெள்ளப்பேரிடர் துயர் துடைக்க பெரியார் அறக்கட்டளை உதவி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை தலைமைச் செயலகத்தில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், பெரியார் மணியம்மை கல்வி அறப்பணிக் கழகம் மற்றும் பெரியார் கல்வி நிறுவனப் பணியாளர்கள் சார்பில் 10 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். உடன் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொருளாளர் வீ.குமரேசன் ஆகியோர் உள்ளனர்.(11.12.2023)

மேலும்....

ஒப்புவமை அற்ற சுயசிந்தனையாளர் பெரியார்!

– மஞ்சை வசந்தன் உலக அளவில் புகழ் பெற்ற சுயசிந்தனையாளர்களுள் தலைசிறந்தவர் தந்தை பெரியார். கல்வி நிலையங்களில் அதிகம் படிக்காதவர். ஆனால், தன் முயற்சியால் அதிகம் படித்தவர். அவர் படித்து அறிந்தவற்றைவிட பகுத்தறிந்தவையே அதிகம்! அவர் எதையும் ஏன்? எப்படி? எதற்காக? என்று சிந்திக்கத் தவறியதில்லை. சிந்தித்து சரியென்று கொள்ளாதவற்றைப் பின்பற்றியதும் இல்லை. அவரது குடும்பச் சூழலே அவருக்கு பலவற்றைக் கற்பித்தன. அவரது வீட்டில் இடைவிடாது நடைபெற்ற சொற்பொழிவுகள், படையல்கள் அவருக்கு, புராண, இதிகாச, வைதீகச் சடங்குகள் […]

மேலும்....