இயக்க வரலாறான தன் வரலாறு (311) கர்நாடகத்தில் வழக்கறிஞர்கள் மாநாடு! கி.வீரமணி

பிச்சாண்டார் கோயிலில் 31.12.2002 அன்று காலை 10:00 மணிக்கு பெரியார் படிப்பகம் திறப்பு விழா, பெரியார் பெருந்தொண்டர் பி.வி. இராமச்சந்திரன் அவர்களுக்கு 80ஆம் ஆண்டு நிறைவு விழா, ஜாதி ஒழிப்பு வீரர்களுக்குப் பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் மிகச் சிறப்பாக நடைபெற்றன. விழாக்களில் கலந்துகொண்டு, பி.வி. இராமச்சந்திரன் மற்றும் ஜாதி ஒழிப்பு வீரர்களுக்குப் பாராட்டுத் தெரிவித்து சிறப்புரையாற்றினோம்.        பெரியார் படிப்பகத்திற்கு பி.வி. இராமச்சந்திரன் அவர்களிடம் புத்தகங்கள் வழங்கும் ஆசிரியர் மற்றும் சோம. […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள் – மார்க்சியம் அறியா மண்டை வறட்சியின் வெளிப்பாடு!

1. கே: ஆளுநர் ஆர்.என். இரவி அவர்கள், “இந்தியாவைச் சிதைத்தது கார்ல் மார்க்ஸ் சிந்தனைகள்’’ என்று கூறியது பற்றித் தங்கள் கருத்து என்ன?                                                                             […]

மேலும்....

அரசு அலுவலகங்களில் கடவுள் பட நீக்க ஆணை தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்

தமிழ்நாடு மக்களின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணமே கல்வி, பகுத்தறிவு, ஜாதி, மத சார்பு இன்மையாகும். மக்களின் உரிமைக்கும் சமூக நல்லிணக்கத்தைக் காக்கும் வகையில் 1968ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தபோது அரசு அலுவலகங்களில் கடவுள் பட நீக்கம் ஆணை பிறப்பித்தார். அவ்வாணை இன்றைய நடைமுறையில் அரசு அலுவலகங்களில் அலுவலர்களால் பின்பற்றப்படாமல் கடவுள் படங்கள், சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இது அரசு ஆணை 7553166-2(29.4.1968)க்கு எதிரானது ஆகும். இந்த அரசாணையைப் பின்பற்றி அரசு அலுவலகங்களில் உள்ள […]

மேலும்....

அனைத்துலக பெண்கள் நாள் மார்ச் 8 – முனைவர் வா.நேரு

பெண்மக்கள் அடிமையானது ஆண் மக்களாலேயேதான் ஏற்பட்டது என்பதும், அதுவும் ‘ஆண்மை’யும் ‘பெண் அடிமையும் ‘கடவுளாலேயே ஏற்படுத்தப்பட்டதாக எல்லா ஆண்களும் கருதிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதும், அதோடு பெண் மக்களும் இதை உண்மையென்றே நினைத்துக் கொண்டு வந்த பரம்பரை வழக்கத்தால், பெண் அடிமைக்குப் பலம் அதிகம் ஏற்பட்டிருக்கின்றது என்பதும், நடு நிலைமைப் பெண்களுக்கும் ஆண்களுக்கும் யோசித்துப் பார்த்தால் விளங்காமல் போகாது’’ என்றார் தந்தை பெரியார். (“குடி அரசு’’ 22-.12-.1929) தந்தை பெரியாரின் சொல்லாடலைக் கவனியுங்கள்.தந்தை பெரியாரின் மேற்கண்ட உரைக்கு விளக்கம் […]

மேலும்....

சிவ லோகம் போறேளா!

திரைப்பட நடிகர் மயில்சாமி அவர்கள் அண்மையில திடீரென மறைந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மிகத் துயரமான செய்தி. நல்ல மனிதர். பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்திருந்தனர். அவரது மறைவு குறித்து ரஜினிகாந்த் அவர்கள்… “மயில்சாமி சிவராத்திரியில் இறந்தது தற்செயலான செயல் அல்ல. அது சிவன் போட்ட கணக்கு. தனது தீவிர பக்தரை தனக்கு உகந்த நாளில் சிவன் எடுத்துக்கொண்டார்!” என்று கூறியிருக்கிறார். இதைக் கேட்டதும் எனக்கு குத்தூசி குருசாமி அவர்களின் கட்டுரை ஒன்று நினைவில் வந்தது. […]

மேலும்....