அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (319)

முரசொலிமாறன் மறைவு! – கி. வீரமணி மத்திய அமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவரும் தி.மு.க., தலைவர் கலைஞர் அவளால் தனது ‘மனசாட்சி’ என்று அழைக்கப்பட்டவருமான, சகோதரர் ‘முரசொலி’ மாறன் அவர்கள் 23.11.2003 மாலை இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து வருந்தினோம். “அவரது மறைவு, தி.மு.க.விற்கும், அதன் தலைவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மாத்திரம் இழப்பு அல்ல; திராவிடர் இயக்கத்திற்கும் இது ஓர் ஈடுசெய்ய இயலாத இழப்பாகும். மாறன் அவர்கள் ஒரு பல்துறை ஆற்றலாளர். […]

மேலும்....

நிகழ்வு – சனாதனத்திற்கு எதிராய் வடலூரில் மாபெரும் மக்கள் எழுச்சி! – தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி

– தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் எழுச்சி உரை ஒரு குறுகிய காலத்தில், இந்த வடலூர் மாநகரம், இதுவரை காணாத ஓர் அற்புதமான மாநாட்டை அறிவார்ந்த கருத்துகளைச் சொல்லக்கூடிய மாநாட்டை – இன்னுங்கேட்டால், எதிர்காலத்தில் எப்படியெல்லாம் மாறுதல்கள் வரும் என்பதற்கான அடையாளத்தை, முன்பே சொல்லக்கூடிய அளவிற்கு இன்றைக்கு இந்த வாய்ப்பை உருவாக்கித் தந்திருக்கிறார்கள். நண்பர்களே, ஒன்றை உங்களுக்குச் சொல்லியாக வேண்டும். அவர்கள் தெரியாமல் பேசவில்லை – திட்டமிட்டு, திசை திருப்பவேண்டும் என்பதற்காகத்தான் அதைச் செய்திருக்கிறார்கள். […]

மேலும்....

டாக்டர் ஏ.இராமசாமி மறைவு: 17.7.1976

சர்.ஏ. இராமசாமி (முதலியார்) அவர்கள் நீதிக்கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே (1917) கட்சியில் இருந்தவர். 1918இல் டாக்டர் டி.எம்.நாயர் இங்கிலாந்து சென்று பார்ப்பனரல்லாதார் உரிமைக்கு போராடி மறைந்த நிலையில், கூர்ம வெங்கட் ரெட்டி (நாயுடு) அவர்களுடன் இணைந்து இங்கிலாந்து சென்று நீதி கட்சி சார்பில் வகுப்புவாரியான பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தி, அதற்கான சான்றுகளை பிரிட்டன் நாடாளுமன்றச் சீர்திருத்தச் செயற்குழு முன் சமர்ப்பித்தார். 1928 முதல் 1930 வரை சென்னை நகர மேயராகப் பணிபுரிந்தார். பிரிட்டன் அரசின் இந்தியத் துறை […]

மேலும்....

கட்டுரை – பா.ஜ.க. ஆட்சியில் நேர்மையாளர் படும்பாடு! – சரவண இராஜேந்திரன்

– சரவண இராஜேந்திரன் சஞ்சீவ் பட் மும்பை அய்.அய்.டி.யில் படித்தவர். 1988ஆம் ஆண்டு இந்தியக் காவல் பணிக்குத் தேர்வான அவர் குஜராத் மாநில காவல்துறையில் பணியாற்றி வந்தார். தன்னுடைய பணிக்காலத்தில் பல்வேறு சமூக சேவைகள் காவல் பணியோடு இணைந்து செய்ததற்கு பல விருதுகளை பெற்று உள்ளார். குஜராத் அய்.பி.எஸ் அதிகாரியான சஞ்சீவ் பட், 2002 கோத்ரா கலவரத்துக்கு முதல்வராக இருந்த மோடிதான் காரணம் என்றும், “இந்துக்கள் கோபத்தில் இருக்கின்றனர்; அவர்களது வன்முறையைத் தடுக்க வேண்டாம்’’- என முதல்வராக […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

சிதம்பரம் நடராசர் கோயிலை தமிழக அரசு தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர சட்டப்படி என்ன நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்?  1. கே: சமூக நீதியைக் காக்கத்தான் ஒன்றிய அரசு பொது சிவில் சட்டம் கொண்டு வருகிறது என்று மோடி அரசு கூறுவது பற்றி தங்கள் கருத்து என்ன? – இரா. குருமூர்த்தி, ஸ்ரீவில்லிபுத்தூர். ப : கடைந்தெடுத்த திரிபுவாதம் அவர் கூற்று. சமூக நீதி என்பது ‘அனைவருக்கும் அனைத்தும்.’ அதை முதலில் ஹிந்துலா கொடுக்கிறதா? ஜாதி- _ வர்ணமுறை _ […]

மேலும்....