கவிதை -அண்ணா நற்புகழ் என்றும் வாழும்!

– முனைவர் கடவூர் மணிமாறன் காலக் கொடையாய், காஞ்சி வழங்கிய ஞாலம் போற்றும் தலைவர் அண்ணா! இருமொழிக் கொள்கை இனிதே வகுத்தவர்; பெருமை ஒளிரத் தமிழ்நா டென்று பெயரைத் தந்தபே ரறிஞர் அண்ணா உயரிய கொள்கை உரத்தினர்; மாண்பினர் பண்பின் உறைவிடம்; பகுத்தறி வாலே கண்ணியம் கடமை கட்டுப் பாட்டினைத் தொண்டர்க் குணர்த்திய தொண்டறச் செம்மல்! திண்ணிய நோக்கினர்; திராவிடக் குரிசில்! பெரியார் குருகுலம் பயின்ற இவரோ நரியார் கூட்டம் நடுங்கவே தமது எழுத்தால் பேச்சால் எழுச்சி […]

மேலும்....

ஊ.பு.அ. சவுந்தரபாண்டியன் (பிறப்பு – 15.9.1893)

திரு. சவுந்தரபாண்டியன் அவர்கள் மதுரை மாவட்டம், பட்டிவீரன்பட்டியில், 15.9.1893இல் பிறந்தார். இவரின் பெற்றோர் திரு. அய்ய நாடார் – திருமதி. சின்னம்மாள் ஆவார்கள். மதுரை, விருதுநகர் ஆகிய ஊர்களில் பள்ளிப் படிப்பும், கல்லூரிக் கல்வியும் பயின்றார். இதன்பின் தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்துடன் தொடர்பு கொண்டு, அதன்வழி சுயமரியாதை இயக்கத்தில், பெரியார் அவர்களோடு இணைந்து செயல்படத் தொடங்கினார். வெறியோடு சுயமரியாதைக் கொள்கைகளைப் பின்பற்ற முனைந்த இவரை, 1929இல் செங்கற்பட்டு மாநாட்டுத் தலைவராக பெரியார் அவர்களும், இயக்கத்தின் முன்னோடிகளும் தேர்ந்தெடுத்தனர். […]

மேலும்....

பெண்ணால் முடியும்! – கட்டுகளைத் தகர்த்து கால்பந்தில் சாதிப்பீர்!

– முனைவர் வா.நேரு உலக மகளிர் கால்பந்துப் போட்டி 2023, ஜூலை 20ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 20ஆம் தேதி முடிந்திருக்கிறது. உலக கால்பந்து சம்மேளனம் (திமிதிகி) சார்பில் பெண்களுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடத்தப்படுகின்றன. அவ்வகையில் 2023-ஆம் ஆண்டின் உலகக்கோப்பைத் தொடரை நடத்துவதற்கு பல்வேறு நாடுகள் விண்ணப்பித்திருந்தன. அதில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா நாடும், நியூசிலாந்து நாடும் இணைந்து இந்தப் போட்டிகளை நடத்தினர். இந்தப் போட்டி உலகத்தின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது. 2023-ஆம் ஆண்டிற்கான உலக […]

மேலும்....

முகப்புக் கட்டுரை – சந்திரயான் – 3 வெற்றியும் மூடநம்பிக்கைத் தகர்ப்பும்!

– மஞ்சை வசந்தன் அண்மையில் சந்திரயான் 3 நிலவின் தென்பகுதியில் இறங்கி ஆய்வை மேற்கொண்டு வருவது விண்வெளி வரலாற்றில் நிலையான பதிவு ஆகும். ஆம்! நிலவின் தென்பகுதியில் விண்கலம் இறக்கிய முதல் நாடு இந்தியா என்ற பெருமை என்றைக்கும் நிலைக்கக்கூடியது. அறிவியல் வளர்ச்சி, கண்டுபிடிப்புகள், விண்வெளி ஆய்வுகள் பல வகையில் உலக வளர்ச்சிக்கும், நலத்திற்கும், பாதுகாப்பிற்கும் பெரிதும் பயன்படுகின்றன. உற்பத்திப் பெருக்கம், விரைவான போக்குவரத்து, தொலைத்தொடர்பு, தொலைக்காட்சி, மருத்துவ வளர்ச்சி, இயற்கையை எதிர்கொள்ளல் என்று எண்ணற்ற நன்மைகளை […]

மேலும்....

பெரியார் பேசுகிறார் –  கடவுளைப் பரப்புகிறவன் அயோக்கியன் என்பதற்கு விளக்கம்

– தந்தைபெரியார்  கடவுளைப் பரப்புகிறவன் எவனுமே “கடவுள் தத்துவத்திற்கு’’ ஏற்ப கடவுளைக் கற்பித்துக் கொண்டு பரப்புகிறவன், அல்லது பிரச்சாரம் செய்பவன், அல்லது கற்பித்துக் கொள்ளுபவன், அல்லது கடவுளுக்காக என்று கதைகள், புராணங்கள், இதிகாசங்கள், இலக்கியங்கள் எழுதினவன்கள், மற்றும் அதற்காக கோவில்கள் கட்டி அவற்றுள் உருவங்கள் வைத்தவன்கள், கடவுளுக்காக என்று பூசைகள், உற்சவங்கள், பண்டிகைகள் முதலியவைகளை நடத்துகிறவன்கள், செய்கிறவன்கள் யாவருமே நாண யத்தையோ, யோக்கியத்தையோ, ஒழுக்கத் தையோ ஆதாரமாக வைத்து கடவுளைப் பரப்புவதில்லை, நடத்துவதில்லை. “கடவுளுக்கு உருவமில்லை, குணமில்லை’’ […]

மேலும்....