Main menu
  • முகப்பு
  • வலைக்காட்சி
  • விடுதலை
  • முந்தைய இதழ்கள்
    • 2019
    • 2018
    • 2017
    • 2016
    • 2015
    • 2014
    • 2013
    • 2012
    • 2011
  • புத்தகம் வாங்க
  • Print
  • Email

பெர்ட்ரண்ட் ரஸல்

பிறந்த நாள்: 18.05.1872

உலகப் புகழ்பெற்ற நாத்திகரான பெர்ட்ரண்ட் ரஸல். சிறுவயதில் ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்டு இருந்தவர்தான். இதுபற்றி ரஸல் கூறுகிறார்:

“இளம் பருவத்தில் இருந்தபோது நான் ஆழ்ந்த மத உணர்ச்சி கொண்டவனாக இருந்தேன். கணிதம் நீங்கலாகவோ என்னவோ மற்ற எந்த ஒரு துறையைக் காட்டிலும் அதிகமாகவே மத விஷயத்தில் ஆர்வமுள்ளவனாகவே இருந்தேன். அப்படிப்பட்ட ஆர்வமே அதை நம்புவதற்குக் காரணம் உண்டா என்ற கேள்வியை ஆராயச் செய்தது. அதனால் அந்த ஆர்வம் அடிக்கடி அப்படித் தூண்டுவதில்லை. கடவுள், மரணமற்ற தன்மை பற்றி ஆராய்ந்தேன். ஒவ்வொன்றையும் ஆய்வு செய்ததில் இவற்றை நம்புவதற்குக் காரணம் ஏதுமில்லை என்று உணர்ந்தேன்’’ என்று குறிப்பிடுகிறார். மரணத்திற்குப் பிறகு நம் நிலை என்ன? மோட்சத்துக்கா, நரகத்துக்கா? என்ற கேள்வி மனிதனை சஞ்சலப்படுத்துகிறது. இது குறித்து ரஸல் கூறுகிறார்:

“மரணத்திற்குப் பிறகு உடல் சிதைகிறது என்பதை நான் அறிந்துள்ளேன். அவ்வாறு உடல் சிதைந்து அழிந்த பிறகும் மனம் மட்டுமே செயல்படுகிறது என்று எண்ணுவதற்குக் காரணம் இல்லை” என்று கறாராகக் கூறுகிறார் ரஸல்.

நான் ஏன் கிறித்தவன் அல்ல?  ( Why I am not a Christian? என்ற நூல் உலகப் புகழ் பெற்றது. கிறித்துவ உலகத்தில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியது. இந்நூலை தமிழில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளியிட்டுள்ளது. வளமான சிந்தனை உள்ளவர்கள்தான் இப்படிப் பலமாக சிந்திக்க முடியும். அப்படித்தானே!

செய்திகளை பகிர்ந்து கொள்ள

Submit பெர்ட்ரண்ட் ரஸல் in FaceBook Submit பெர்ட்ரண்ட் ரஸல் in Google Bookmarks Submit பெர்ட்ரண்ட் ரஸல் in Twitter Submit பெர்ட்ரண்ட் ரஸல் in Twitter

wrapper

Back to Top

© Copyright 2018 - All rights reserved. Designed and Hosted by Periyar Webvision.