Main menu
  • முகப்பு
  • வலைக்காட்சி
  • விடுதலை
  • முந்தைய இதழ்கள்
    • 2021
    • 2020
    • 2019
    • 2018
    • 2017
    • 2016
    • 2015
    • 2014
    • 2013
    • 2012
    • 2011
  • புத்தகம் வாங்க
Home -> முந்தைய இதழ்கள் -> 2017 -> Unmaionline -> 2011 -> மே 16-31 -> இவர் பகுத்தறிவாளர்
  • Print
  • Email

இவர் பகுத்தறிவாளர்

அரியான் செரின்

பெயர்    : அரியான் செரின் (Ariane Sherine)

பிறப்பு    : ஜூலை 3, 1980 (லண்டன்)

நாடு    : இங்கிலாந்து துறை    :    நகைச்சுவை எழுத்தாளர், பத்திரிகையாளர்

சிறப்பு: தன்னுடைய 21ஆவது வயதிலேயே பத்திரிகையாளர் ஆன இவர், த கார்டியன் (The Guardian),, தி சண்டே டைம்ஸ்(The Sunday Times), தி இண்டிபெண்டன்ட் (The Independent) போன்ற முன்னணிப்  பத்திரிகைகளில் கட்டுரைகளை  எழுதி வருகிறார்.

பி. பி. சி. (B.B.C)  நடத்திய டெலண்ட் நியு சிட்சொம் ரைட்டெர்ஸ் விருதுப் போட்டியில்  (Talent New Sitcom Writters Award) 2002ஆம் ஆண்டுக்கான இரண்டாம்  இடத்தைப் பெற்றார். CBBC மற்றும் CITV ஆகிய குழந்தைகள் தொலைக்காட்சிகளில் இவர் எழுதி ஒளிபரப்பான  தி ஸ்டோரி ஆப் டிரேசி பீகர்(The Story of Tracy Beaker),  தி நியூ ஒஸ்ட் விச் (The New Worst Witch) போன்ற நகைச்சுவை நாடகங்கள் இவருக்கு இங்கிலாந்து முழுவதும் பெரும் புகழைப் பெற்றுத் தந்தன.

இவருடைய எண்ணத்தில் உருவான நாத்திகப் பேருந்து இயக்கம் இங்கிலாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. THERE’S PROBABLY NO GOD. NOW STOP WORRYING AND ENJOY YOUR LIFE  என்ற விளம்பரம்  எழுதப்பட்ட பேருந்துகள் லண்டனை வலம் வந்தன. இந்த நாத்திகப் பிரச்சார இயக்கம் உலகப் புகழைப்  பெற்றது. இது இங்கிலாந்தில் தொடங்கி அய்ரோப்பாவில் உள்ள எல்லா நாடுகளிலும் பரவி  அமெரிக்கா, கனடா, பிரேசில், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கும் விரிவடைந்தது. இதற்காக இவர் சார்லஸ் பிராட்லா அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட தேசிய மதச்சார்பற்ற சங்கத்தின்(National Secularist society) 2009 ஆம்  ஆண்டுக்கான மதச்சார்பற்ற நபர் (Secularist of the Year) என்ற பட்டத்திற்குப் பரிந்துரைக்கப்பட்டார்.

RADIO 4 என்ற வானொலியில் வழக்கமாக மதப்பிரச்சாரம் செய்யப்படும் காலை நேர  இன்றைய சிந்தனை நிகழ்ச்சியில் மதங்களுக்கு மாற்றான புதிய சிந்தனைகளை வழங்கி வருகிறார். இங்கிலாந்து நாத்திகர் அமைப்புக்கு ஆதரவாக அரியான் செரின் செயல்பட்டு பல்வேறு பணிகளைச் செய்து  வருகிறார்.

நாத்திக குத்து

கடவுள் இல்லை என்றாகிவிட்டதே, பிறகு அதைப்பற்றி ஏன் கவலைப்பட வேண்டும், இனி எல்லோரும் அவர் அவர் வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவியுங்கள்.

- புருனோ

செய்திகளை பகிர்ந்து கொள்ள

Submit இவர் பகுத்தறிவாளர்  in FaceBook Submit இவர் பகுத்தறிவாளர்  in Google Bookmarks Submit இவர் பகுத்தறிவாளர்  in Twitter Submit இவர் பகுத்தறிவாளர்  in Twitter

உண்மையில் தேட

உண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா

wrapper

  • 2011 இதழ்கள்
  • 2012 இதழ்கள்
  • 2013 இதழ்கள்
  • 2014 இதழ்கள்
  • 2015 இதழ்கள்
  • 2016 இதழ்கள்
  • 2017 இதழ்கள்
  • 2018 இதழ்கள்
  • 2019 இதழ்கள்

Back to Top

© Copyright 2018 - All rights reserved. Designed and Hosted by Periyar Webvision.