Main menu
  • முகப்பு
  • வலைக்காட்சி
  • விடுதலை
  • முந்தைய இதழ்கள்
    • 2020
    • 2019
    • 2018
    • 2017
    • 2016
    • 2015
    • 2014
    • 2013
    • 2012
    • 2011
  • புத்தகம் வாங்க
Home -> Unmaionline -> 2020 -> நவம்பர் 01-15, 2020 -> கவிதை : சம(ய)க் குறிகள்

கவிதை : சம(ய)க் குறிகள்

நெறிகள் ஒன்றென்று

               நிகழ்த்தும் சமயங்கள்

குறிகள் வெவ்வேறாய்க்

               கோடிட்டுக் காட்டிவிடும்!

நெற்றியில் வெளிப்பூசல்;

               நித்தமும் உட்பூசல்!

உற்ற மதக்குறிகள்

               ஒவ்வொன்றும் தினப்பூசல்!

சமயக் குறிகளுக்குச்

               சமக்குறியே தெரியாதா?

சமயத் துறைகளுக்குள்

               சச்சரவே தீராதா?

காசைத் தந்தால் கடவுளுடன்

               கலந்துரை யாடல் நடக்கிறது!

ஆசைப் பட்ட பொருள்யாவும்

               ஆண்டவன் பெயரில் கிடைக்கிறது!

பகல் வேடங்கள் உள்ளவரை

               பக்தி விளம்பரப் பொருளாகும்;

நகல்கள் அப்பால் நகர்ந்தால்தான்

               நம்பிக் கைகள் உருவாகும்!

விதைமொழியே தமிழ்தானே!

கோடுயர்ந்த மலைகளிலே

கொடிமரங்கள் நட்டவனின்

வீடுகளே தமழ்மொழியை

விலக்கி வைக்கும் பெருங்கொடுமை!

 

வீட்டில் பழகும்மொழி

வேற்றுமொழி யானபின்பு

நாட்டு மொழியைப் பற்றி

நாம்பேசத் தகுதியுண்டா?

 

தாய்ப் பாலில் அந்நியமும்

தாலாட்டில் அயல்மொழியும்

நோய்போலப் பரவினால்

நலிந்துவிடும் தமிழ்ச்சாதி!

 

உலகமொழி அத்தனைக்கும்

ஊற்றுமொழி தமிழ்தானே!

வேற்றுமொழி அனைத்துக்கும்

விதைமொழியே தமிழ்தானே!

 

தமிழகம் உனது அன்னைநிலம்,

தமிழினம் உனது தண்டுவடம்;

தமிழ்உன் மூச்சின் மூலதனம் - நீ

தடைகள் தகர்க்கும் காளையினம்!

- கவிஞாயிறு தாராபாரதி

செய்திகளை பகிர்ந்து கொள்ள

Submit கவிதை : சம(ய)க் குறிகள் in FaceBook Submit கவிதை : சம(ய)க் குறிகள் in Google Bookmarks Submit கவிதை : சம(ய)க் குறிகள் in Twitter Submit கவிதை : சம(ய)க் குறிகள் in Twitter

உண்மையில் தேட

உண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா

wrapper

ஜனவரி 01-15, 2020

  • அப்படிப்போடு அப்படிப்போடு
  • அய்யாவின் அடிச்சுவட்டில் ....: இயக்க வரலாறான தன் வரலாறு (259)
  • ஆசிரியர் பதில்கள்:”குட்டி கார்ப்பரேட் ரங்கநாதய்யர்”
  • ஆய்வுக் கட்டுரை: புலவர் மாவண்ணா தேவராசனின் ‘பெரியார் பிள்ளைத் தமிழ்’ (2)
  • எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை! (69) : கோவில் நுழைவுப் போராட்டம் இன்றைய நிலை!
  • கட்டுரை: புத்தாண்டும் உழவர் போராட்டமும்
  • கவிதை : தமிழர் திருநாளில் உறுதி ஏற்போம்!
  • சிந்தனை: கேள்விகளின் நாயகர் நெய்வேலி க.தியாகராஜன்!
  • சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்: இதழாளர்
  • சிறுகதை: அப்பாவி விவசாயிங்க..!
  • தலையங்கம்: என்று ஒழியும் இந்த மூடத்தனம்?
  • பெண்ணால் முடியும்: குமரியின் முதல் பெண் அய்.பி.எஸ் பிரபினா
  • பெரியார் பேசுகிறார்: கடவுளைப் பற்றிக் கவலை வேண்டாம்!
  • மருத்துவம் :விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! (21)
  • முகப்புக் கட்டுரை : பண்பாட்டுப் படையெடுப்பை பகுத்தறிவால் முறியடிப்போம்!
  • மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்
  • வாசகர் மடல்
  • 2011 இதழ்கள்
  • 2012 இதழ்கள்
  • 2013 இதழ்கள்
  • 2014 இதழ்கள்
  • 2015 இதழ்கள்
  • 2016 இதழ்கள்
  • 2017 இதழ்கள்
  • 2018 இதழ்கள்
  • 2019 இதழ்கள்

Back to Top

© Copyright 2018 - All rights reserved. Designed and Hosted by Periyar Webvision.