Main menu
  • முகப்பு
  • வலைக்காட்சி
  • விடுதலை
  • முந்தைய இதழ்கள்
    • 2019
    • 2018
    • 2017
    • 2016
    • 2015
    • 2014
    • 2013
    • 2012
    • 2011
  • புத்தகம் வாங்க
Home -> Unmaionline -> 2019 -> ஜூலை 16-31 2019 -> அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா

பெண் விடுதலை நூலை பேராசிரியர் சபாபதி மோகன் வெளியிட மேனாள் அமைச்சர் கே.என்.நேரு, ஆசிரியரும் பெற்றுக் கொள்ள உடன் கவிஞர் கலி.பூங்குன்றன், கோ.கிருஷ்ணமூர்த்தி

அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் நூற்றாண்டு விழாவும், தந்தை பெரியாரின் அறிவுக்கருவூலப் படைப்பான  “பெண் விடுதலை’’ நூல் வெளியீட்டு விழாவும் திருச்சி பெரியார் நூற்றாண்டுக் கல்வி வளாகத்தில் நேற்று (7.7.2019) ஞாயிறு மாலை 6.15 மணியளவில் பெரியார் நூற்றாண்டுக் கல்வி வளாக பணித் தோழர்கள் கூட்டமைப்பின் சார்பில் வெகுநேர்த்தியுடன் நடைபெற்றது.

விழாவிற்குப் பெரியார் கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், நகரப் பிரமுகர்கள் என்று ஏராளமானோர் விழாவில் கலந்துகொண்டனர்.

மொழி வாழ்த்துடன் தொடங்கப் பெற்ற இவ்விழாவில் பணித் தோழர்கள் கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் கோ.கிருஷ்ணமூர்த்தி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

விழாவையொட்டி “தந்தை பெரியாரும் பெண் விடுதலையும்‘’ எனும் தலைப்பிலும் “அன்னை மணியம்மையாரின் தொண்டறம்‘’ எனும் தலைப்பிலும் மாணவிகளிடையே நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவிகள் வெகு சிறப்பாகப் பேசினர்.

மேனாள் அமைச்சர் கே.என்.நேரு

தந்தை பெரியாரின் அறிவுக்கருவூலமான பெண் விடுதலை’’ எனும் நூலின் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்ட மேனாள் தமிழக அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான கே.என்.நேரு அவர்கள் விழாவை வாழ்த்திப் பேசினார்.

இங்கு வெளியிடப்பட்டுள்ள அய்யாவின் இந்த அறிவுக் கருவூலமான நூலை மக்களிடத்தில் கொண்டு செல்ல நாங்கள் முயற்சிகளை மேற்கொள்வோம் என்று குறிப்பிட்டார்.

பேச்சுப் போட்டியில் பரிசளிப்பு

‘தந்தை பெரியாரும் பெண் விடுதலையும்‘ எனும் தலைப்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டி மற்றும் ‘அன்னை மணியம்மையாரின் தொண்டறம்‘ எனும் தலைப்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் பங்குபெற்று வென்ற மாணவர்களுக்கு விழாத் தலைவரும், பெரியார் கல்வி நிறுவனங்களின் தலைவருமான ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பயனாடை அணிவித்து, சான்றுகளையும், பரிசுத் தொகையையும் அளித்தார்.

பேராசிரியர் சபாபதி  மோகன்

தந்தை பெரியாரின் பெண் விடுதலை’’ நூலை வெளியிட்டு,  நெல்லை மனோன்மணியம் சுந்தரனார்’’ பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தர் சபாபதி மோகன் அவர்கள், தனது திருமணத்திற்குத் தலைமை தாங்கி நடத்திக் கொடுத்த தமிழர் தலைவர் ஆசிரியர் ஜாதி மறுப்பு _ தாலி மறுப்பு மற்றும் இராகுகால நேரத்தில் நடைபெற்ற எனது சுயமரியாதைத் திருமணத்திற்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் கொடுத்தார்கள் _ அந்த ஒரு தகுதியே அய்யாவின் இந்த நூலை வெளியிடுவதற்கான தகுதியை எனக்கு அளித்திருப்பதாக நான் கருதுகிறேன். துணைவேந்தராக நானிருந்த தெல்லாம் முக்கிய தகுதியாகாது என்று உணர்ச்சிப் பொங்கக் குறிப்பிட்டார்.

நாளெல்லாம் பேசலாம்!

750 பக்கங்களைக் கொண்ட தந்தை பெரியார் அறிவுக்கருவூலமான இந்நூலை மணிக்கணக்கில் அல்ல _ நாள் கணக்கில்  பேசிக்கொண்டே போகலாம். அரை மணிநேரத்தில் எடுத்துக் கூறுவது என்பது இயலாத காரியம். இந்த நூலில் முன்னுரையாக நம் ஆசிரியர் அவர்கள் 13 பக்க அளவில் எழுதியிருப்பது ஆய்வுப் பூர்வமானது _ அதனையே தனி நூலாகவும் வெளியிடலாம் என்றார்.

தமிழர் தலைவர் உரை

நிறைவாக உரையாற்றிய பெரியார் கல்வி நிறுவனங்களின் தலைவரும், திராவிடர் கழகத் தலைவருமான ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்,

“தந்தை பெரியாரைக் காத்து, அதன்மூலம் தந்தை பெரியாரின் தொண்டு தமிழர்களுக்குப் பெரும் அளவில் கிடைக்க வழி செய்த அன்னை மணியம்மையார் அவர்களின் போராட்டக் குணம் எத்தகையது என்பதற்கு ஒரு நிகழ்ச்சியை எடுத்துக் கூறினார்.’’

அன்னையாரின் ஆளுமைத்திறன்

ஜாதி ஒழிப்புப் போராட்டமான அரசமைப்புச் சட்ட எரிப்புப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான கழகத் தோழர்கள் மூன்றாண்டுவரை சிறைத்தண்டனை அனுபவித்தனர்.

திருச்சி மத்திய சிறை நிரம்பி வழிந்தது. திருச்சி சிறையில் வயிற்றுப் போக்குக் காரணமாக பட்டுக் கோட்டை இராமசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி ஆகிய இரு கருஞ்சட்டைத் தோழர்கள் மரணம் அடைந்தனர். அப்படி மரணம் அடைந்த தோழர்களின் உடலைக்கூட வெளியில் கொடுக்காமல், சிறைச்சாலைக்குள்ளேயே புதைத்துவிட்டனர்.

இந்தத் தகவலை அறிந்த அன்னை மணியம் மையார் அவர்கள் ஆவேசப் போர்க் குணத்தோடு பொங்கி எழுந்தார். பெரியாரும் சிறையில் இருந்த நேரம் அது.

திருச்சியிலிருந்து புறப்பட்டு சென்னையில் உள்ள முதலமைச்சர் காமராசர் இல்லத்திற்கு அவசர  அவசரமாகச் சென்று சந்தித்தார். ஜாதி ஒழிப்புக்காக சிறைக்குச் சென்ற திராவிடர் கழகத் தோழர்கள் மரணம் அடைந்திருக்கிறார்கள் _ அவர்களின் உடல்களைக்கூட உறவினர்களிடம் ஒப்படைக்காதது என்ன நியாயம்?’ என்று கேட்டார். உடனே முதலமைச்சர் காமராசர், உள்துறை அமைச்சர் பக்தவத்சலம் அவர்களிடம் கூறி, புதைக்கப்பட்ட இரு கருஞ்சட்டை மாவீரர்களின் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு, கழகத்திடம் ஒப்படைக்கப் பட்டன. அவசர அவசரமாக அந்த இரு உடல்களையும் அடக்கம் செய்வதில் காவல்துறையினர் கவனம் காட்டினர்.

சென்னையிலிருந்து அன்னை மணியம்மையார் அவர்கள் வரும்வரை இறுதி ஊர்வலத்தை அனுமதிக்கமாட்டோம் என்று உறுதியாக மறுத்துவிட்ட நிலையில், அம்மா அவர்களும் வந்து சேர்ந்தார்கள். ஊர்வலம் அன்னையார் தலைமையில் அமைதி ஊர்வலமாகப் புறப்பட்டுச் சென்றது.

குறிப்பிட்ட சாலை வழியாக இறுதி ஊர்வலம் சென்ற நேரத்தில், அந்த வழியாகச் செல்லக்கூடாது. வேறு வழியில் செல்லவேண்டும் என்று காவல்துறையினர் வற்புறுத்தினர்.

அதிகாரிகளிடம் அம்மா அவர்கள் எவ்வளவோ எடுத்துக் கூறியும், பிடிவாதமாக மறுத்தார்கள். அம்மா என்ன செய்தார்கள்? அவர்களுடைய ஆளுமை எத்தகையது என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஓர் அடையாளமாகும்.

ஆயிரக்கணக்கில் அணிவகுத்து வந்த கருஞ்சட்டைத் தோழர்களைப் பார்த்து, அப்படியே சாலையில் அமைதியாக உட்காருங்கள்’ என்று கட்டளையிட்டார். அவ்வளவுதான், அனைவரும் அமர்ந்து விட்ட நிலையில், காவல்துறையினர் வேறு வழியின்றி வழிக்கு வந்தனர்.

அம்மா அவர்கள் நினைத்தபடி திட்டமிட்ட சாலைகள் வழியே  இறுதி ஊர்வலம் சென்று, ஜாதி ஒழிப்புக்காக இன்னுயிர் ஈந்த அந்தக் கருஞ்சட்டை மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தி அடக்கம் செய்யப்பட்டது என்ற இயக்க வரலாற்று  வீர காவியத்தின் ஒரு அத்தியாயத்தை அணிபெற கழகத் தலைவர் எடுத்துச் சொன்னபோது, அன்னையாரின் ஆளுமையும், துணிவும், வீரமும் எத்தகையது என்பது எடுத்துக்காட்டுவதாக அமைந்ததிருந்தது.

மானுடம் மேன்மையுற...

அன்னையாரைப்பற்றி வெளிவராத தகவல்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவோம். மக்கள் மேன்மையுற அன்னையாரின் தொண்டும், தியாகமும் மக்களுக்கு வழிகாட்டும். அவர்கள் மேற்கொண்டது இல்லறமல்ல _ தொண்டறமே என்றார்.

 

செய்திகளை பகிர்ந்து கொள்ள

Submit அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா in FaceBook Submit அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா in Google Bookmarks Submit அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா in Twitter Submit அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா in Twitter

உண்மையில் தேட

wrapper

டிசம்பர் 01-15 2019

  • இயக்க வரலாறான தன் வரலாறு(239) : அமெரிக்காவில் டாக்டர் டட்லி ஜான்சன் எனக்கு இதய அறுவை சிகிச்சை 4 மணி நேரம் வெற்றிகரமாக செய்தார்!
  • அப்படிப்போடு
  • அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா? (57) : கடவுள் பெயரைச் சொன்னால் உயிர் போகாதா?
  • ஆசிரியர் பதில்கள் : சட்டம் குறட்டை விட்டுத் தூங்குகிறது!
  • உங்களுக்குத் தெரியுமா?
  • உணவே மருந்து
  • எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (49) : இருபது கேள்விகளும் எமது பதில்களும்
  • கவிதை : வியப்புமிகு ஆசிரியர்
  • கவிதை : ஆசிரியருக்குப் பிறந்த நாள் வாழ்த்து!
  • கவிதை : எம்தலைவ! நீங்களன்றி வழியே திங்கே?
  • கவிதை : வாயார - மன்மார - கையார வாழ்த்துவோம்!
  • சிந்தனை : மைல் கல்கள் கடவுள்களாகின!
  • சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்.... : கொஞ்சம் டார்வின் கொஞ்சம் டாக்கின்ஸ்!
  • சிறப்புக் கட்டுரை : உலகப்பன்!
  • சிறப்புக் கட்டுரை : நோபல் அறிஞர்களின் வரிசையில் தமிழர் தலைவர்
  • சிறப்புக் கட்டுரை : பெரியார் பாதையில் துணிவுடன் பயணிக்கும் ஆசிரியர் அய்யா!
  • சிறுகதை : வேதங்கள் சொல்லாதது
  • சுவடுகள் : திருக்குறளில் கடவுள் வாழ்த்தா?
  • தகவல் களஞ்சியம்
  • தடைகளை நொறுக்கிச் சரித்திரம் படைத்த பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா தொடக்க மாநாடு
  • தலையங்கம் : ஒத்த கருத்துள்ளோர் ஒன்றுசேர்ந்து ஈழத்தமிழர் உரிமை காக்க வேண்டும்!
  • நுழைவாயில்
  • நேர்காணல் : ஆசிரியரை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும்!
  • நேர்காணல் : ஆசிரியர் காலத்தில் திராவிடர் கழகம் உச்சத்தைத் தொட்டுள்ளது!
  • நேர்காணல் : ஆசிரியர் விருதுகளை விரும்பாதவர் ஆனால், அவர் 100 விருதுகளுக்கு உரியவர்!
  • நேர்காணல் : ஆசிரியர்க்கு அதிகம் கோபம் வரும் ஆனால், அது எப்போதும் நன்மை தரும்!
  • பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர்
  • பெரியார் பேசுகிறார் : முரண்பட்ட மூடநம்பிக்கைப் பண்டிகை “கார்த்திகைத் தீபம்”
  • மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! [2]
  • முகப்புக் கட்டுரை : இந்தியாவே எதிர்நோக்கும் இணையிலா வழிகாட்டி!
  • வாசகர் கடிதம்
  • 2011 இதழ்கள்
  • 2012 இதழ்கள்
  • 2013 இதழ்கள்
  • 2014 இதழ்கள்
  • 2015 இதழ்கள்
  • 2016 இதழ்கள்
  • 2017 இதழ்கள்
  • 2018 இதழ்கள்

Back to Top

© Copyright 2018 - All rights reserved. Designed and Hosted by Periyar Webvision.