Main menu
  • முகப்பு
  • வலைக்காட்சி
  • விடுதலை
  • முந்தைய இதழ்கள்
    • 2020
    • 2019
    • 2018
    • 2017
    • 2016
    • 2015
    • 2014
    • 2013
    • 2012
    • 2011
  • புத்தகம் வாங்க
Home -> Unmaionline -> 2019 -> மே 01-15 2019 -> ஆசிரியர் பதில்கள்

ஆசிரியர் பதில்கள்

கே:       ஜாதியின் பேரால் வன்முறையைத் தூண்டும் ஜாதிச் சங்கம் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் அடங்க வழி என்ன?

                - மகேஷ், சிவகாசி

ப:           1. அவர்களை அம்பலப்படுத்தி, பொதுமக்களைத் திரளச் செய்யும் விழிப்புணர்வுப் பிரச்சாரம்.

                2. அரசுகள் அத்தகையவர்கள் மீது கடும் நடவடிக்கை, அழுத்தம் பலவகையிலும் தருவது.

கே:       தி.மு.க. ஆட்சிக் காலங்களில் மட்டுமே அரசு ஊழியர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதும் அ.தி.மு.க. அரசு அதைத் தகர்ப்பதும் ஏன்?

                - ச.அபிநவ், தூத்துக்குடி

ப:           மக்கள் நலன் என்பதில் தி.மு.கவுக்கு அரசு ஊழியர்கள் நலனும் உள்ளடக்கம் என்று தி.மு.க. அரசு உணருவதும், அ.தி.மு.க. அரசு உணராததுமே உண்மைக் காரணங்கள்.

கே:       நேர்மையற்ற மோடி - எடப்பாடி ஆட்சியில் தேர்தல் மட்டும் நேர்மையாக நடக்கும் என்று நாம் நம்புவதற்கு இல்லையே... உங்கள் கருத்து அய்யா?

                - க.நரசிம்மன், புழல்

ப:           உங்கள் வாய்க்குச் சர்க்கரை போட வேண்டும்.

கே:       இலங்கையில் கிறிஸ்தவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு எதைக் காட்டுகிறது?

                - த.உமாபதி, ரெட்டேரி

ப:           ‘எண்ணிலா மதங்கள் கந்தக் கிடங்கில், கன்னிக் கொள்ளிகள்’ என்ற புரட்சிக்கவிஞர் கருத்து எத்தகைய உண்மை பார்த்தீர்களா? நெறி வெறியாகும் என்பதன் சாட்சி!

கே:       மனிதநேயம் கடவுள் மறுப்பாளர்களிடம் உள்ள அளவிற்கு கடவுளை நம்புவோரிடம் இல்லாதது ஏன்?

                - அருள்மொழிதேவன், மதுரை

ப:           எதிலும் தனது செயல் இல்லை என்ற பக்தர்கள் நம்பிக்கையும், எதற்கும் பொறுப்பேற்க வேண்டும் என்ற பகுத்தறிவாளர்களின் உணர்வும்தான் சரியான காரணங்கள்.

கே:       பூணூல் போட்டுக் கொள்பவன் உயர்ந்தவன் என்றால், அந்த நூலை தயாரித்தவன் அவனைவிட உயர்ந்தவனாகத்தானே இருக்க வேண்டும்?

                - யாழினி, சைதை

ப:           அருமையான நெற்றியடி இது!

 

கே:       உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதே பாலியல் குற்றச்சாட்டை புனைந்து பேசப்பட்டிருக்கிறதே! உச்சநீதிமன்றத்திற்கே அச்சுறுத்தல் தரும் பாசிஸ்டுகளின் ஜனநாயகப் படுகொலைதானே இது?

                - அ.சி.அஸ்வின், பம்மல்

ப:           பெரிய சக்தியின் சதிவலை. அதுவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஒரு நேர்மையாளர் மீது பெரும்பழி!

கே:       ஜாதி மறுப்புத் திருமணம் செய்ய இயலாத காரணத்தாலேயே ஒருவர் ஜாதி ஒழிப்பு பற்றி பேச தகுதியற்றவராகி விடுவாரா?

                - முத்தமிழ்ச்செல்வன், அரியலூர்

ப:           பல சூழல்கள் காரணமாக அமையலாம். அதனால் அதை தகுதிக்குறைவாக எண்ண வேண்டாம்.

கே:       இந்துமதக் கடவுள்களின் காமவெறியையும், காலித்தனத்தையும் எடுத்துச்சொன்னால் பக்தர் மனம் புண்படுகிறதென்றால் அந்தக் கதைகளைச் சொல்லும் புராண இதிகாசங்களை தடை செய்யாதது ஏன்?

                - பிரித்திவிராஜ், மாதவரம்

ப:           ஒருதலைப்பட்ச முட்டாள்தனமான பார்வை _ ஆரிய ஆணவம்தான் காரணம் என்க!

செய்திகளை பகிர்ந்து கொள்ள

Submit ஆசிரியர் பதில்கள் in FaceBook Submit ஆசிரியர் பதில்கள் in Google Bookmarks Submit ஆசிரியர் பதில்கள் in Twitter Submit ஆசிரியர் பதில்கள் in Twitter

உண்மையில் தேட

உண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா

wrapper

ஜனவரி 16-31, 2021

  • அய்யாவின் அடிச்சுவட்டில் ...:இயக்க வரலாறான தன் வரலாறு(260) - பாவலரேறு பெருஞ்சித்திரனார் மறைவு!
  • அரசியல் களம்: ஆன்மிக அரசியலின் திரைக்குப் பின்னால்?
  • ஆன்மிகம் - அவர்கள் பார்வையில்!
  • கவிதை: தமிழர் திருநாள்
  • சிந்தனை: திருவள்ளுவர் நாள் சிந்தனை
  • சிறுகதை: சிக்கனத் திருமணம்
  • தலையங்கம் : தைப்பொங்கல் - திராவிடர் பண்பாட்டு மீட்டுருவாக்கத் திருவிழா!
  • நூல் மதிப்புரை:தமிழரின் சுற்றுவட்டப் பாதையில் தந்தை பெரியார்
  • பெண் நீதிபதிகள் எண்ணிக்கையும் திராவிட இயக்கத்தின் பங்கும்!
  • பெண்ணால் முடியும்
  • பெரியார் பேசுகிறார்: பொங்கல் புதுநாள் தோன்றியது ஏன்?
  • பேபிக்கு ஒரு ‘ஹெட்போன்’
  • மருத்துவம்: விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! (22)
  • முகப்புக் கட்டுரை: திராவிடர் திருநாளைப் பண்பாட்டு மீட்பாகக் கொண்டாடுவோம்!
  • 2011 இதழ்கள்
  • 2012 இதழ்கள்
  • 2013 இதழ்கள்
  • 2014 இதழ்கள்
  • 2015 இதழ்கள்
  • 2016 இதழ்கள்
  • 2017 இதழ்கள்
  • 2018 இதழ்கள்
  • 2019 இதழ்கள்

Back to Top

© Copyright 2018 - All rights reserved. Designed and Hosted by Periyar Webvision.