Main menu
  • முகப்பு
  • வலைக்காட்சி
  • விடுதலை
  • முந்தைய இதழ்கள்
    • 2021
    • 2020
    • 2019
    • 2018
    • 2017
    • 2016
    • 2015
    • 2014
    • 2013
    • 2012
    • 2011
  • புத்தகம் வாங்க
  • Print
  • Email

மருந்து, மாத்திரைகள் பயன்படுத்தும் போது கட்டாயம் பின்பற்ற வேண்டியவை

24.jpg - 62.90 KB


1.    மருந்துகளை காலாவதி காலத்தை கவனமாக பார்த்து சாப்பிட வேண்டும். காலாவதியான மருந்து நஞ்சுக்குச் சமம். அதை சாப்பிடக் கூடாது.

2.    ஆன்ட்டிபயாட்டிக் மாத்திரைகள் எத்தனை மாத்திரை எத்தனை வேளை, எத்தனை நாள்கள் சாப்பிட வேண்டுமோ அதைக் கட்டாயம் சாப்பிட வேண்டும். நோய் குணமாகிவிட்டது என்பதால் மாத்திரையை நிறுத்தக் கூடாது. பாதியில் நிறுத்தினால், அடுத்த முறை அதே ஆன்ட்டிபயாட்டிக் மாத்திரை வேலை செய்யாது (பயன் தராது).

3.    ஒவ்வாமை மருந்துகளை உடன் மருத்துவரிடம் சொல்லி தீர்வு காணவேண்டும். வேறு சரியான மருந்தைத் தேர்வு செய்து கொள்ளவேண்டும். ஒரு மருத்துவரிடமிருந்து வேறு மருத்துவரிடம் செல்லும்போது பழைய மருந்துச் சீட்டைக் கட்டாயம் காட்ட வேண்டும். ஒரு நோய்க்கு ஒருவர் சாப்பிடும் மருந்து  இன்னொருவரும் சாப்பிடலாம் என்று சாப்பிடக் கூடாது. மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்தையே ஒவ்வொருவரும் சாப்பிட வேண்டும்.

4.    குழந்தைகளுக்குக் காய்ச்சல் வந்தால், பெற்றோர் மருந்து கொடுக்கும்போது, உடனே குணமாகிவிட வேண்டும் என்று அடிக்கடி கொடுப்பர். அது தப்பு. 4 மணி நேரத்திற்கு ஒருமுறைதான், ஒரு நாளைக்கு நான்கு அல்லது 5 முறைதான் கொடுக்க வேண்டும். அல்லது மருத்துவர் கூறியபடி கொடுக்க வேண்டும்.

5.    சாப்பாட்டுக்கு முன் சாப்பிட வேண்டிய மருந்தை சாப்பாட்டிற்கு முன்னும், பின் சாப்பிட வேண்டியதை பின்புந்தான் சாப்பிட வேண்டும். எடுத்துக்காட்டாக ஸ்டீராய்டு, வலி நிவாரண மாத்திரைகள், கிருமி நாசினிகள் அழிக்கும் மருந்துகள், வீக்கத்தை கட்டுப்படுத்தும் மாத்திரைகள் வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. சாப்பிட்ட பின்தான் சாப்பிட வேண்டும். வாந்தி, வயிற்று எரிச்சல் போன்றவற்றிற்குச் சாப்பிடும் மருந்துகள் வெறும் வயிற்றில்தான் (சாப்பாட்டிற்கு அரை மணி நேரம் முன்பு) சாப்பிட வேண்டும். வீக்கங்கள் வடிய சாப்பிடும் மாத்திரைகளை சாப்பாட்டிற்கு பின்பு சாப்பிட்டால்தான் வேலை செய்யும்.

6.    பக்க விளைவு மற்றும் பாதிப்பு ஏற்படுத்தும் மாத்திரைகளுடன் அதற்கு நிவாரணமாக உரிய துணை மருந்துகளை மருத்துவர் கொடுப்பர். அவற்றையும் சேர்த்தே சாப்பிட வேண்டும்.

7.    ஆஸ்துமாவிற்கு மருந்து சாப்பிடும்போது, வயிற்றெரிச்சலுக்கான வலிக்கான மாத்திரைகளைச் சாப்பிடக் கூடாது.

8.    பாலூட்டும் தாய்மார்கள் வலி நிவாரண மாத்திரைகள், தூக்க மாத்திரைகள் சாப்பிடக் கூடாது.

9.    வலிப்பு நோய் உள்ளவர்கள்  கட்டாயம் ஏற்படின் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அவர் அறிவுரைப்படி செய்ய வேண்டும்.

10.    எதிர் மருந்துகளை ஒரே நேரத்தில் சாப்பிடக் கூடாது. பல நோய்களுக்கு மருந்து சாப்பிடுவோர் இதில் கவனமாக இருக்க வேண்டும். மருத்துவர் எப்படிச் சாப்பிடச் சொல்கிறாரே அப்படிதான் ஒன்றுக்கு மேற்பட்ட மாத்திரைகளை ஒரே நேரத்தில் சாப்பிடும்போது சாப்பிட வேண்டும்


செய்திகளை பகிர்ந்து கொள்ள

Submit   மருந்து, மாத்திரைகள் பயன்படுத்தும் போது கட்டாயம் பின்பற்ற வேண்டியவை in FaceBook Submit   மருந்து, மாத்திரைகள் பயன்படுத்தும் போது கட்டாயம் பின்பற்ற வேண்டியவை in Google Bookmarks Submit   மருந்து, மாத்திரைகள் பயன்படுத்தும் போது கட்டாயம் பின்பற்ற வேண்டியவை in Twitter Submit   மருந்து, மாத்திரைகள் பயன்படுத்தும் போது கட்டாயம் பின்பற்ற வேண்டியவை in Twitter

உண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா

wrapper

Back to Top

© Copyright 2018 - All rights reserved. Designed and Hosted by Periyar Webvision.