Main menu
  • முகப்பு
  • வலைக்காட்சி
  • விடுதலை
  • முந்தைய இதழ்கள்
    • 2019
    • 2018
    • 2017
    • 2016
    • 2015
    • 2014
    • 2013
    • 2012
    • 2011
  • புத்தகம் வாங்க
  • Print
  • Email

ஆசிரியர் பதில்கள்

கே:       அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் விதிகளின்படிதான் நடந்துள்ளது என்றும் தேர்வுக்குழு பரிந்துரை செய்த மூவரில் அவரும் ஒருவர் என்றும் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கூறியிருப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதா?           - -அ.மாணிக்கம், வந்தவாசி

ப:           புகார் கூறியுள்ளது பற்றி விசாரணையில் ஒன்றுமில்லை என்றாகியது என்றும், புகார் சொல்லப்பட்டவர் அல்லாத மற்ற 2 பேர்களில் ஒருவரைத் தேர்வு செய்யாது, ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனரைத் தேர்வு செய்தது ஏன்? அதை ஆளுநர் விளக்குவாரா? மற்ற இருவரைவிட எத்தகுதியில் இவர் உயர்ந்தவர்? - விளக்கினால் நலம்!

கே:         லிங்காயத்து விவகாரத்தில், காங்கிரசுக்கு உறுதுணையாக பா.ஜ.க. இருக்க வேண்டும் என்று மடாதிபதி சிவமூர்த்தி அறிவுரை வழங்கி இருப்பதைத் தாங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?    -  மா.கோவேந்தன், சேலம்

ப:           நடைமுறைக்கு ஒத்துவராத உயர்ந்த கருத்து இது!

கே:       எஸ்.சி. எஸ்.டி.க்கான (ஷி.சி. & ஷி.ஜி.) இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறை கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது பற்றி தங்கள் கருத்து என்ன?

                - -சீ. லட்சுமிபதி, தாம்பரம்

ப:           அது நியாயம்தான்; அதே அளவுகோல்தானே ஙி.சி., வி.ஙி.சி., க்கும் வைக்க வேண்டும். அரசியல் சட்டத்தில் இல்லாத ஒன்று மட்டுமல்ல. திஷீக்ஷீஷ்ணீக்ஷீபீ சிஷீனீனீஸீவீஹ் என்ற முன்னேறிய ஜாதியினர் திறந்த போட்டியில்கூட கிரீமிலேயர் இல்லையே! அப்படியிருக்க ஙி.சி., வி.ஙி.சி.,க்கு மட்டும் என்றால் அக்கிரமம், சமூக அநீதி அல்லவா?

கே:       உத்தரப்பிரதேச அரசு ஆவணங்களில் அம்பேத்கரின் பெயரை மாற்றி அமைக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதைப் பற்றி தங்கள் கருத்து என்ன?   -------கா.சிவசிதம்பரம், திருவாரூர்

ப:           ராம் என்று கூறுவது பச்சை அயோக்கியத்தனம். இதனை விளைவை அறுவடை செய்வர். அது உறுதி!

கே:       ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மூன்று மாதம் அவகாசம் கேட்பது மோசடியா?அயோக்கியத்தனமா?           - -வே.காவேரி, திருச்சி

ப:           6 வாரம் ஏன் பேன் குத்திக்கொண்டிருந்தது மத்திய அரசு. இது ஒரு திட்டமிட்ட திசைதிருப்பல்! கண்டனத்திற்குரியது.

கே:       நாய்வேடம் போட்டாலும் பார்ப்பான் பார்ப்பானுக்கு மட்டுமே வாலாட்டுவான் என்பதை தமிழ்த் தேசியங்கள் இப்போதாவது உணர்வார்களா? தெளிவார்களா?    -  ஈ.வெ.ரா.தமிழன், சீர்காழி

ப:           தமிழ்த் தேசியங்களில் பலர் தனிக்கடை நடத்தி பதவி தேடுபவர்; சிலர் குழப்பவாதிகள். பார்ப்பனர் தமிழரல்ல என்று தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் எழுதியதையாவது படிக்கட்டும்!

கே:       ஒரு நூற்றாண்டாக பெரியாரும் திராவிட இயக்கமும் நடத்திவந்த உரிமைப்போரை அண்டை மாநிலங்கள் கையிலெடுத்திருக்கும் இன்றைய சரியான தருணத்தில் திராவிட மாநிலங்களின் கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்திட வலியுறுத்துவீர்களா?

                - - சீர்காழி கு.நா.இராமண்ணா, சென்னை

ப:           இப்போது கனியத் தொடங்கியுள்ளது! நாம் தனி கூட்டமைப்பைச் செய்வதைவிட, அவர்களே முன்வந்து செய்யும் காலமும் மேலும் கனியும்.

கே:             ஈரோடு மண்டல தி.மு.க. மாநாடு, தந்தை பெரியார் யார் என்பதை உலகுக்கு உணர்த்திவிட்டது பற்றி?      - -நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்

ப:           பொதுவாக தி.மு.க.வுக்கும், குறிப்பாக தி.மு.க. செயல்தலைவர் சகோதரர் மு.க.ஸ்டாலினுக்கும் நமது வாழ்த்துகள்! பாராட்டுகள்!!

கே:       ஊழலில் பி.ஜே.பி எடியூரப்பா அரசே முதலிடம் என்று பா.ஜ.க. தலைவர் அமித்ஷா வாக்குமூலம் கூறிவிட்டு, மக்களிடம் பி.ஜே.பி தேர்தல் பிரச்சாரத்தை எந்த முகத்தை வைத்துக்கொண்டு வாக்கு கேட்கிறது?  - இல.சங்கத்தமிழன்,  செங்கை

ப:           வாய்த் தவறினால்தான் பா.ஜ.க. தலைவர்கள் உண்மை பேசுவார்கள் என்ற உண்மை வெளிவந்துள்ளது!

செய்திகளை பகிர்ந்து கொள்ள

Submit ஆசிரியர் பதில்கள் in FaceBook Submit ஆசிரியர் பதில்கள் in Google Bookmarks Submit ஆசிரியர் பதில்கள் in Twitter Submit ஆசிரியர் பதில்கள் in Twitter

wrapper

Back to Top

© Copyright 2018 - All rights reserved. Designed and Hosted by Periyar Webvision.