Main menu
  • முகப்பு
  • வலைக்காட்சி
  • விடுதலை
  • முந்தைய இதழ்கள்
    • 2020
    • 2019
    • 2018
    • 2017
    • 2016
    • 2015
    • 2014
    • 2013
    • 2012
    • 2011
  • புத்தகம் வாங்க
  • Print
  • Email

ஆசிரியர் பதில்கள்


கே:    ஆந்திரமுதல்வர் சந்திரபாபு நாயுடு 16 எம்.பி.க்களை வைத்துக்கொண்டு அந்த மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி மத்திய பி.ஜே.பி அரசுக்கு அழுத்தம் தருகிறார். ஆனால், தமிழ்நாட்டின் நிலை தலைகீழாக உள்ளதே?
                        -               -மல்லிகா, மாங்காடு
ப:    அவர்கள் சுதந்திரமானவர்கள். இங்கே டெல்லியின் ஆணைப்படி ஆளும் அ.தி.மு.க.
(சு)தந்திரமானவர்கள்? ஏ தாழ்ந்த தமிழகமே!

 

கே:    ஒருபுறம் சமூகநீதிக்கு வேட்டு வைத்துக்கொண்டு, மறுபுறம் சமூகநீதியே நமது குறிக்கோள் என்று பிரதமர் மோடி கூறுவது மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா?    
 - ரா.நல்லசிவம், தேனி
ப:    அவரது ஆர்.எஸ்.எஸ்.க்கு கைவந்த கலை -_ இரட்டை வேடம்; கபட நாடகம்!

 

கே:    ‘தென்னிந்தியாவை தனி நாடாக்கப் போராட வேண்டியதின் தேவை இருக்கும்’ என்று தெலுங்குதேசம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முரளிமோகன் பேசி இருப்பதைத் தாங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
    -         -எம்.லட்சுமி, திருத்தணி
ப:    கன்னடத்தில் அந்நிலை அரும்புகிறது. கேரளாவில் ஹிந்தி எதிர்ப்பு, திராவிடப் பண்பாடு _ மாவலி _ ஓணம் கதை மூலம்; ஆந்திராவிலும் பூக்கிறது! எதிர்காலத்தில் நமக்குப் பதிலாக அவர்கள் ‘திராவிட நாடு’ கேட்பார்கள் போலும்!

 

கே:    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்கள் மீது, ராகுல்காந்தி கருணை காட்டுவதைக்கூட, பா.ஜ.க. சு.சுவாமி சந்தேகிக்கிறாரே?    
  -------தி.பொ.சண்முகசுந்தரம், திட்டக்குடி
ப:    அரசியல் புரோக்கர்களுக்கு எல்லாமே சந்தேகங்கள்தான்!

 

கே:    மதங்கள் மீது எனக்கு நம்பிக்கை உண்டு. ஆனால், ரஜினியின் ஆன்மீக அரசியலில் தனக்கு நம்பிக்கை இல்லை’ என்று மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கூறியிருப்பது குழப்பத்தின் உச்சம் என்று எடுத்துக்கொள்ளலாமா?
               -     -பா.ஆறுமுகம், கோவை
ப:    அவரது ஆழ்ந்த கருத்து _ நம்மைப் போன்ற சிற்றறிவு உள்ளவர்களுக்குப் பல நேரங்களில் புரிவதே இல்லை! என்ன செய்ய?

 

கே:    தமிழகத்தின் நலனை, தேசிய கட்சிகள் எண்ணிப் பாராமலே இருப்பது எதனைக் காட்டுகிறது?
    - நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
ப:    தேசீயக் கட்சிகள் என்ற தேய்மானங்களைப் பற்றி ஏன் அதிகம் கவலைப்படுகிறீர்கள்? இங்கே இருப்பவர்கள் உள்ளூர் தலைவருக்கு இருமல் வந்தால்கூட கேட்டுத்தானே இரும்ப வேண்டிய நிலை!

 

கே:    ‘உலகம் கடவுளால் படைக்கப்படவில்லை’ என்ற நாத்திக முற்போக்குக் கருத்துக்களைச் சொன்ன ஸ்டீஃபன் ஹாக்கிங் நூல்களை தமிழில் வெளியிடுவீர்களா?
    -         -இல.சங்கத்தமிழன், செங்கை
ப:    யோசனைக்கு நன்றி! நிச்சயம் செய்வோம்.

 

கே:    மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடைபெறுவதால், வாக்குச் சீட்டு மூலம் தேர்தல் நடத்த வேண்டும் என்று பலதரப்பினரும் வலியுறுத்துவது பற்றி தங்கள் கருத்து?
              - -காசிநாதன், தெற்கிருப்பு, கடலூர்
ப:    வாக்குச் சீட்டு மூலம் தேர்தல் நடத்தும் கோரிக்கை பலராலும் வற்புறுத்தப்படுவதால் அதை ஏற்கலாம் என்பதே நம் கருத்து.


செய்திகளை பகிர்ந்து கொள்ள

Submit  ஆசிரியர் பதில்கள் in FaceBook Submit  ஆசிரியர் பதில்கள் in Google Bookmarks Submit  ஆசிரியர் பதில்கள் in Twitter Submit  ஆசிரியர் பதில்கள் in Twitter

உண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா

wrapper

Back to Top

© Copyright 2018 - All rights reserved. Designed and Hosted by Periyar Webvision.