Main menu
  • முகப்பு
  • வலைக்காட்சி
  • விடுதலை
  • முந்தைய இதழ்கள்
    • 2020
    • 2019
    • 2018
    • 2017
    • 2016
    • 2015
    • 2014
    • 2013
    • 2012
    • 2011
  • புத்தகம் வாங்க
  • Print
  • Email

செயலி

Improve English: Word Games

இச்செயலி ஆங்கிலத்தில் தன்னம்பிக்கையுடன் உரையாட உதவும். இதில் பாடங்களை சிறு சிறு பகுதிகளாகப் பிரித்துள்ளனர். இதிலுள்ள விளையாட்டுகள் மூலம் ஆங்கில இலக்கணம், சொற்கள் ஆகியவற்றை எளிதில் கற்றுக்கொள்ளலாம்.

ஆங்கிலத்தில் பல சொற்கள் ஒரே மாதிரியான உச்சரிப்பில் இருக்கும். அவற்றைப் பிரித்தறிந்து கொள்ள இந்தப் பயிற்சி உதவும். 50 லட்சத்துக்கும் அதிகமான சிறு சிறு பகுதிகளாக பாடங்கள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. இந்தச் செயலியில் நான்கு லட்சம் விளையாட்டுகள் பயனர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளன.

goo.gl/fpyp1v  or  http://knudge.meகுறும்படம்

‘கூர்ப்பி’
 (Pencil Sharpner)

பிஞ்சு உள்ளங்களில், ‘என்னால் முடியுமா?’ என்று தோன்றும்போது, ‘முயற்சி செய்; முடியும்!’ என்ற தன்னம்பிக்கையை ஊட்டுங்கள். அவர்களால் சாதிக்க முடியும் என்பதையும் வேறொன்று மூலம் கிடைக்கும் சிறப்பு நிலைக்காது என்ற பாடமும் இதில் காண முடிகிறது. கவித்துவமாகச் சொல்வதுதான் இந்தக் ‘கூர்ப்பி’ குறும்படம்.

பென்சில் சீவும் கருவிக்கு ஒரு தனிச்சிறப்பு இருந்தது போலவும் அந்தச் சிறப்பு போன பிறகு,  ‘முகில்’ என்ற பிஞ்சுக்கு சேர்ந்த நண்பர்கள் விலகிப் போனதுபோலவும் கதை அமைக்கப்பட்டிருக்கிறது.  இறுதியில் பென்சில் சீவும் ‘முகில்’அதில் வெளிப்படும் குப்பைகளைக் கொண்டு தாள், பசை இவைகள் மூலம் பல்வேறு உருவங்களைச் செய்து அசத்துகிறாள். இழந்த தன்னம்பிக்கையை தன் சொந்தத் திறன் மூலமே ‘முகில்’ பெறுவது போல கதை முடிகிறது.அரசுப் பள்ளி மாணவர்களைக் கொண்டு சிறப்பாக உருவாக்கப்பட்ட இந்த ‘கூர்ப்பி’ 18:04 நிமிடங்கள் ஓடுகிறது. சொல்லவேண்டிய கருத்தை எம்.வெங்கடேசன் எழுதி சிறப்பாக இயக்கியிருக்கிறார். இதை Youtube-இல் காணலாம்.

நூல் அறிமுகம்

 

நூல்:           மல்லிகைப் பூ (சிறுகதைகள்)
ஆசிரியர்:    ஞா.சிவகாமி
பக்கங்கள்:   126
நன்கொடை:  50/-
வெளியீடு:    பூம்புகார் பதிப்பகம்

‘மல்லிகைப் பூ’ என்ற தலைப்பில் 25 சிறுகதைகளை தொகுத்து மணம் வீசும் மலர்ச்சரமாக வாசகர்களுக்கு வழங்கியிருக்கிறார் நூலாசிரியர். ஓய்வு பெற்ற தலைமைச் செயலக அதிகாரியான திருமதி ஞா.சிவகாமி அவர்கள், தமிழின் மீதும் பெண்கள் மீதும் மிகவும் ஈடுபாடு உடையவர். இத்தொகுப்பில் வரும் எல்லாச் சிறுகதைகளும் பெண்ணின் பெருமைகளை மிகச் சிறப்பாய் பேசுகின்றன. சில கதைகளில் தமிழின் பெருமைகளையும் தமிழரின் உயர்வுகளையும் சிறப்பாய் சொல்லியிருக்கிறார். சாதி மறுப்புத் திருமணத்தின் அவசியம், ஆணவக் கொலைகளின் அவலம், விதவையின் வேதனை, கல்லாத பெண்ணின் கயமை நிலை போன்றவற்றையும் சிறப்பாய் எடுத்துக் கூறியிருக்கிறார். நூல் நெடுக பெரியாரின் கொள்கைகளை ஆழமாய்ப் பதித்துள்ளார். பெண்கள் இந்நூலைப் படிக்கும்போது, நேர்மறையான எண்ணங்களையும் வாழ்வில் உயர வேண்டுமென்ற உத்வேகத்தையும் பெறுவர் என்பது உறுதி! சிறுகதைகளுக்கே உரிய எளிமை, கருத்தில் வலிமை இவையே இந்நூலின் வெற்றி! படித்துப் பயன்பெற வேண்டிய நூல்.



செய்திகளை பகிர்ந்து கொள்ள

Submit  செயலி in FaceBook Submit  செயலி in Google Bookmarks Submit  செயலி in Twitter Submit  செயலி in Twitter

உண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா

wrapper

Back to Top

© Copyright 2018 - All rights reserved. Designed and Hosted by Periyar Webvision.