Main menu
  • முகப்பு
  • வலைக்காட்சி
  • விடுதலை
  • முந்தைய இதழ்கள்
    • 2020
    • 2019
    • 2018
    • 2017
    • 2016
    • 2015
    • 2014
    • 2013
    • 2012
    • 2011
  • புத்தகம் வாங்க
Home -> 2016 இதழ்கள் -> பிப்ரவரி 01-15 -> உரிமைக்குக் குரல் கொடுத்த உயர்நீதிமன்ற நீதிபதிகள்
Parent Category:
2016
Category:
பிப்ரவரி 01-15
  • Print
  • Email

உரிமைக்குக் குரல் கொடுத்த உயர்நீதிமன்ற நீதிபதிகள்

உலகு எப்படி இன்னும் நிலைத்து நிற்கிறது என்றால் ஒருசில நல்லவர்களாவது வாழ்வதும், அவர்கள் அஞ்சாது நீதியை, நேர்மையை நிலைநாட்டுவதும்தான் காரணம் என்பர்.

ஆம். அது 100 விழுக்காடு உண்மை. குமாரசாமியைப் போன்ற நீதிபதிகள் உள்ள நாட்டில், அஞ்சாது நீதி காக்கும் நீதிபதிகளும் இருக்கின்றார்கள். அவர்களால்தான் நீதித்துறை இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

 

அண்மையில் நீதிபதி சி.ஹரிபரந்தாமன் அவர்களும், பி.ஆர்.சிவக்குமார் அவர்களும், நீதிபதி இராமசுப்பிரமணியம் அவர்களும் இதை உறுதி செய்துள்ளனர்.

தந்தை பெரியாரின் சமூகநீதிக் குரலை அவர்கள் ஓங்கி ஒலித்துள்ளமை, பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரியதாகும்.

நீதிபதி ஹரிபரந்தாமன் அவர்கள், தனது உரையில், “நீதிபதிகளின் நியமனத்தில் இட ஒதுக்கீடு என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஆனால், உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் இடஒதுக்கீடு என்பது கேலிக்கூத்தாகி உள்ளது.  நீதிமன்றங்களில் இடஒதுக்கீட்டு சரியான அளவு செயல்-படுத்தப்படுகின்றதா என்பதைக் கண்காணிக்க வலுமிக்க ஓர்  அமைப்பை உருவாக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

இன்றைய காலகட்டத்திலும் சமமில்லாத ஒரு சூழலே நிலவுகிறது, சமூகநீதி என்பது பல்வேறு நிலைகளில் கேள்விக்குறியதாகவே உள்ளது. படிப்பு, அரசு வேலை என அனைத்திலும் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்-படும் போது நீதிபதிகள் நியமனத்தில் மட்டும் பின்பற்ற மறுப்பது சரியல்ல. 125 ஆண்டுகால நீதித்துறை வரலாற்றில் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் இனத்தைச் சேர்ந்த 5 பேர் மட்டுமே சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். குற்றப் பரம்பரையில் இருந்து ஒருவர் கூட இதுவரை நீதிபதியாக நியமிக்கப்படவில்லை. இதுபோன்ற நிலை நீடித்தால் சமூகநீதியை காப்பது கடினம். இவ்வாறான சூழலில் இடஒதுக்-கீட்டிற்கு எதிராக பேசுவது மற்றும் இடஒதுக்கீட்டில் வருபவர்களை தவறாக சித்தரிப்பது தவறாகும், கல்வி என்பது இன்றும் பணக்காரர்களின் கூடாரமாகவே உள்ளது. நாட்டில் பெரும்பான்மையாக உள்ள பட்டியலினத்தவர்கள் மற்றும் பிற்படுத்தப்-பட்டவர்களில் பலர் கல்வியைப் பெறுவதற்கே மிகவும் திண்டாடும் சூழல் நிலவுகிறது. அந்த ஏழைகள் தங்களின் கல்விக்காக லட்சங்களையும் கோடிகளையும் எவ்வாறு செலவழிப்பார்கள்?

சமூகத்தில் இன்றளவும் ஏற்றத் தாழ்வுகள் நீடிக்கும் போது இடஒதுக்கீட்டை எதிப்பவர்கள் கயவர்கள் என்றுதான் கூறவேண்டும்.

இடஒதுக்கீட்டை எவ்வளவு ஆண்டுகாலம்தான் அமலில் வைத்திருப்பீர்கள் என்று கருத்து கூறுகிறார்கள். அவர்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன். இந்து மதத்தில் வர்ணாஸ்ரம கொள்கைகள் இருக்கும்வரை இடஒதுக்கீடு தொடரும்.

வேதனை, மற்றும் சமூகமே வெட்கப்பட-வேண்டிய ஒரு சம்பவம். சமீபத்தில் நிகழ்ந்-துள்ளது. மயிலாடுதுறையில் உள்ள வழுவூரில்  உயர்ஜாதி இந்துக்கள் ஒரு தலித் பிணத்தைக்கூட தெருவில் கொண்டு செல்லக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நீதிமன்றம் உத்தரவிட்டும் அதை நிறைவேற்றாமல் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக செயல்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கருத்தரங்கம் ஒன்றில் நான் கலந்துகொண்ட போது அங்கு பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன்.

அந்த தலித் உடல் புதைக்கப்பட்ட போது அந்தப் புதைகுழியில் நீதிமன்றத் தீர்ப்பும் சேர்த்தே புதைக்கப்பட்டது என்று கூறினார் என்பதையும் நினைவூட்டுகிறேன் என்று முழங்கினார்.

நீதிபதி பி.ஆர்.சிவக்குமார் அவர்கள், இந்தியா முழுவதும் 1200_க்கும் மேற்பட்ட நீதிபதிகள் பணியாற்றுகின்றனர். இதில் பட்டியல் இனத்தவர்கள் வெறும் 18 பேர் தான் உள்ளனர். இது உயர் வர்க்கத்தினரிடையே காணப்படும் தீண்டாமையாகும், மேலும் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றங்களில்  நீதிபதிகள் நியமனத்தில் கொலீஜியம் முறையின்படி சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினரும் தேர்ந்-தெடுக்கப்பட வேண்டும் என்று சமூகநீதிகளைச் சரமாரியாக முழங்கினார்.

கோயிலுக்குச் செல்ல வரையறுக்கப்பட்ட உடைக் கட்டுப்பாடு (ஞிக்ஷீமீss சிஷீபீமீ) பற்றி இரு நீதிபதிகளின் அமர்வில் உள்ள நீதிபதி  ராமசுப்ரமணியம் அவர்கள் சுருக்கென்று தைப்பது மாதிரி ஒரு கேள்வியைக் கேட்டு விட்டு தீர்ப்பைத் தள்ளி வைத்துள்ளார்.

கோயிலுக்குள் கடவுளை வணங்கச் செல்லுமுன் குறிப்பிட்ட உடையில் செல்வதுதான் கடவுளை மதிக்கும் பக்தி பரவசச் செயல் என்ற வாதத்திற்கு நேர் எதிராக வினா எழுப்பியுள்ளார்.

“அது சரி நீங்கள் கோயிலுக்குச் செல்லும் போது இத்தகைய கட்டுப்பாடு தேவை என்கிறீர்களே, அங்குள்ள பல சிலைகளைப் பார்த்திருக்கிறீர்களா? அவைகளையும் கூட,  (பெண் குறியும், ஆண் உறுப்பும் இணைந்தது) துணிபோட்டு மூடி அல்லவா வைத்திருக்க வேண்டும்? அது தாண்டி அல்லவோ பிறகு சாமி சிலை வழிபாடு!” கேட்டவர் நாஸ்திக ஜட்ஜ் அல்ல! மேல் ஜாதிக்காரர். -

எவ்வளவு சரியான கேள்வி? எளிதில் பதில் அளிக்க முடியாத கேள்வியும்கூட!

செய்திகளை பகிர்ந்து கொள்ள

Submit உரிமைக்குக் குரல் கொடுத்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் in FaceBook Submit உரிமைக்குக் குரல் கொடுத்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் in Google Bookmarks Submit உரிமைக்குக் குரல் கொடுத்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் in Twitter Submit உரிமைக்குக் குரல் கொடுத்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் in Twitter
  • < Prev
  • Next >

உண்மையில் தேட

உண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா

wrapper

ஜனவரி 16-31, 2021

  • அய்யாவின் அடிச்சுவட்டில் ...:இயக்க வரலாறான தன் வரலாறு(260) - பாவலரேறு பெருஞ்சித்திரனார் மறைவு!
  • அரசியல் களம்: ஆன்மிக அரசியலின் திரைக்குப் பின்னால்?
  • ஆசிரியர் பதில்கள்: ஆரியத்தால் ஏவப்பட்ட மாயமான்கள்!
  • ஆன்மிகம் - அவர்கள் பார்வையில்!
  • ஆய்வுக் கட்டுரை: புலவர் மாவண்ணா தேவராசனின் ‘பெரியார் பிள்ளைத் தமிழ்’ (3)
  • எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (70) : இந்தி எதிர்ப்பில் இறுதியில் இணைந்தவரா தந்தை பெரியார்?
  • கவிதை: தமிழர் திருநாள்
  • குடல் காக்கும் மோர்!
  • சிந்தனை: திருவள்ளுவர் நாள் சிந்தனை
  • சிறுகதை: சிக்கனத் திருமணம்
  • தந்தை பெரியார் பொங்கல் வாழ்த்து
  • தலையங்கம் : தைப்பொங்கல் - திராவிடர் பண்பாட்டு மீட்டுருவாக்கத் திருவிழா!
  • நூல் மதிப்புரை:தமிழரின் சுற்றுவட்டப் பாதையில் தந்தை பெரியார்
  • பகுத்தறிவு : மூடநம்பிக்கைக்கு எதிராக பாராட்டத்தக்க மும்பை உயர்நீதிமன்றத் தீர்ப்பு!
  • பெண் நீதிபதிகள் எண்ணிக்கையும் திராவிட இயக்கத்தின் பங்கும்!
  • பெண்ணால் முடியும்
  • பெரியார் பேசுகிறார்: பொங்கல் புதுநாள் தோன்றியது ஏன்?
  • பேபிக்கு ஒரு ‘ஹெட்போன்’
  • மருத்துவம்: விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! (22)
  • மாணவர் பகுதி: மாணவர்களே கண்ணைக் காப்பீர்!
  • முகப்புக் கட்டுரை: திராவிடர் திருநாளைப் பண்பாட்டு மீட்பாகக் கொண்டாடுவோம்!
  • 2011 இதழ்கள்
  • 2012 இதழ்கள்
  • 2013 இதழ்கள்
  • 2014 இதழ்கள்
  • 2015 இதழ்கள்
  • 2016 இதழ்கள்
  • 2017 இதழ்கள்
  • 2018 இதழ்கள்
  • 2019 இதழ்கள்

Back to Top

© Copyright 2018 - All rights reserved. Designed and Hosted by Periyar Webvision.