மும்பையில் கல்யாண் நகரில் வசித்து வரும் பெண் ஒருவர், அவரது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி, கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க 2010ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி ஆணையிட்டார். 2011 ஆகஸ்ட் 8 அன்று, கல்யாண் செஷன்ஸ் நீதிமன்றமும் இதனை உறுதி செய்தது.

இதனை எதிர்த்து, குடும்ப வன்முறைச் சட்டத்தை, தனது குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு எதிராக பயன்படுத்த முடியாது என்று மும்பை உயர் நீதிமன்றத்தில் கணவர் மேல் முறையீடு செய்தார். மேலும், தனது மனைவி குடும்ப வன்முறைச் சட்டத்தின் 23 ஆவது பிரிவின்படி குறிப்பிட்ட படிவத்தில் புகாரைத் தாக்கல் செய்யவில்லை என்றும் கூறியிருந்தார்.

இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி ரோஷன் தால்வி, மனுவைத் தள்ளுபடி செய்து பின்வருமாறு தீர்ப்புக் கூறியுள்ளார். பெண்களுக்கு நீதியை அதிகரிக்கும் விதமாகவே குடும்ப வன்முறைச் சட்டத்தைப் பார்க்க வேண்டும். பெண்களுக்கு ஏமாற்றம் கொடுப்பதாக இருக்கக் கூடாது.

சித்ரவதைக்கு உள்ளாகும் பெண், இந்தச் சட்டத்தைக் குடும்பத்தில் உள்ள ஆண் உறுப்பினருக்கு எதிராக மட்டுமின்றி, பெண் உறுப்பினர்களுக்கு எதிராகவும் பயன்படுத்தலாம்.

செய்திகளை பகிர்ந்து கொள்ள