unmai - சமுதாய மாற்றத்திற்கான வாழ்வியல் மாதமிருமுறை

உலகமயமாக்களிலும், சந்தை பொருளாதாரத்திலும், கார்போரேட் கலாச் சாரத்திலும் மயங்கி, நடுத்தரவர்க்க சுற்றத்தில் இருந்து தங்களை திடீரென்று விடுவித்துக் கொண்டதோடு, அவர்களை இழிபிறவியாகவும் பாவித்து, தங்களை மேட்டுக்குடியில் இணைத்துக் கொண்ட சாஃப்ட்வேர் எஞ்சினியர்களின் நிலை இன்று சரியாக பத்து வருடத்தைக்கூட தாண்டாத நிலையில் அந்தோ பரிதாபம்!

இண்டர்நேசனல், கான்டினெண்டல், சிபிஎஸ்சி என்று சேர்க்கப்பட்ட இந்த 'திடீர்' மேட்டுக்குடி பிள்ளைகள், இன்று தங்கள் பெற்றோரிடம் கேட்கும் கேள்வி

1. அப்பா ஆகாஷும், ஜெனியும் பென்ஸ் கார்ல வர்றாங்களாம், நான் மாருதி கார்ல வர்றதால என்னை வேற பெஞ்சுல உக்கார சொல்றாங்கப்பா!

2. அப்பா, ஏம்ப்பா எங்க கிளாஸ்ல எல்லோரும் பிறந்த நாள் கேக் ஷெரட்டன்லையும், தாஜ்லையும் கட் பண்றாங்க, நாம மட்டும் வீட்ல கட் பண்றோம்?

3. ஏம்ப்பா, நிகில் வீட்லயும், ஆராதனா வீட்லயும் எப்பவுமே வகேஷனுக்கு ஆஸ்திரேலியாவும், சுவிட்சர்லாந்தும் கூட்டிட்டுப் போறாங்க, நீங்க எப்ப பார்த்தாலும் ஊட்டிக்கும், கொடைக்கானலுக்கும் கூட்டிட்டுப் போறீங்க?

* இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?


கூகுளில் புதிய வசதி

இணையதளத்தில் இ-மெயில், கூகுள் ப்ளஸ் போன்ற சேவைகளைப் பயன்படுத்துபவர்கள் தங்கள் வாழ்நாளுக்குப் பின், தங்களின் மெயில் அக்கவுன்ட், சமூக வலைத்தளப் பக்கம் மற்றும் அவற்றில் உள்ள டேட்டாக்கள் என்ன ஆகும் என்ற கவலைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது கூகுள் நிறுவனம்.

ஒரு கணக்கைச் செயலிழக்க வைப்பதற்கான தேதி குறிக்கும் உணர்வுப்பூர்வமான விசயத்தைச் செயல்படுத்தி, இந்த வசதியை ஏற்படுத்திய முதல் முன்னணி நிறுவனம் என்ற சிறப்பினைப் பெற்றுள்ளது கூகுள்.

ஒரு பயனாளி தனது அக்கவுன்ட்டை முழுமையாக நீக்கும் (Delete) தேதியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அல்லது தனக்கு நம்பகமான ஒரு நபரை முன்கூட்டியே பரிந்துரைத்து, தன் இறப்புக்குப் பிறகு அந்த நபரை வைத்து தனது அக்கவுன்டை நீக்கிவிடலாம் என்ற இரு முறைகளில் வழிவகை செய்துள்ளது.

ஒரு பயனாளியின் டேட்டாக்கள் எப்போதும் ரகசியமாகப் பாதுகாப்பதற்கு இந்தப் புதிய வசதி வழிவகுக்கும் என்று கூகுள் நிறுவனம் கூறியுள்ளது. கூகுளின் தேதி குறித்தல் வசதி பற்றி முழுமையாக அறிய http://googlepublicpolicy.blogspot.co.uk/2013/04/plan-your-digital-afterlife-with.html


அந்த வார்த்தை

அறிஞர் பெர்னார்ட்ஷா நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர். அவரது படைப்பு களுக்குப் பதிப்பாளர்கள் ஒரு எழுத்துக்கு இவ்வளவு என்று பணம் கொடுப்பார்கள். பெரும்பாலும் ஓர் எழுத்துக்கு ஒரு ஷில்லிங் கொடுத்து விடுவார்கள்.

இதைக் கிண்டல் செய்ய நினைத்த ஓர் இளைஞன், பெர்னார்ட்ஷாவுக்கு ஆறு ஷில்லிங் அனுப்பி, இதைப் பெற்றுக் கொண்டு, ஷா தன் கைப்பட ஒரு கடிதம் தனக்கு எழுத வேண்டும் என்று கேட்டிருந்தான்.

பெர்னார்ட்ஷா, பண விஷயத்தில் எப்போதும் கறாராக நடந்து கொள்பவர்.

எனவே, தனது கடிதத்தில் ஆறு எழுத்திற்கு மேல் ஓர் எழுத்து கூடக் கூடுதலாக இருக்கக் கூடாது என்று, ஆறு எழுத்துகளைக் கொண்ட ஒரு வார்த்தையை எழுதி, அந்த இளைஞனுக்கு அனுப்பி வைத்தார்.

அந்த ஆங்கில வார்த்தை என்ன தெரியுமா? - Thanks.

- சந்திரன் வீராசாமி

செய்திகளை பகிர்ந்து கொள்ள

© Copyright 2018 - All rights reserved. Designed and Hosted by Periyar Webvision.