Main menu
  • முகப்பு
  • வலைக்காட்சி
  • விடுதலை
  • முந்தைய இதழ்கள்
    • 2020
    • 2019
    • 2018
    • 2017
    • 2016
    • 2015
    • 2014
    • 2013
    • 2012
    • 2011
  • புத்தகம் வாங்க
Home -> 2012 இதழ்கள் -> ஏப்ரல் 01-15 -> முகநூல் பேசுகிறது
  • Print
  • Email

முகநூல் பேசுகிறது

பசுவோட உடம்பில் கோடானுகோடி தேவர்கள் வாழ்கிறார்கள் என்று சொல்கிறார்களே! அப்போ அந்த பசுவுக்கு கோமாரி நோயோ அல்லது ஆந்ராக்ஸ் கிருமியோ தாக்கும்போது ஏன் அந்த தேவர்கள் அந்த கிருமிகளை அழிப்பதில்லை? லூயி பாஸ்டியரோட மருந்துதானே அந்த மாடுகளை காப்பாற்றுகிறது? எனில் அந்த தேவர்களைவிட லூயி பாஸ்டியர் உயர்ந்தவரா? ஒரு வேளை மேற்படி நோய்களினால் அந்த பசுக்கள் சாக நேரிட்டால் அதன் உடலில் குடியிருக்கும் கோடானு கோடி தேவர்களும் செத்து மடிவார்களா? அல்லது இன்னொரு பசுவின் உடலில் புகுந்து கொள்வார்களா?

- ராஜேஷ் தீனா | மார்ச் 8, 2012 காலை 9:26 மணி

திருவிழாக்கூட்டங்களில் கடவுள் படங்களைவிட அதிகம் விற்பனையாகும் படங்கள் எதுவென்றால் என்னைப்பார் யோகம் வரும் என்று எழுதியிருக்கிற கழுதை படமும், என் முகத்தில் விழி அதிர்ஷ்டம் வரும்ன்னு போட்டிருக்கிற நரி படமும்தான். ஆனா தினந்தோறும் கழுதை முகத்தில் விழித்து கழுதையோடவே வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிற வண்ணான் எனப்படும் சலவைத்தொழிலாளியின் வாழ்க்கை பாவம் அப்படியேதான் இருக்கிறது. தினந்தோறும் நரியின் முகத்தில் விழிக்கிற நரிக்குறவன் இன்றும் நரிக்குறவனாகவே இருக்கிறான்.

- ராஜேஷ் தீனா | மார்ச் 10, 2012 காலை 6:44 மணி



ஒவ்வொரு ஃப்ரண்டும் தேவை மச்சான் | மார்ச் 21, 2012 மாலை 6:38 மணி-

 

என்னதான் வெளிநாட்டுலருந்து வண்டிய இறக்குமதி பண்ணாலும், அதுக்கு பூஜை போடுற மேட்டரை இந்தியன் தான்டா கண்டுபுடிச்சான்.. டேய்.. உள்ள இருக்கிற 525 ஸ்பேர் பார்ட்ஸ்ல ஓடாத வண்டியா இந்த எலுமிச்சம்பழத்தில ஓடப் போகுது?

- சரத்குமார் | மார்ச் 11, 2012 இரவு 10:32 மணி

 

 

2013  நாள்காட்டி

- கோயம்புத்தூர் சூனா பானா | மார்ச் 13, 2012 இரவு 10:13 மணி

 

இணையத்தில் அய்ந்து தலை நாகம், பத்து தலை நாகம் என்று அவ்வப்போது அதிசயப் பீலா கிளப்புவார்கள். அதை உண்மையா என்று பரிசோதிக்காமல் உண்மையான செய்தி போலவே மூன்றுதலை பாம்பு என்று தினத்தந்தி இதழும் (17.03.2012) வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சேவ்ஸ் ஸ்னேக்ஸ் அமைப்பு நிர்வாகி சாதிக் கூறியதாவது:

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மட்டுமில்லை, உலகின் எந்த பகுதியிலும் மூன்று தலை ராஜநாகமோ அல்லது கூடுதல் தலைகளுடன் பாம்புகளோ கிடையாது. சிலர் கம்ப்யூட்டரில் மார்பிங் செய்து இது போன்ற பொய்யான படங்களை வெளியிட்டு வருகின்றனர். சமீபத்தில் வெளியான படம் மார்பிங் செய்து வெளியிடப்பட்டுள்ளது. அதுவும் அந்த பாம்பு படம் எடுத்து நிற்கும் இடம் கேரள மாநிலத்தில் உள்ள வனப்பகுதி. ஊட்டியில் இது போன்று பாம்பு இல்லை. குறிப்பாக எல்லநள்ளி பகுதியில் ராஜநாகம் இல்லை. எனவே, இதனை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றார்.

செய்திகளை பகிர்ந்து கொள்ள

Submit முகநூல் பேசுகிறது in FaceBook Submit முகநூல் பேசுகிறது in Google Bookmarks Submit முகநூல் பேசுகிறது in Twitter Submit முகநூல் பேசுகிறது in Twitter

உண்மையில் தேட

உண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா

wrapper

ஜனவரி 01-15, 2020

  • அப்படிப்போடு அப்படிப்போடு
  • அய்யாவின் அடிச்சுவட்டில் ....: இயக்க வரலாறான தன் வரலாறு (259)
  • ஆசிரியர் பதில்கள்:”குட்டி கார்ப்பரேட் ரங்கநாதய்யர்”
  • ஆய்வுக் கட்டுரை: புலவர் மாவண்ணா தேவராசனின் ‘பெரியார் பிள்ளைத் தமிழ்’ (2)
  • எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை! (69) : கோவில் நுழைவுப் போராட்டம் இன்றைய நிலை!
  • கட்டுரை: புத்தாண்டும் உழவர் போராட்டமும்
  • கவிதை : தமிழர் திருநாளில் உறுதி ஏற்போம்!
  • சிந்தனை: கேள்விகளின் நாயகர் நெய்வேலி க.தியாகராஜன்!
  • சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்: இதழாளர்
  • சிறுகதை: அப்பாவி விவசாயிங்க..!
  • தலையங்கம்: என்று ஒழியும் இந்த மூடத்தனம்?
  • பெண்ணால் முடியும்: குமரியின் முதல் பெண் அய்.பி.எஸ் பிரபினா
  • பெரியார் பேசுகிறார்: கடவுளைப் பற்றிக் கவலை வேண்டாம்!
  • மருத்துவம் :விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! (21)
  • முகப்புக் கட்டுரை : பண்பாட்டுப் படையெடுப்பை பகுத்தறிவால் முறியடிப்போம்!
  • மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்
  • வாசகர் மடல்
  • 2011 இதழ்கள்
  • 2012 இதழ்கள்
  • 2013 இதழ்கள்
  • 2014 இதழ்கள்
  • 2015 இதழ்கள்
  • 2016 இதழ்கள்
  • 2017 இதழ்கள்
  • 2018 இதழ்கள்
  • 2019 இதழ்கள்

Back to Top

© Copyright 2018 - All rights reserved. Designed and Hosted by Periyar Webvision.