Main menu
  • முகப்பு
  • வலைக்காட்சி
  • விடுதலை
  • முந்தைய இதழ்கள்
    • 2020
    • 2019
    • 2018
    • 2017
    • 2016
    • 2015
    • 2014
    • 2013
    • 2012
    • 2011
  • புத்தகம் வாங்க
Home -> 2011 இதழ்கள் -> அக்டோபர் 16-31 -> வலைவீச்சு : முகநூல் பேசுகிறது
  • Print
  • Email

வலைவீச்சு : முகநூல் பேசுகிறது

புரட்டாசி மாதம் வந்தாலே புளகாங்கிதம் அடைகிறேன். பகவான் விஷ்ணுவுக்கு உகந்த மாதமாம் புரட்டாசி. அசைவம் சாப்பிடக்கூடாதாம். பகவான் கோவிச்சுக்குவாராம். இதை இதை இதைத்தானே எதிர்ப்பார்த்தேன். மீன்கடை, கறிக்கடையில கூட்டத்தைக் காணோம். எனக்குப் பிடித்த வஞ்சிரம், வௌவா, நண்டை வறுத்து சாப்பிட, சுறாப்புட்டை வெளுத்து வாங்கிட, புரட்டாசி என்னும் வாய்ப்பு வழங்கிய இல்லாத ஆரிய பகவானே உனக்குக் கோடி நன்றி. நலிந்தோருக்கு நாளும் கிழமையும் ஏது?

ராஜேஷ் தீனா 25.09.2011 இரவு 9.49 மணி

2G ஊழலும், கடவுளும், ஒன்றுதான் இரண்டுமே பார்ப்பனக் கூட்டம் கட்டவிழ்த்துவிட்ட கட்டுக்கதை. உண்மையான இழப்பும் லஞ்சமும் எவ்வளவு தொகை என்று பார்ப்பன ஊடகங்கள் சொன்னதா இல்லை, ஒரு வழக்கை ஒரு வருடத்திற்கு மேலாக நடத்துகிறார்கள் என்றால் ஆதாரத்தைத் தேடித் தேடி அலையுது CBI. கல்லைக் காட்டி கடவுள் என்பதைப் போல ஊழல் என்ற சொல்லைக் காட்டி ஒரு தாழ்த்தப்பட்டவனைச் சிறையில் தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கிறது பல பரதேசி பார்ப்பனக் கூட்டம்.

சதீசு குமார் இ.வே 28.09.2011 மாலை 3.55 மணி

ஆஜர்!  ஆஜர்!  ஆஜர்!
லோக குரு கொலை வழக்கில் ஆஜர்!
லோக குரு நீதிபதியுடன் சமரசம் பேசியதில் செய்தியாளர்கள் முன் ஆஜர்....
எழுத்தாளர் அனுராதா ரமணனனுடன் அறையில் ஆஜர்....
பெங்களூரு நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட ஜெயலலிதா ஆஜர் ..
காஞ்சி தேவநாதன் கற்பழிப்பு வழக்கில் ஆஜர்....
என்.தி. திவாரி சல்லாப வழக்கில் ஆஜர்.....

அழகிரி இராமமூர்த்தி 28.09.2011 மதியம் 1:59 மணி

நாங்குநேரி அருகே உள்ள சூரக்குடியில் நடந்த கோவில் விழாவில் பூக்குழி இறங்கும்போது இரண்டு தரப்பு பக்தர்கள் இடையே யார் முதலில் இறங்குவது என்று வாக்குவாதம் முற்றி கைகலப்பில் ஆரம்பித்து பிறகு அரிவாளால் ஒருவரை ஒருவர் மாறி மாறி வெட்டிக்கொண்டனர். உயிருக்குப் போராடிய அவர்களை வள்ளியூர், நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், பாளை அரசு மருத்துவமனையிலும் சேர்த்தனர்.

கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி என்று பெரியார் சொன்னது இன்றைக்கும் உண்மைதானே? அந்த ஈரோட்டுக் கிழவர் சொன்ன கருத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கலாம். ஆனால் எந்தக் கொம்பனும் தவறு என்று சொல்ல முடியாது...

இன்னும் எத்தனை வருடமானாலும் பெரியாரின் பேச்சும், எழுத்தும்தான் மானுடத்திற்கு வாழ்வியல்.

பரணீதரன் கலியபெருமாள் 29.09.2011 மாலை 4:48 மணி

சூப்பர் சிங்கரில் அம்மா, -பிள்ளை சென்டிமெண்டை லாவகமாகக் கையாளுகிறார்கள். நமக்கெல்லாம் அழுவாச்சி, அழுவாச்சியாக வந்தால் நிகழ்ச்சி வெற்றி பெற்றுவிட்டது என்று அர்த்தம்.

இதுபோன்ற நிகழ்சிகளில் பார்ப்பனர் அல்லாதவர்களின் பிள்ளைகளுக்கு 0.1 % ஒதுக்கீடு கூட கிடைக்காது போலிருக்கு.

-மேகவண்ணன் புதிய தடம் 24.09.2011 மாலை 3:27 மணி

 

Definition of God : The war against knowledge

பிரபு : செப்டம்பர் 25 மதியம் 1.32 மணி

செய்திகளை பகிர்ந்து கொள்ள

Submit வலைவீச்சு : முகநூல் பேசுகிறது in FaceBook Submit வலைவீச்சு : முகநூல் பேசுகிறது in Google Bookmarks Submit வலைவீச்சு : முகநூல் பேசுகிறது in Twitter Submit வலைவீச்சு : முகநூல் பேசுகிறது in Twitter

உண்மையில் தேட

உண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா

wrapper

ஜனவரி 01-15, 2020

  • அப்படிப்போடு அப்படிப்போடு
  • அய்யாவின் அடிச்சுவட்டில் ....: இயக்க வரலாறான தன் வரலாறு (259)
  • ஆசிரியர் பதில்கள்:”குட்டி கார்ப்பரேட் ரங்கநாதய்யர்”
  • ஆய்வுக் கட்டுரை: புலவர் மாவண்ணா தேவராசனின் ‘பெரியார் பிள்ளைத் தமிழ்’ (2)
  • எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை! (69) : கோவில் நுழைவுப் போராட்டம் இன்றைய நிலை!
  • கட்டுரை: புத்தாண்டும் உழவர் போராட்டமும்
  • கவிதை : தமிழர் திருநாளில் உறுதி ஏற்போம்!
  • சிந்தனை: கேள்விகளின் நாயகர் நெய்வேலி க.தியாகராஜன்!
  • சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்: இதழாளர்
  • சிறுகதை: அப்பாவி விவசாயிங்க..!
  • தலையங்கம்: என்று ஒழியும் இந்த மூடத்தனம்?
  • பெண்ணால் முடியும்: குமரியின் முதல் பெண் அய்.பி.எஸ் பிரபினா
  • பெரியார் பேசுகிறார்: கடவுளைப் பற்றிக் கவலை வேண்டாம்!
  • மருத்துவம் :விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! (21)
  • முகப்புக் கட்டுரை : பண்பாட்டுப் படையெடுப்பை பகுத்தறிவால் முறியடிப்போம்!
  • மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்
  • வாசகர் மடல்
  • 2011 இதழ்கள்
  • 2012 இதழ்கள்
  • 2013 இதழ்கள்
  • 2014 இதழ்கள்
  • 2015 இதழ்கள்
  • 2016 இதழ்கள்
  • 2017 இதழ்கள்
  • 2018 இதழ்கள்
  • 2019 இதழ்கள்

Back to Top

© Copyright 2018 - All rights reserved. Designed and Hosted by Periyar Webvision.