கடவுள், மதம், ஜாதி இவை சம்பந்தமான ஆதாரம்

    தென்னாட்டில் வாழும் திராவிட மக்களாகிய -_ தமிழர்களாகிய நமக்குக் கடவுள் இல்லை; மதம் இல்லை; ஜாதி இல்லை; இவை சம்பந்தமான ஆதாரம் இல்லை. ஆனால், கடவுள் விஷயத்தில் அன்பே கடவுள் என்று ஏகாரம் கொடுத்துக் கூறுகிறோம்.மத விஷயத்தில் சைவம் _- வைணவம் ஆகிய இரண்டு மதங்களைக் கூறிக் கொள்ளுகிறோம். இம்மதங்களுக்கு மூலக் கருத்து சிவன், விஷ்ணு என்கிற இரண்டு கடவுள்களைக் குறிப்பாய் வைத்து இம்மதங்களைக் கருதிக்கொண்டு இருக்கிறோம்.நமக்குப் பிறவியினால் ஜாதிப் பிரிவு, ஜாதி பேதம் இல்லை என்கின்றோம். ஆனால், நாம் ஒவ்வொருவரும் ஜாதியின்பாற்பட்டவர் களாகவே இருக்கிறோம்.நமக்கு உண்மையில் கடவுள், மதம், ஜாதி சம்பந்தமான ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஆனால், தேவாரம், திருவாசகம், நாலாயிர பிரபந்தம் முதலியவற்றை ஆதாரமாக - தமிழர்களின் வேதங்களாக - மறைகளாகக் கொள்ளுகிறோம்.இந்த ஆதாரங்கள் சிவனையும், விஷ்ணுவையும் கடவுள்களாகக் கற்பித்த புராணங்களில் உள்ள வெறும் புளுகு _- மூடநம்பிக்கை. அதாவது அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும், அனுபவத்திற்கும் ஒத்துவர முடியாத, கண்மூடித்தனமாக நம்பியே தீர வேண்டியதான, குழந்தைகளுக்குப் பாட்டிமார் சொல்லும் பூச்சாண்டிக் கதைகள் போன்ற கற்பனைகளை நம்பி ஏற்றுக் கொண்டு இருக்கிறோம். நம்மில் பாமர மக்கள் மாத்திரம் அல்லாமல், விஞ்ஞானப் பயிற்சி பெற்ற புலவர்கள், ஆராய்ச்சி அறிவு பெற்ற புலவர்கள், இலக்கிய அறிவு பெற்ற புலவர்கள், பொதுவாகக் கல்வி அறிவு, உலக ஞான அறிவு பெற்ற புலவர்கள் வரையிலும் கூட இந்தத்  தரம் உள்ள ‘அறிஞர்’களாகவே இருக்கிறார்கள்.கடவுளை ஒப்புக் கொண்டால், மதத்தை ஒப்புக் கொண்டாக வேண்டும். மதத்தை ஒப்புக் கொண்டால், ஜாதியை ஒப்புக் கொள்ள வேண்டும். இவற்றை ஒப்புக் கொண்டால், இவற்றுக்கு ஏற்ற ஆதாரங்களை ஒப்புக் கொண்டு ஆக வேண்டும் என்கின்ற நிர்ப்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்ட நிலையில் இருக்கிறோம்.‘பொல்லாத வாய்ப்பின் மேல் வாய்ப்பு ஏற்பட்டது’ போல, நமக்கு ஏற்பட்ட ஆட்சி முறையும், இவற்றைப் பாதுகாத்து வலியுறுத்தி நம் பிடரியின் மேல் ஏற்றும் தன்மையாகவே இருந்து வருகிறது. இதற்கு ஏற்றவண்ணமே நம் நாட்டில் இருக்கிற -_ ஏற்படுகிற சமய, சமுதாய, அரசியல் துறை ‘பொதுநலத் தொண்டர்கள்’ என்பவர்களும் இவற்றை எதிர்க்கவோ, விலக்கவோ கூடாத துணிவற்று வாழ வேண்டியவர்களாகவே இருக்க வேண்டியவர்களாகி விட்டார்கள்.திராவிடர் கழகத்தார்கள் இத்துறைகளில் எதிர்ப்புக் காட்டியும், விளக்கம் சொல்லியும் தொண்டு ஆற்றிவருகிறார்கள் என்றாலும், அவர்களுக்குப் போதிய ஆதரவளிக்க நாட்டில் மக்கள் தகுதி பெறவில்லை என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது. திராவிடர் கழகக் கொள்கைகளை ஆதரிக்க பாமர மக்கள் ஏராளமாக இருந்தபோதிலும், அவர்கள் ஆதரவு முருங்கை மரம் போன்று பயன்படும் தன்மையாக இருந்து வருகின்றது.பாமர மக்கள் நம்ப முடியாதவர்கள். அவர்கள் உள்ளத்தில் நம் கொள்கைகளைப் புகுத்த மாத்திரம் நாம் முயற்சிப்பது பொருத்தமாகுமே தவிர, அவர்களுடைய ஆதரவைப் பெறுவது என்பது அசாத்தியமான காரியம் என்றே கருத வேண்டி இருக்கிறது. உதாரணம் சொல்ல வேண்டுமானால், சாதாரணமாக நம் பிறவி எதிரி பார்ப்பனர் பத்திரிகைகள் இந்த நாட்டில் நடமாடுகிற அளவில் 10இல் ஒரு பாகமாவது, அந்தப் பாமர மக்களுக்கும் படித்த மக்களுக்குமாக பெரும் கஷ்ட நஷ்டத்தோடு நடந்து வரும் பத்திரிகை, மக்களிடத்தில் பரவ வேண்டாமோ! இல்லையே? அதன் காரணம் என்ன என்றால், பாமர மக்களின் தன்மை அவ்வளவுதான் என்பதேயாகும்.“படித்தவர்கள்’’ என்றால் பாமர மக்கள் அல்லாதவர்கள் என்பதல்ல அதன் கருத்து. படித்தும் அறிவு இல்லாத பாமரர் என்பதுதான் கருத்து.நாம் “படித்தவர்கள்தான்’’. படித்தவர்கள் எல்லோரும் அறிவாளிகள் என்று கருதி விட்டால், அந்தக் கருத்து படியாத மக்கள் என்பவர்களுக்குப் பெரும் கேடு செய்ததாகவே முடிந்து விடும். நம் மக்கள் பெரிதும் அறிவு_-இனநலம் பெற முடியாமல் செய்யப்பட பரம்பரையாக ஆனவர்கள் ஆனதால், இன்றைய நிலைக்கு இனியும் இரண்டொரு தலைமுறை ஆகித் தீர வேண்டிய நிலையில் பெரிதும் இருக்கிறார்கள். அதனால்தான் நம் படித்த மக்கள் என்பவர்களுக்கும் முக்கியமாய் இருக்க வேண்டிய அறிவு இல்லாமல் மக்களையும், பாமர மக்கள் குறிப்பிலேயே சேர்க்க வேண்டி இருக்கிறது. (ஏனென்றால், இவர்களது தாய், தந்தையர்களைக் கவனித்தால் சிறிது விளங்கும்).எனக்கு ‘முன்ஜென்மம், முற்பிறப்பு, அவற்றின் விதி’ என்பனவற்றில் சிறிதும் நம்பிக்கை இல்லை. ஆனால் பரம்பரையில், அதற்கேற்ற உடல் _- உள் உறுப்பு _- இவற்றின் தன்மை ஆகியவற்றின் அமைப்பில் நல்ல நம்பிக்கை இருக்கிறது. என் தகப்பனாரின் குணம் என்னிடம் இருக்கக் காண்கின்றேன். என் தகப்பனாரின் அங்க அடையாளம் ஒன்று இரண்டு என்னிடம் இருக்கக் காண்கின்றேன். இந்தப்படிப் பலரிடம் காண்கின்றேன். ஏன், ஆடு, மாடு, நாய் முதலியவற்றிடமும் காண்கின்றேன். மாம்பழக் கொட்டை போட்டால் மாமரம் முளைக்கிறது மாத்திரமல்லாமல், அதன் புளிப்பு, இனிப்பு நிறம் கூட மூலமரத்தின் தன்மையை ஒத்தே இருக்கின்றது. இரண்டு தலைமுறைக்கு முந்திய பெற்றோர் குணமும், உருவச் சாயலும் மிருகங்களுக்கும், மனிதர்களுக்கும் தொடர் கின்றது. ஆதலால், பரம்பரை மறைந்து விடுவது என்பது எளிதில் முடியாதது. வள்ளுவர் ‘ஊழ் முந்துறும்’ என்று சொன்ன ஊழின் கருத்து இதுவே தான். ஆதலால், நமக்கு ஊழ் மறைய பெரும்பாலோருக்கு 2, 3 தலை முறைகளாவது தேவை இருக்கிறது.மற்றும் அறிவில்லாதவர்களுக்கு அவர்கள் எவ்வளவு படித்தாலும், எவ்வளவு செல்வம் இருந்தாலும் அவர்களுக்குச் சுயநலமே முந்துறும். பிறநலம், இனநலம் என்பவற்றைச் சுயநலமாகக் கருதும் தன்மை உள்ளவர்களைத் தான் அறிவாளிகள் என்றும், நல்வழி கண்டுபிடித்தவர்கள் என்றும் சொல்லத்தகும்.ஆதலால்தான் நமக்கு கற்றவர்கள், செல்வர்கள், செல்வாக்கு உள்ளவர்கள் ஆதரவு இல்லை என்பது மாத்திரமல்லாமல், கல்லாத பாமர மக்கள் ஆதரவு இல்லை என்றாலும், நம் கருத்து - முயற்சி வெற்றி பெறவில்லை என்று சொல்ல முடியாது. அதற்கு உதாரணம் நாம், நம் கழகம், நம் பத்திரிகைப் பிரசுரங்கள் ஆகியவை இன்னும் உயிரோடிருப்பதேயாகும்.  இவற்றோடு நமது முயற்சிகள் சிறிதும் தளராதிருப்பதேயாகும்.மற்றும் நமது சமுதாய வாழ்வில் சுற்றுச் சூழலில் கல்வியில், இன நலமோ, பிற நலமோ பெறத் தக்க வாய்ப்பு இல்லை. நமக்குள் இனப் பிரிவு வெட்கப்படத்தக்க தன்மையில் இருந்தாலும் அதன் பேராலும் சுயநலமடையும் அளவுக்கு அதைப் பயன்படுத்திக் கொள்ளுகிறோம்.இதற்கு இப்படிப்பட்ட மக்கள் மீதே குற்றம் சொல்ல முடியாதபடி இனஉணர்ச்சி நம்மில் இருப்பதால், மக்கள் இந்த இன உணர்ச்சிக்கு ஆளாக நேரிடுகிறது என்றும் சொல்லலாம்.நிற்க.எடுத்துக் கொண்ட விஷயமாகிய கடவுள், மதம், ஜாதி ஆதாரம் ஆகிய விஷயங்களுக்குச் செல்லுகிறேன். “கடவுள் என்றாலே அறிவைப் பயன்படுத்தக்  கூடாதது’’ என்று தான் பொருள். ஆனால், கடவுள் நம்பிக்கைக்காரர்கள் இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். “கடவுள்கள் என்றாலே காரண - காரியம், ஆதி _- அந்தம், இறப்பு _ பிறப்பு கூற முடியாதது மாத்திரமல்லாமல், கேட்கவே முடியாதது என்ற தத்துவமுடையது. ஆதலால் கடவுளுக்கு இவை கேட்பது நாத்திகமாகும்’’ என்று சொல்லி விடுவார்கள்.ஆனால், கடவுளைக் கற்பிப்பவர்கள், “உலகத் தோற்றத்திற்குக் காரண காரியம் வேண்டாமா? அதுதான், உலகுக்குக் காரணகாரியமாக இருப்பது கடவுள்’’ என்று சொல்லுகிறார்கள். எது எப்படியோ போகட்டும் என்றாலும், தமிழர்களாகிய நமக்குக் கடவுள் உண்டா? கடவுள் ‘இலட்சணத்திற்கு’ உட்பட்ட கடவுளை யாவது நாம் கொண்டு இருக்கிறோமா? சிவனும், விஷ்ணுவும் கடவுள் ஆனவர்களா கடவுள் தன்மை அல்லது கடவுள் இலட்சணம் கொண்டவர்களா என்பதைக் கூட “இயற்கையை வணங்கினார்’’ என்கின்ற தமிழன் சிந்திப்பதில்லை என்றால், தமிழன் இன்னமும் பகுத்தறிவு பெற்ற மனிதப் பரம்பரைக்கு வரவில்லை என்றுதானே அர்த்தம்?சிவனையும், விஷ்ணுவையும் உருவகப்படுத்தி இருக்கும் தன்மை கடுகளவாவது மனிதத் தன்மைக்கு ஏற்றதா என்று தமிழர்களில் யார் சிந்திக்கிறார்கள்? அதுபோலவே, மதம் விஷயத்திலும் எதற்காக மதம் என்பதைத் தமிழர்களில் தெரிந்து கொண்டவர்கள் யாரும் எனக்குத் தென்படவில்லை. உலகின் மதங்கள் பல இருந்தாலும் அவை அந்தந்த மத மக்களை ஈடேற்றவும், ஒழுங்குபடுத்தவும், ஒற்றுமை, கட்டுப்பாடு, சகோதர உணர்ச்சி ஏற்படவும் பயன்படுத்தப்படுகிறது. அதற்காகவே இருந்தும் வருகிறது. இக்கருத்துகளில் சிறிதாவது வெற்றி பெற்றிருக்கின்றன. ஆனால், நம் மதம்?‘விடுதலை’ நாளிதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை-‘விடுதலை’  2.2.1959      செய்திகளை பகிர்ந்து கொள்ள

அவர் எப்படி இந்துத்வ அம்பேத்கர்? - 15

                                                                      இந்து மதமா? பார்ப்பன மதமா?மனு சாஸ்திரம் கூறுகிறது: “ பிறப்பினால் உயர்ந்த இடத்திலிருந்து தோன்றியதாலும் உயர்ந்த குலத்தாலும் வேதங்களைப் பிழையறக் கற்றுணர்ந்த அறிவினாலும் பூணூல் தரித்துள்ள சிறப்பினாலும் பார்ப்பனர் அனைத்து வருணத்தாருக்கும் தலைவனாக உள்ளனர் என்கிறது. காரண காரிய வாதம் எப்படி? எவரையும் படிக்கவிடாமல் இவன் மட்டுமே படித்துவிட்டது தகுதியா? எவரையும் போடவிடாமல் இவர் மட்டுமே பூணூல் போட்டுக்கொண்டதால் உயர்ஜாதியா? மற்ற வருணத்தாருக்கும் தலைவனா? இதைத்தான் ஒரு குலத்துக்கொரு நீதி என்கிறார்கள். “சூத்திரர்க்கு ஒரு நீதி/தண்டச்சோறுண்ணும் பார்ப்புக்கொரு நீதி/என்று சாத்திரம் சொல்லிடுமாயின் அது சாத்திரமன்று; சதியென்று கண்டோம்’’ என்றான் பாரதி!“பார்ப்பனன் இந்து சமூக அமைப்பின் மாமனிதன் என்ற வகையில் பல வகை சலுகைகள் பெறுவதற்குரியவனாகிறான். முதலாவதாக, கொலைக்குற்றம் சாற்றப்பட்ட போதிலும் பார்ப்பனனுக்குத் தூக்குத் தண்டனை கிடையாது (மனு:10-3) பார்ப்பனன் எத்தகைய ஒழுக்கம் கெட்டவனாக பிறர்மனை நயப்பவனாக இருந்தபோதிலும் அவனைக் கொல்லக் கூடாது. அவனது தலைமயிரை மழித்து அவமானப்படுத்துவதோடு நின்றுவிட வேண்டும். ஏனையோருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்’’ (மனு:8_379) என்றால் கொலை செய்தால் பார்ப்பானுக்குச் சிகைச்சேதம், மற்றையோர்க்கு சிரச்சேதம் என்றால்... இது மதமா? என்று கேட்டவர் அம்பேத்கர். (தொகுப்பு நூல் 6 பக்கம்:160)“பார்ப்பனர்க்கு எத்தனை எத்தனையோ உரிமைகள் வழங்கப்பட்டுள்ளபோதிலும் கடமைகள் ஏதுமில்லை. சாதாரண மனிதர்க்கு வாழ உரிமையேதுமில்லை. சுதந்தரமோ, சொத்து சுகத்தை அனுபவிக்கவோ அவனுக்கு வாய்ப்பில்லை. உயர்ஜாதியினரின் வாழ்வு வளத்திற்காகவும் மேம்பாட்டிற்காகவும் தன்னுடைய நலன்கள் அனைத்தையும் இழக்க வேண்டிய நிலையில் சாமான்யன் வைக்கப்பட்டுள்ளான். அத்தகைய இழப்பைக் கட்டாயமாக்கியும் இந்து சமூக அமைப்பு வைத்துள்ளது. உயர்ஜாதியினரின் நன்மைக்காக சாமான்யன் இழப்பை ஏற்பது அவனுடைய தலையாய கடமை என்பதையும் சாமான்யனின் மனதில் ஆழப்பதிய வைத்துள்ளது இந்து மதம்’’ என்கிறார் அம்பேத்கர் (தொகுப்பு நூல் 6, பக்கம்: 167)ஜெர்மானியரான நீட்ஷே என்பவர் 1883இல் வெளியிட்ட கருத்தின்படி அவரது ஆசை மாமனிதனான சிறந்த மனிதரினத்தைப் (ஸிணீநீமீ ஷீயீ ஷிuஜீமீக்ஷீனீணீஸீ) படைக்க வேண்டுமென்று விரும்பியவர். தோற்றவர். அதற்கு நேர்மாறாக உயர்ஜாதியினர் எனக் கருதிக்கொண்டோர்க்காக சிறப்பு உரிமைகளை அளித்துக் கட்டிக் காப்பாற்றி வளர்த்தது இந்து மதம் என்றார் அம்பேத்கர். “அவர்கள் எவ்வளவு இழிந்த தொழில்களைச் செய்தாலும் அவர்கள் போற்றுதலுக்குரியோர். மனித அறிவுக்கெட்டாத ஒருவகைத் தெய்வீகத் தன்மை பெற்றவர்கள்’’ எனச் சொல்கிறது மனுதர்மம். பார்ப்பனர் இந்து மதத்தைத் தூக்கிப் பிடிப்பது இதனால்தான்!பேசுவதிலும் பேதம்மனிதர்களை நால்வருண மாக்கியதோடு நில்லாமல் சவர்ணர் என்றும், அவர்ணர் என்றும் இரண்டு குரூப் ஆகவும் பிரித்தது இந்து மதம். மொழியிலேயே அவர்ணர் பேசக் கூடாத சொற்கள் என்றும், பாகுபாடு கற்பித்தும் மீறிப் பேசிவிட்டால் கடுந்தண்டனை தருவதும் இந்து மதமே! 1936 நவம்பர் 4ஆம் நாளது பம்பாய் ‘சமாசார்’ ஏட்டில் வந்த செய்தியை அம்பேத்கர் குறிப்பிடுகிறார். மலபாரில் உள்ள ஒத்தப்பாலம் என்ற இடத்தில் ஈழவர் சிவராமன் (17 வயது) சவர்ணர் ஒருவரின் கடையில் உப்பு வேண்டும் என்று கேட்டார். உப்பு எனும் சொல்லை மலபாரில் அவர்ணர் சொல்லக் கூடாதாம். புளிச்சாட்டான் எனக் கூறவேண்டுமாம். காரணம் அவர் தாழ்த்தப்பட்டவர். இதனால் கோபமடைந்த கடைக்காரர் சிவராமனைக் கடுமையாக அடித்தார். சிவராமன் இறந்து போனார். இதுதான் இந்துமதக் கொடுமை! (பக்கம் 84, தொகுப்பு நூல் 6)மராட்டியத்தில் தாழ்த்தப்பட்டோர் ராம்ராம் என்றோ நமஸ்கார் என்றோ சொல்லக்கூடாதாம். அவற்றை சவர்ணர்தான் கூறவேண்டும். அவர்ணர், “பாயா லாகு’’ என்றுதான் கூற வேண்டுமாம். பாயா லாகு என்றால், தங்கள் பாதங்களைத் தொடுகிறேன் என்று பொருள்! இத்தகைய மொழி வருணப் பாகுபாடு இந்து மதமல்லால் வேறு மதங்கள் கடைப் பிடிக்கின்றனவா? எனவேதான் இந்துமதம் சீர்திருத்தப்படவே முடியாத கேடுகெட்ட மதம்!அம்பேத்கர் இந்து மதத்தினை வேரோடு கெல்லி எறியவே விரும்பினார். அதற்காகவே பாடுபட்டார். அதனை மறைக்க இந்துத்வர்கள் முயல்வது கைக்குட்டையால் சூரியனை மறைக்க முயலும் முட்டாள்தனமான முயற்சி! ‘இந்துவாகச் சாகமாட்டேன்’ என்று 1935இல் சூளுரைத்தவர், 1950இல் இந்திய நாடே பவுத்தத்தைத் தழுவ வேண்டும் எனப் பேசினார். (‘தி சன்டே நியூஸ்’ 1.10.1950) தம் வாழ்வின் எஞ்சிய பகுதியை புத்த நெறியைப் புதுப்பிக்கவும் பரப்பவும் அர்ப்பணிக்கப் போவதாகப் பிரகடனம் செய்தார்.சாவர்க்கரைச் சாடியவர்இதனால் பாதிக்கப்பட்ட இந்துத்வ கர்த்தா, இந்து மதத்தால் உயர்நிலையில் வைக்கப்பட்டுச் சகல போகங்களையும் எளிதாக அனுபவிக்கும் வாய்ப்பைப் பெற்ற சித்பவன் பார்ப்பனரான வினாயக் தாமோதர் சாவர்க்கர், அம்பேத்கரைக் கடுமையாகத் தாக்கிக் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்தார். அவர் என்ன எழுதினார் என்பது திட்டவட்டமாகத் தெரிந்தால் கடும் பதிலடி கொடுப்பேன் என்றார் அம்பேத்கர். அவருடைய பேச்சில் கோபம் கொப்பளித்தது. “இந்துமதம் கடவுள் இருக்கிறது என நம்புகிறது. பவுத்தத்துக்கு கடவுள் இல்லை. இந்துமதம் ஆத்மா என ஒன்று உள்ளது என்கிறது. பவுத்தத்தின்படி ஆன்மா இல்லை. இந்து மதம் சதுர்வர்ணம், ஜாதிகளையும் ஏற்கிறது. பவுத்தத்தில் இதற்கு இடமில்லை’’ என்று தாம் இருந்த மதத்தையும் தழுவப் போகும் நெறியையும் ஒப்பிட்டுப் பேசினார். (தொகுப்பு நூல் 6, பக்கம்: 660_661)பரிதாபத்திற்குரிய தமிழக இந்துத்வர்கள் சாவர்க்கார், அம்பேத்கரின் நெருங்கிய நண்பர், ஆலோசகர், என்றெல்லாம் புளுகுமூட்டைகளை அவிழ்த்துக் கொட்டுவதை இனியாவது நிறுத்திக் கொள்ளட்டும். மாமேதை அம்பேத்கர் மாற்றுக் கருத்து கொண்டோருடனும் நனி நாகரிகத்துடன் பேச வேண்டும், பழக வேண்டும் எனும் உயரிய பண்பாடு கொண்டவர். அதை இந்துத்வ கால்வேக்காடுகள் “நல்ல நண்பர்கள்’’, ஆலோசகர்கள் என்றெல்லாம் பிதற்றுகின்றனர்.    (கேள்விகள் தொடரும்)      - சு.அறிவுக்கரசு      செய்திகளை பகிர்ந்து கொள்ள

2-ஜி வழக்கில் தீர்ப்பு ஆ.இராசா, கனிமொழி குற்றமற்றவர்கள் !

அபாண்ட பழிபோட்ட ஆரிய பார்ப்பனர்களே ஏற்பட்ட இழப்புகளுக்கு என்ன பதில் சொல்வீர்?மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. இராசா அவர்களை பதவி விலக வைத்து, அதன்மூலம் தி.மு.க.விற்குப் பழியை, -களங்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்று, திட்டமிட்டு நடத்தப்பட்டது 2-_ஜி வழக்கு.உயர்ஜாதி ஆதிக்க அரசியல் கட்சிகள், ஊடகங்கள், தொலைக்காட்சியினர் ஒன்று சேர்ந்து நடத்திய கூட்டுச் சதி!இரண்டாவது, தி.மு.க.வை காங்கிரஸ் கூட்டணியிலிருந்து எப்படியாவது வெளியேற்றி விட இது ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டது.‘டிராய்’ என்ற தொலைத்தொடர்பு அமைப்புதானே இதனை முடிவு செய்தது -_ பிரதமர் ஒப்புதலுடன்தானே இத்தகைய நடவடிக்கைகள் நடந்துள்ளன?இவற்றை நாடாளுமன்ற மக்களவையிலே அமைச்சர் ஆ.இராசா மிகத் தெளிவாக, ஆணித்தரமாக விளக்கினாரே, அதை மறுக்க முடியுமா?இதே இராசா 3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் பல கோடி ரூபாய்கள் அதிகம் விட்டு, மத்திய அரசின் கருவூலத்திற்கு 66,980 ஆயிரம் கோடி ரூபாய் பெருவருவாய் தந்தாரே _- அதற்கு சிறு பாராட்டினை இவர்கள் யாரும் தெரிவித்தார்களா?மத்திய அமைச்சரவை என்பது பிரதமரின் தலைமையில் கூட்டுப் பொறுப்பு உள்ள ஒன்று அல்லவா? இதில் தனியாக ஒருவரை பலிகடாவாக்க முயற்சித்தது எந்த வகையில் ஜனநாயகம் - அமைச்சரவையின் அறம் ஆகும்?மத்திய அரசின் பதில் மனு என்ன கூறுகிறது?ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடும், மதிப்புத் தொகையும் அரசின் கொள்கை முடிவுகளில் வருபவை. இவற்றை நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியாது.1999ஆம் ஆண்டில் மத்திய அரசு எடுத்த புதிய தொலைத் தொடர்புக் கொள்கையின் அடிப்படையில் ஒதுக்கீடு நடைபெற்றுள்ளது. அய்ந்தாண்டுத் திட்டங்களில். அடையாளம் காணப்பட்ட நெறிமுறைகளும் டிராய் (ஜிஸிகிமி) அமைப்பின் பரிந்துரைகளும் கொண்டுதான் செயல்படுத்தப்பட்டன.செல்பேசிக் கட்டணங்கள் குறைக்கப்பட்டு நெருக்கடியான அலைவரிசைகள் இலகுவாக்கப் பட்டு, சேவை வழங்கப்பட வேண்டும் என்பது தான்  புதிய போட்டியாளர்களை அனுமதித் ததற்கான காரணம். -இதனால்  கட்டண வருவாய் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டுள்ளது.இப்புதிய முறையினால், அரசின் வருவாய் அதிகமாகிக் கொண்டே வருகிறது. 2002-_03ஆம் ஆண்டில் ரூ.5,384 கோடியாக இருந்த ஸ்பெக்ட்ரம் உரிமக் கட்டணம் 2009_-10ஆம் ஆண்டில் ரூ.13,723 கோடியாக உயர்ந்து வந்துள்ளது. அரசின் வருவாய்ப் பங்கு 2010 மார்ச் வரை ரூ.77,938 கோடி வசூலாகியுள்ளது. அரசின் துறைகளில் மிக அதிகமான வரியில்லாத வருவாயாகவும் இதுவே அமைந்துள்ளது.இதனால் ஒரு நிமிடத்திற்கு ஒரு ரூபாய் என்றிருந்த செல்பேசிக் கட்டணம் வெறும் 30 பைசாவாகக் குறைக்கப் பட்டுள்ளது. நொடிக்கு நொடி கட்டண முறை எல்லா நிறுவனங் களிலும் அறிமுகமாயுள்ளது. உரிமங்கள் மற்றும் 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகள் 2003 நவம்பர் மாதத்திலிருந்து வெளிப்படையான முறையில் கடைப்பிடிக்கப் பட்டுவரும் முறையாகும். 31.-10.-2003இல் மத்திய அமைச்சரவை எடுத்த முடிவின்படி எத்தகைய மாறுதலும் இல்லாமல் அப்படியே கடைப்பிடிக்கப்பட்டு வருவதாகும்.இம்முறைதான் உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்தந்த நாட்டின் பொருளாதார நிலைகளுக் கேற்ப, தனியார் துறையினர் அனுமதிக்கப் படுகின்றனர். 1994இல் நம் நாட்டில் தேசிய தொலைத் தொடர்புக் கொள்கை தனியார் துறையினரும் பங்கு பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஏலம் விடப்படக் கூடாது எனும் முடிவு 10, 11 ஆம் அய்ந்தாண்டுத் திட்டங்களின் முடிவுகளின்படி நடந்துள்ளது.முதலில் விண்ணப்பித்தவருக்கு முன்னுரிமை என்று வழங்கப்பட்டுள்ளது.பிரதமர் கருத்து அலட்சியப்படுத்தப்படவில்லைபிரதமரின் கருத்து அலட்சியப் படுத்தப் பட்டது என்பது கற்பனை. உரிமம் வழங்குவது பற்றிய நடவடிக்கைகள் அனைத்தும் உடனுக்குடன் பிரதமரின் முதன்மைச் செயலாளருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளன. 26.-12.-2007இல் அமைச்சரே பிரதமருக்கு எழுதி தாமதமோ, விதி மீறலோ இல்லாதவகையில் அரசின் முடிவுகள் நடை முறைப்படுத்தப் பட்டுள்ளன என்பதைத் தெரிவித்துள்ளார்.பொய்ப் பரப்புரைஎதிர்க்கட்சிகள் திட்டமிட்டு பொய்ப் பரப்புரை செய்தன. ஏகபோக முதலாளித்துவ ஏடுகளும் மின்னணு ஊடகங்களுமே ஊதி ஊதிப் பெரிதாகக் காட்டின. அரசின் கொள்கை முடிவுப்படியும், 5 ஆண்டுத் திட்ட நெறிமுறைத் திட்டங்களின் படியும், டிராய் அமைப்பின் பரிந்துரைகளை அமைச்சரவைக் குழு ஏற்றுக் கொண்ட முடிவுகளின்படியும் 2 ஜி உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பது தெளிவு.ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கூறியது போல், அய்ந்தாம் முறை தமிழ்நாட்டில் பொற்கால ஆட்சி, தமிழ்நாட்டின் அசோகரான தி.மு.க. தலைவர் மானமிகு கலைஞர் அவர்கள் தலைமையில், இந்தியாவே கண்டு வியக்கத்தக்க வகையில் நடைபெற்று பீடுநடை போட்டது.மத்தியில் அய்.மு. கூட்டணியில் தனது பங்கை சிறப்புடனும், சுருதி பேதமின்றியும், கூட்டணித் தலைமையுடன் சுமுக உறவு கொண்டு, முன்பு அவர்கள் தமிழ்நாட்டில் தவறான கூட்டணியில் சிக்கி அனுபவித்த தலைவலி எதுவும் இன்றி ஒருங்கிணைந்த முன்னேற்றத்தை ஏற்படுத்தும் ஆட்சியாக தி.மு.க. ஆட்சி நடைபெற்றது. இதைப் பொறுக்க முடியாத ஆரிய ஆதிக்கக் கூட்டம் ஆடிட்டர் ஜெனரல் அறிக்கை -2ஜி ஸ்பெக்ட்ரம் பிரச்சினை கிடைத்ததை ஏதோ ஒரு புதையல் கிடைத்ததைப்போல எண்ணி, அதைப் பெரிதாக ஊதி ஊதி, மயிரைச் சுட்டுக் கரியாக்கிக் காட்டினர்.பார்ப்பனச் சக்திகள்- முதலாளிகளின் கூட்டணி!இதற்காகவே  சில ஊடகங்கள், பார்ப்பன ஆதிக்கச் சக்திகள், ஏகபோகத்தை இழந்த முதலாளிகள், கூட்டணி சேர்ந்து தங்களிடம் உள்ள சில நாளேடுகள், வார ஏடுகள், தொலைக்காட்சி ஊடகங்களை பிரச்சாரக் கருவிகளாக்கி, தி.மு.க. அமைச்சர் ஆ.இராசாமீது வேட்டையாடி நாளும் கடித்துக் குதறின. அவரது ராஜினாமா பெற்றுவிட்ட பின்பு, நாடாளுமன்றத்திற்கு வந்து விவாதங்களில் கலந்து, தங்களிடம் உள்ள ஊழல் களஞ்சியங் களையெல்லாம் அவிழ்த்துக் கொட்டி விவாதிக்க வேண்டியதற்குப் பதிலாக, 8 நாள்கள் விவாதம் நடத்த முன்வரப் பயந்தனர். நேர்மை, உண்மை இல்லை அவர்களிடம். நாடாளுமன்ற கூட்டுக் குழுவால் இதுவரை ஏற்பட்ட பலன் என்ன?J.P.C. (Joint Parliamentary Committee) விசாரணை ஏற்கெனவே நடைபெற்றதே _- அதனால் ஏற்பட்ட பலன் என்ன?1. போஃபர்ஸ் பீரங்கி வாங்கிய ஊழல் -_ 1987ஆம் ஆண்டு2. பங்குச் சந்தை ஊழல் -_ அர்ஷத் மேத்தா 1992 (ரூ.1000 கோடி ஊழல் - அனுமானம் அல்ல, நடந்தது)3. பங்குச் சந்தை தரகர் கேதன் பராக் 1999 முதல் 2001 வரை4. பூச்சிமருந்து கோக்கோகோலா ஊழல்_2004   (ஜே.பி.சி. _- விசாரணையால் எந்தத் தீர்வாவது கிடைத்ததா?) இல்லையே!2ஜி ஊழல் என்பது ஒரு கற்பனை2ஜி ஸ்பெக்ட்ரம் என்பது  ஊழலே அல்ல; அனுமான கற்பனை. இப்படி செய்திருந்தால், அப்படிக் கிடைத்திருக்குமே என்ற ஒரு புள்ளி விவரக் கணக்கு. இதனை வைத்துப் பாமரர்களை ஏமாற்ற ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் உலகிலேயே உண்டா என்ற முதலைக் கண்ணீர் வெள்ளம் என்று ஏமாற, மக்கள் எல்லாம் முட்டாள்களா? ஏமாளிகளா? பாமரர்கள் சரியாக இருக்கின்றனர் - படித்த தற்குறிகள்தான் குழப்பமடைந்தனர்.தி.மு.க. மீண்டும் ஆறாவது முறையாக தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்கான மனுவாதிகளின் மகத்தான சதித் திட்டமே இது!ஆ.இராசா பதவி விலகிய நிகழ்ச்சி மிகப் பெரிய போராட்டத்தின் தொடர்ச்சி, மண்டல் கமிஷன் ஆணையை வி.பி.சிங் அவர்கள் நடைமுறைப்படுத்தினார். அப்பொழுது ஊடகங்கள் என்ன செய்தன தெரியுமா? இட ஒதுக்கீடு தொடர விட்டு விடக் கூடாது என்று நினைத்த பார்ப்பன ஊடகத்தினர் அப்பாவி மாணவர்களைப் பிடித்து நீங்கள் தீக்குளிப்பதுபோல நாடகமாடுங்கள். உங்களுடைய முகம் தொலைக்காட்சியில் தெரிய வரும். உங்களுடைய முகங்கள் ஆங்கிலப் பத்திரிகைகளிலே வரும் என்று சொல்லி அவர்களை ஏமாற்றி உண்மையிலேயே தீக்குளிக்க வைத்து எரித்துக் கொன்றனர். பிறகு ஊடகத்துறையினரே அதை ஒப்புக்கொண்ட ஆதாரங்கள் உள்ளன.தாழ்த்தப்பட்ட சகோதரன் பெரிய பதவியில் இருப்பதா?ஒரு தாழ்த்தப்பட்ட சகோதரன் ஆ.இராசா உயர்ந்து அமைச்சராகப் பெரிய பதவியில் இருப்பதா? அவரை ஒழித்துக்கட்டிவிட வேண்டும் என்று திட்டமிட்டுச் செய்த சதி இது.வாதாடத் தயாரா?எங்களோடு வாதாட யாராவது தயாராக இருக்கிறீர்களா? என்று தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பலமுறை சவால் விட்டாரே, எவராவது முன்வந்தார்களா? இல்லையே!உலகத்திலேயே இங்குதான் குறைந்த கட்டணம்அது மட்டுமல்ல; தொலைப்பேசி கட்டணம் உலகத்திலேயே மிகவும் மலிவாக இருக்கக்கூடிய ஒரு நாடு என்றால் அது நம்முடைய நாடுதான் என்கிற பெருமை யாரால் உருவாக்கப் பட்டது? அமைச்சர் ஆ.இராசாவால் உருவாக்கப்பட்டது. அவருடைய குருவின் பேனாவால் உருவாக்கப்பட்டது.ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு என்றுதான் சொல்லுகிறீர்கள். அப்படியானால் அது எப்படி ஊழலாகும்? ஆ.இராசா யாரிடமாவது பணம் வாங்கினாரா? ஆதாரம் உண்டா? வீடியோ ஆதாரம் உண்டா? பா.ஜ.க. பங்காரு லட்சுமணன்  மற்ற அமைச்சர்கள் பணம் வாங்கியதற்கு வீடியோ ஆதாரம் இருந்ததே!   (டெகல்கா வெளியீடு)தொலைதொடர்புத் துறையில் ஆ.இராசா பதவி வகித்த காலத்தில் உத்தேச இழப்பு. இது அனுமானமானதே தவிர, கற்பனையே தவிர உண்மையிலேயே பணமில்லையே.பா.ஜ.க. ஆட்சியில் ரூ.50 ஆயிரம் கோடி இழப்புபி.ஜே.பி. ஆட்சி காலத்தில் தொலை தொடர்புத் துறை அமைச்சர் அருண்ஷோரி 50,000 கோடி ரூபாயை அரசு பணத்தை எடுத்துத் தந்திருக்கிறாரே, இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்? அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி யிருக்கிறாரே, இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?1999ஆம் ஆண்டில் -பாரதீய ஜனதா ஆட்சியில், வாஜ்பேயி அவர்கள் பிரதமராக இருந்த காலகட்டத்தில் -கடைப்பிடிக்கப்பட்ட தொலைத்தொடர்பு கொள்கையினால், மத்திய அரசுக்கு ஏற்பட்ட இழப்புத் தொகை ஒரு லட்சத்து 43 ஆயிரம் கோடியாகும் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.ஆ.இராசா காலத்தில் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகம் 2001இல் 3 கோடி தொலைப்பேசி பயனாளிகள் இருந்தனர்; 2009இல் (அமைச்சர் இராசா காலம்) இது 79 கோடியாக உயர்ந்து, நாட்டின் தொழில் வர்த்தகப் புரட் சிக்கும் உதவியது என்பதைக் குறிப்பிடத் தவறவில்லை அமைச்சர் கபில்சிபல்.சி.பி.அய்.யிடம் சிக்கிய ஆர்.எஸ்.எஸ். தலைவர்ஒரு ஆர்.எஸ்.எஸ். தலைவரை சி.பி.அய். பல மணி நேரம் குடை குடை என்று குடைந் திருக்கிறது. ஆனால், இந்த சி.பி.அய்களைத் தாண்டி வரக்கூடிய ஆற்றல் இராசாவுக்கு உண்டு. காரணம், அவர் பயின்ற பள்ளிக் கூடம் திராவிடர் இயக்கத்துப் பள்ளிக்கூடம்.நெருக்கடி காலத்தையே சந்தித்தவர்கள்நெருக்கடி காலத்தைவிட மோசமான காலம் இனிமேல் வரப்போவதில்லை. அதைச் சந்தித்த இடம்தான் கோபாலபுரம். அதைச் சந்தித்தவர் கள்தான் தி.க. மற்றும் தி.மு.க.வினர். மக்கள் குரல் என்ற அய்யங்கார் பத்திரிகையில் எழுதினார்கள். அன்னை மணியம்மையார் பெரியார் திடலில் இருக்கின்றார். பெரியார் திடலுக்கு வெளியே நோட்டீஸ் ஒட்டினார்கள்.இந்தச் சொத்துகள் ஜப்தி செய்யப்படும் என்று சொன்னார்கள். ஏன், பெரியார் திடலுக்கு வருமான வரித்துறையினர் சென்றார்கள் என்றால், கருணாநிதியின் கருப்புப் பணம் அங்கேதான் உள்ளே இருக்கிறது என்று சொன்னார்கள்.தி.க.விடம் ஏது கருப்புப் பணம்? இல்லையென்பது அவர்களுக்குத் தெரியும். தெரிந்தும், வேண்டும் என்றே அவ்வளவு கொச்சைப்படுத்தினார்கள். அவ்வளவு கேவலப் படுத்தினார்கள். பார்ப்பனர்களே, நீங்கள் என்னதான் குட்டிக்கரணம் போட்டாலும் மீண்டும் நீங்கள் எவ்வளவு அதிகமாக இந்தப் பிரச்சாரத்தைச் செய்கிறீர்களோ அந்தளவுக்கு அடிக்க அடிக்க எழும் பந்துபோல எழுந்து மக்கள் மனுதர்மத்தை, ஆரியத்தை குழி தோண்டிப் புதைப்பார்கள்.எப்படியும் நீதி வெல்லும் என்பது 2ஜி வழக்கில் நடந்துள்ளது. காரணம், ஒரு நல்ல நேர்மையான நீதிபதியிடம் இவ்வழக்கு வந்ததுதான். இந்த வழக்கை வைத்து அரசியல் ‘சித்து’ ஆட நினைத்த அதிகார வர்க்கத்திற்கெல்லாம் அஞ்சாது, உண்மை அறிந்து நீதி வழங்கி யிருப்பது மதித்து, பாராட்டத்தக்க மாண்பமை நீதியாகும்!அடிப்படையற்ற ஆதார மற்ற, புனையப்பட்ட உள்நோக்கம் உடைய வழக்கு என்று நீதிபதி கண்டித்துள்ளார். க ணக்குத் தணிக்கை உயர் அலுவலர், உள்நோக்கத்துடன் கற்பனையாய் கூறிய குற்றச்சாட்டு இது என்றும் நீதிபதி சாடியுள்ளார். அபாண்டமாக உள்நோக்கத்தோடு பழி போட்ட 2ஜி வழக்கில் அனைவரும் குற்ற மற்றவர்கள் என விடுதலை செய்யப் பட்டிருப்பதும், அந்த நீதியைப் பெற மன உறுதியுடன் பல ஆண்டுகள் போராடிய வர்களுக்கும் நன்றியும் பாராட்டுகளும் உரியன!தொடக்கம் முதலே இது புனையப்பட்ட மோசடி வழக்கு என்று பல கட்டங்களில் ஆதாரங்களோடு சவால்விட்டு விளக்கியவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். அவரின் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி இந்தத் தீர்ப்பு. இது திராவிட இயக்கங்களுக்கே கிடைத்த வரலாற்று வெற்றி!இராஜீவ்காந்தி கொலைப்பழி போலஇராஜீவ்காந்தி கொல்லப்பட்டவுடன் ஆரிய பார்ப்பனர்களும் அவர்களின் ஊடகங்களும் தி.மு.க.வினர்தான் இராஜீவ்காந்தியை கொன்று விட்டனர் என்று ‘தினமலர்’ போன்ற ஆரியப் பார்ப்பன ஊடகங்கள் பொய்யான தகவலைப் பரப்பி அத்தேர்தலில் தி.மு.க.வைத் தோற்கடித்தனர். இலங்கைப் பிரச்சினையில் தமிழர்கள் அழிக்கப்பட தி.மு.க. காரணம் என்று ஒரு பொய்யான கருத்தைப் பரப்பி அடுத்தத் தேர்தலில் தி.மு.க.வைத் தோற்கடித்தனர்.2ஜி என்ற பொய்யான வழக்கைத் தொடுத்து அதற்கடுத்த தேர்தலில் தோற்கடித்தனர். ஆக அபாண்டமாய் _ மோசடியாய் கருத்து பரப்பியே தி.மு.க.வை வீழ்த்தி வருகின்றனர்.ஏற்பட்ட இழப்பை ஈடு செய்வீர்களா?இப்போது தீர்ப்பில் இராசா, கனிமொழி உட்பட அனைவரும் குற்றமற்றவர்கள் என்று உறுதி செய்யப்பட்டு விட்டது. ஆனால், அவர் இழந்த பதவியை, அவர்கள் அடைந்த தண்டனையை, அவமானத்தை, மன உளச்சலை, உடல்நலக் கேட்டை, தி.மு.க.வின் இழப்பை - தோல்வியை அதன் வழி தமிழ்நாடும், தமிழக மக்களும் அடைந்த பாதிப்பை இந்த மோசடி வழக்கு புனைந்த ஆரிய ஆதிக்கக் கூட்டத்தால் ஈடு செய்ய முடியுமா? திட்டமிட்டுப் பிரச்சாரம் செய்த ஊடகங்களால் ஈடுசெய்ய முடியுமா? உங்களுக்கெல்லாம் உள்ளம் என்று ஒன்று இருந்தால், அதில் உளச்சான்று ஓரளவாவது ஒட்டிக் கொண்டிருந்தால், உண்மை உணர்வு, சூடு சொரணை இருந்தால் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்! மக்களுக்குச் சொல்லுங்கள்! அடுத்து வரப்போவது தி.மு.க. ஆட்சிதான், திராவிடர் ஆட்சிதான் என்ற சூளுரையை இப்போது எடுத்துக் கொள்வோம். பார்ப்பன ஊடகங்களே! நீங்கள் திராவிடர் இனத்தின்மீது வீசுகின்ற குப்பைகள், கூளங்கள், மலங்கள், சேறுகள் எல்லாம் எங்கள் கொள்கை வயலுக்கு இட்ட உரங்கள், உரங்கள்!                                                                                                                         - மஞ்சை வசந்தன்    செய்திகளை பகிர்ந்து கொள்ள

இந்தியக் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து இல்லை!

இந்தியாவில் உள்ள குழந்தைகளில் பாதி பேருக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளது என்று கடந்த நவம்பர் 4ஆம் தேதி வெளியாகி உள்ள “2017 குளோபல் நியூட்ரிஷியன் ரிப்போர்ட்’’ தெரிவிக்கிறது. அய்ந்து வயதுக்குட்பட்ட 38% குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாம். அதில் 21% குழந்தைகள் உயரத்திற்கு ஏற்ற எடையின்றித் தவிப்பதாகச் சொல்கிறது அந்த அறிக்கை.இதில், 6 முதல் 59 மாதங்களான குழந்தைகளில் 58.4% பேருக்கு ரத்த சோகை பிரச்சினை உள்ளது என்பது அதிர்ச்சித் தகவல். மக்கள் தொகையில் ஆறு வயதுக்கும் குறைவான குழந்தைகளின் விகிதம் 13.6% என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.செய்திகளை பகிர்ந்து கொள்ள