ஜூன் 01-15_2010

பொருளடக்கம்


Contant

 


பதிவுகள்

 

வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களை இந்தியாவில் அனுமதிக்கும் சட்டவரைவு மக்களவையில் மே 3 இல் தாக்கல் செய்யப்-பட்டது.

தமிழக மேல் _ சபைக்கான சட்டவரைவு, டெல்லி மேல் _ சபையில் மே 5 இல் நிறைவேற்றப்-பட்டது.

அய்ஸ்லாந்தில் உள்ள வோல்ஸ்வொல்லூர் என்ற இடத்தில் மீண்டும் ஒரு எரிமலை மே 5 இல் வெடித்துச் சிதறியது.

குற்றவாளிகளின் அனுமதியின்றி, அவர்-களிடம் உண்மை கண்டறிய நடத்தப்படும் சோதனைகள் (நார்கோ, அனாளசிஸ், பிரைன் மேப்பிங், பாலிகிராப்) சட்ட விரோதமானவை என்று மே 5 இல் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மத்திய அமெரிக்க நாடான கோஸ்டாரிகாவின் முதல் பெண் அதிபராக லாரா சின்சில்லா மே 9 இல் பதவி ஏற்றுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளி-களுக்கு அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணம் செல்லும் என மே 11இல் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சரோஷ் ஹோமி கபாடியா மே 12 இல் பொறுப்பேற்றுள்ளார். இங்கிலாந்தின் புதிய பிரதமராக டேவிட் கேமரூன் (வயது43) மே 12 அன்று பதவி ஏற்றுள்ளார்

தென் ஆப்ரிக்காவிலிருந்து லிபியா நாட்டிற்குச் சென்ற விமானம் மே 12 இல் திரிபோலி விமான நிலையத்தில் தரை இறங்கியபோது ஏற்பட்ட விபத்தில் 105 பேர் உயிரிழந்துள்ளனர். 8 வயதுச் சிறுவன் காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளான்.

ஜாதிவாரியான மக்கள் தொகைக் கணக்-கெடுப்-பினை நடத்த அனைத்து நடவடிக்கை-களையும் மேற்கொள்ள வேண்டும் என மே 12 இல் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பலகோடி ரூபாய் லஞ்ச ஊழல் புகார் காரணமாக, இந்திய மருத்துவக் கவுன்சில் மே 15 இல் கலைக்கப்பட்டது. மே 22 அன்று கருநாடக மாநிலம் மங்களூரில் ஏர்-இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 158 பேர் உயிரிழந்தனர்.

 

send to friend
Bookmark and Share
Home | Viduthalai | The Modern Rationalist | Periyar Pinju | Periyar Webvision | Periyar Matrimonial | Periyar childrenhome