ஜூன் 01-15_2010

பொருளடக்கம்


Contant

 

மடல் ஓசை

மே 1--_15 உண்மை இதழ் படித்தபின் பெற்ற உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டுமென்ற ஒரு தூண்டல்! வெள்ளையரிடமிருந்து விடுதலைபெற்ற இந்தியர்கள், மூளைச்சலவை செய்யும் மேற்கத்தியக் கேளிக்கைகளில் மயங்கிச் சீரழியும் அடிமைத்தனத்திலிருந்து மீட்சி பெறுவதை நோக்காகக் கொண்டுள்ள, திராவிடர் கழக, நாடு தழுவிய பிரச்சார இயக்கம், நல்லதொரு விழிப்புணர்வுக்கு வழிவகுக்கும். சுதேசி இயக்கம் வீறு-கொண்டு எழுந்த இந்தியத் திருநாட்டில், இறக்குமதி செய்யப்பட்ட கிரிக்கெட் விளையாட்டின் கேடுகளிலிருந்து அறியா மக்களை விடுவிப்-பதற்கு, அய்.பி.எல். கிரிக்கெட்டைத் தடை-செய்வதற்கான கோரிக்கையும், கிரிக்கெட் வாரியத்தை அரசு எடுத்து நடத்திட வேண்டுமென்னும் வலியுறுத்தலும், சுயமரியாதை காக்கும் கருவிகள்.

செய்திக்குப் பின்னே _ இதோ ஓர் அக்ரகாரத் திமிங்கலம் வாக்கு வாங்கிக்காக நாட்டைக் கேவலப்படுத்தும் இழிநிலையை வெளிச்சமிடுகிறது. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறுபதம் என்பது போல், 120கோடி மக்களுக்கான மருத்துவச் சேவைக்குத் தலைமையேற்கும், இழி செயல்களின் ஒட்டுமொத்த உருவத்தை வைத்துத்தான் நாட்டின் தரம் உலகப் பார்வையில் மதிப்பீடு பெறும். மனிதரின் நினைவாற்றல் வலுவற்றது என்னும் பலவீனம், ஊழல் வர்க்கத்துக்கும் துணை நிற்போருக்கும், தூணாக அமைகிறது. உழைத்து உண்பதற்கு வக்கற்ற இனத்துக்கு இக்கட்டுரை நல்ல சூடு!

- நா.முத்தையா, மதுரை


மே. 1_15, 2010 உண்மை இதழில் வெளிவந்த ஆசிரியர் பதில்கள் பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகள் பத்துக்கும், பதில்கள் முத்தாகவே அமைந்திருந்தன! இப்பகுதியில், தமிழ்ச் செம்மொழி மாநாடு சிறப்பாக நடைபெற, அறநிலையத்துறை ஆலய வழிபாடு நடத்தும்படி உத்தரவு பிறப்பித்திருப்பதற்கான கேள்வி ஒன்றுக்குத் தாங்கள் கூறியிருந்தபதில், என்னை மெய் சிலிர்க்க வைத்தது. ஆமாம்; நம் அரசா? அறநிலையத்-துறையா? மிகவும் தலைக்குனிவை ஏற்படுத்துவதாக உள்ளது என்று தாங்கள் கூறிய பதிலை, தந்தை பெரியாரின் பகுத்தறிவுப் பாதையில் நடைபோடும் எவரும் மறுக்கவோ _ மறக்கவோ மாட்டார்கள். தங்களது துணிவான பதிலுக்கு எனது பாராட்டுகள்!

- தி.பொ. சண்முகசுந்தரம், திட்டக்குடி நமது பாரம்பரிய _ பண்பாட்டு விளை-யாட்டுகளான கபடி, சிலம்பம், கால்பந்து, கைப்பந்து போன்ற விளை-யாட்டுகளையும், மனவளப் பயிற்சி-களையும் நமது இளைஞர்கள் மறந்து பல ஆண்டுகளாகிவிட்டன என்பது வேதனைக்குரியது.

கிரிக்கெட்டில் நமது இளைஞர்-களுக்கு ஏற்பட்டிருக்கிற தேவையில்லாத மோகம் அவர்களை சோம்பேறிகளாக்கி-விட்டது. தங்களது தேசப்பற்றினைக் கிரிக்-கெட்டின் மூலம்தான் காண்பித்துக்-கொள்ள முடியும் என்ற பாவனையில் இருக்கிறார்கள்.

பன்னாட்டு நிறுவனங்களின் நேர்மையற்ற வணிக விளம்பரமும் அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மையும் சேர்ந்து ஒரு தலை-முறையையே சீரழித்து வருவது வேதனையானது.

சரியான தருணத்தில் உண்மை (மே 1_15, 2010) இதழில் தாங்கள் எழுதியிருக்கும் கட்டுரை இளைஞர்-களைச் சென்று சேர்ந்து அவர்களை நல்வழிப்படுத்தும் என நம்புகிறேன்.....

- கோ.விஜயராமலிங்கம்

send to friend
Bookmark and Share
Home | Viduthalai | The Modern Rationalist | Periyar Pinju | Periyar Webvision | Periyar Matrimonial | Periyar childrenhome