ஜூன் 01-15_2010

பொருளடக்கம்


Contant

 

பூவும் பொட்டும்

பத்மாசீனிவாசன்

என்னம்மா.... சுபா.... என்ன நீபாட்ல போர வார கொஞ்சம் அடக்கம் ஒடுக்கமா நடந்துக்கம்மா...

என்னம்மா சொல்ர கொஞ்சம் விளக்கமா சொல்லுமா.

ஆமாம்மா... எவ்வளவோ செலவு பண்ணிப் படிக்கவச்சி, அதே போல கல்யாணத் துக்கும் கடன ஒடன வாங்கி உனக்குக் கல்யாணம் பண்ணிவச்சும் இப்படி ஆயிட்டதேன்னு நான் கவலைப் பட்டுக்-கிட்டுக் கெடக்கிறேன்... நீ... என்னடான்னா... எதையுமே மனசுல நினைக்-காம, நீ பாட்டுக்கு நடந்துக் கிறியேம்மா?

யம்மா நீ சொல்றது ஒன்னும் எனக்கு புரியலே. வெவரமா சொல்லுமா?

காலத்துக்கு ஏத்தமாதிரி பண்பாட்டோடு நடந்துக்கம்மா.

என்ன காலம் _ பண்பாடுன்னா இப்போ ஏதும்மா காலம் _ பண்பாடுல்லாம்.

என்னம்மா வளத்திகிட்டே போறே எனக்குச் சொல்றதுக்குத் தயக்கமா இருக்-கும்மா. சும்மா தைரியமா சொல்லுங்-கம்மா.

சுபா... புருஷன் செத்துப் போனபிறகு இப்படி அலங்காரம் பண்ணிக்கலாமா?

ஓ... இதைத்தான் சுத்திவளைச்சிச் சொல்றியா?

ஆமா சுபா, பூ, பொட்டு, மெட்டி, கையில்வளைவி இதெல்லாம் போட்டுக்கலாமா? ச்சே... நான் வேற என்னமோ நெனைச்சேம்மா.

சரி.. ஒங்க கருத்துப்படியே நடக்கனுமினா அதுக்குக் காலம் இது இல்ல; இது நவீன காலம்மா. எல்லாம் பொடவையிலர்ந்து, சுடி-தார்க்கு வந்துட்டாங்க... பொண்ணு வீட்டுக்கு பரிசம் கொடுத்துக் கல்யாணம் பண்ணிக்-கிட்டவன்லாம், இப்ப பொண்ணு வீட்-லேர்ந்து லட்சக்கணக்கா வாங்கிக்றாங்க, இதா பண்பாடு?

ஆம்பள தாலி கட்ரான், அத அவன் செத்தபிறகு பொம்பளைங்க கூடி அறுத்-தர்றாங்க. அவன் கட்டியது; அவனோடு போகட்டும்.

பூவும், பொட்டும் அவரா வச்சாரு? நீதானேம்மா வச்சே. நீ, உயிரோடு இருக்கும்-போது நான் எப்படிம்மா பூவையும் பொட்டையும் தொடாமா இருக்க முடியும்?

சுபாவின் பதிலைக் கேட்ட தாய் திகைத்து நின்றாள்.


பசுவதையும் மனுதர்ம சாஸ்திரமும்

நாம் அவ்வப்பொழுது செய்தித்தாள்களில் வடநாட்டில் ஒரு மதத்தினர் பசுவைக் கொல்வதாகவும் ஆனால் பசு இந்துக்களின் புனிதக் கடவுள் என்றும், பசுவின் ஒவ்வொரு பாகத்திலும் ஒவ்வொரு கடவுள் இருப்பதாகவும், அதனால் இந்துக்கள் என்போர் பசுவை கோ மாதா என் குலமாதா என்று வணங்குவதாகவும் அதனால் இந்துக்கள் என்போர் பசுவதையைக் கடுமையாக ஆட்சேபிப்பதாகவும் கூறுகின்றனர். பசு மட்டுமல்ல, காளை மற்றும் இதர மிருகங்கள்/ ஜீவராசிகளையும் வதைப்பதோ, கொல்வதோ கூடாது. அது மனித நேயத்திற்குப் புறம்பானது. எனவே கண்டிக்கத்தக்கது. இதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை. எனவே இதில் மனிதநேயத்தோடு எந்த மதத்தினரும் ஆட்சேபணை செய்யலாம். ஆனால் இந்துக்கள் என்போர் மதத்தின் பெயரால் பசுவதை என்று சொல்ல அருகதையற்றவர். காரணம், அவர்கள் ஒன்று மனுதர்ம சாஸ்திரத்தைப் படிக்காத-வராயிருக்க வேண்டும் அல்லது படித்ததை மறைப்பவராயிருக்க வேண்டும்.

மனுதர்ம சாஸ்திரம் அய்ந்தாம் அத்தியாயம் சுலோகம் 36இலிருந்து, மந்திரமில்லாமற் கொல்-லப்-பட்ட பசுக்களை விப்பிரன் ஒரு போதும் புசிக்கக்-கூடாது. பழமையான சாஸ்திர விதிப்படி மந்திரஞ்சொல்லிக் கொல்லப்பட்டிருந்தால், அதைப் புசிக்கலாம் இதன்படி, பார்ப்பனர் தங்களுக்குத் தேவையான பொழுது மந்திரம் சொல்லிப் பசுவைக் கொன்று தின்னலாம் என்பது தெளிவாகிறது. மேலும் பழமையான சாஸ்திர விதிப்படி என்று சொல்லியிருப்-பதினால் பார்ப்பனர் தங்கள் இஷ்டப்படி சாஸ்திர விதிகளை அவ்வப்பொழுது தங்கள் சௌகரியத்திற்காக மாற்றி வருகின்றனர் என்று அறிய முடிகிறது.

(சுலோகம் 39) எக்கியத்திற்காகவே பசுக்கள் பிராமணரால் சிருஷ்டிக்கப்பட்டிருக்கின்றன. அந்த எக்கியஞ் செய்தால் உலகமெல்லாம் ஷேமத்தையடைகின்றன. ஆகையால் எக்கியத்-தால் செய்யும் பசு ஹிம்சை ஹிம்சையல்ல.

40) கொடிகள், பசுக்கள், விருஷங்கள், மிருகங்கள், பட்சிகள் இவற்றை எக்கியத்திற்கு உபயோகப்படுத்தினால், அதுகளுயர்ந்த கதியை அடைகின்றன.

44) சராசர விஷயத்தில் வேதத்திற் சொல்லப்பட்ட ஹிம்சையை ஹிம்சை என்று நினைக்கக்-கூடாது. வேதத்தினின்றே தர்மம் விளங்கு-கிறதல்லவா. ஆதலால் அந்த வேதம் ஹிம்சையைச் சொன்னபோதிலும் புண்ணிய-மாகவே இருக்கும்

ஆக, மனுதர்ம சாஸ்திரப்படி பார்ப்பனரின் யாகத்திற்காகவே பசுக்கள் பிரம்மனால் உண்டாக்கப்பட்டிருக்கிறது. காளைமாடு போன்ற இதர மிருகங்கள், பறவைகள், ஊர்வன யாரால் எதற்காகப் படைக்கப்பட்டுருக்கின்றன. பார்ப்பனர் எக்கியம்/யாகம் என்ற பேரால் பசுவதையோ பசுக் கொலையே அல்லது இதர மிருகங்கள் கொலையோ செய்தால் அது கொலையாகாது. பசுவதையோ, பசுக் கொலையோ செய்ய ஏக போக உரிமை பெற்றவர்கள் பார்ப்பனர்கள் மட்டுமே. எனவே இதர மதத்தார் அல்லது இதர வருணத்தார் பசுவைக் கொல்லவோ துன்புறுத்தவோ கூடாது. மீறிச் செய்தால் அது பார்ப்பனரைப் பொறுத்த-வரை பசுவதை யாகும்.

- ஆர்.டி. மூர்த்தி, திருச்சி-17.

send to friend
Bookmark and Share
Home | Viduthalai | The Modern Rationalist | Periyar Pinju | Periyar Webvision | Periyar Matrimonial | Periyar childrenhome