ஜூன் 01-15_2010

பொருளடக்கம்


Contant

 

யார் இந்த பெரியார்?
மாண்டேகு செம்ஸ்போர்ட் திருத்தம்

மனநல மருத்துவர் ஷாலினி

எங்கோ எதனாலேயோ ஏற்படுகிற ஒரு மாற்றம், வேறெங்கோ யாரோ ஒருவரின் வாழ்வில் எவ்வளவு பெரிய எதிர்மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதற்கு வரலாறு முழுக்க நிறைய உதாரணங்கள் உண்டு. அதில் ஒன்று தான் முதலாம் உலகப்போர். இந்தப் போர் முடிந்த பிறகு, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்குப் பெரிய பொருள் சேதமும், மனவருத்தமும் ஏற்பட்ட பின்னர், அவர்களுக்கு இந்திய மண்ணின் மைந்தர்களைப் பற்றிய கருத்து மாற ஆரம்பித்திருந்தது. அதுவரைக் கடைநிலை ஊழியர்களே ஆனாலும் சர்க்கார் உத்தியோகம் என்றால் வெள்ளைக்காரரின் ஆதிக்கத்தில் இருந்தே ஆகவேண்டும் என்று முன்பு கருதி இருந்தது போய், நகர்ப் பராமரிப்பு மாதிரியான லோக்கல் விஷயங்களை, லோக்கல் இந்தியர்களே கவனித்துக்கொள்ளட்டுமே, சின்னச் சின்னப் பொறுப்புகளை இந்தியர்களே கவனித்துக்கொண்டால் தானே பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் பெரிய பெரிய விஷயங்களில் முழு கவனம் செலுத்த முடியும் என்ற கருத்து, தலைதூக்க ஆரம்பித்திருந்தது.

இந்தக் கருத்தை முன் மொழிந்த எட்வர்ட் சாமுவெல் மாண்டேகு, அப்போது இந்தியாவின் செக்ரெட்டரி ஆஃப் ஸ்டேட்டாக இருந்தார். செம்ஸ்போர்ட் துரை அப்போது இந்தியாவின் வைசிராயாக இருந்தார். இந்த இரண்டு மனிதர்களும் ஒன்று சேர்ந்து, இந்தியர்களுக்கு ஒரு குறைந்த பட்ச சுய ஆட்சி உரிமை வழங்கச் சிபாரிசு செய்தார்கள். இந்தப் பரிந்துரையை மாண்டேகு செம்ஸ்போர்ட் திருத்தம் என்ற திருநாமத்துடன் பிரிட்டிஷ் ஏகாதிபத்யம் ஏற்றுக்கொண்டுவிட, நகரசபை உறுப்பினருக்-கான, தேர்தலில் கலந்துகொள்ளும் வாய்ப்பு இந்தியர்களுக்கு முதன் முதலில் கிடைத்தது.

மெட்ராஸ் பிரெசிடென்சியில் இந்த நகரசபைக்கான தேர்தல்கள் நடைபெற்றன. அந்தக் காலத்தில் மொத்தம் 98 தொகுதிகளில் தேர்தல்கள் நடந்தன. அதில் ஜஸ்டிஸ் பார்ட்டி என்று அழைக்கப்பட்ட South Indian Liberal Federation,, 63 இடங்களில் வெற்றிபெற்றது; ஆட்சியை அமைத்தது. ஏ. சுப்பராயலு நாயுடு என்பவர் மெட்ராஸ் பிரெசிடென்சியின் முதல், முதல் அமைச்சராகப் பதவி ஏற்றார். இந்தத் தேர்தலைக் காங்கிரஸ் கட்சி புறக்கணித்தது. ஜஸ்டிஸ் கட்சியின் வெற்றிக்குக் காரணமாய் இருந்தாலும் இந்தப் பிராமணர் அல்லாதவரின் கட்சி ஆட்சிக்கு வந்தது சிலருக்குக் கவலையைத் தந்தது.

காரணம், இந்த ஜஸ்டிஸ் கட்சி உருவானதே பிராமணரை எதிர்த்துக் குரல் கொடுக்கத்-தான். பிராமணரை எதிர்த்துக் குரல் கொடுக்க, அப்படி என்ன அவசியம் வந்து-விட்டதாம் என்று நீங்கள் யோசித்தால், ஒரு சின்ன உதாரணம்: சர்.பிட்டி தியாகராயர் என்பவர் அந்தக் காலத்தில் மிகவும் பிரசித்திப் பெற்ற வணிகர். இன்று ஷாப்பிங் உலகின் தலைநகராய் இருக்கும் தி.நகர் என்கிற தியாகராயநகர் இவர் நினைவால் அப்படிப் பெயர் சூட்டப்பட்டது என்றால் அவர் எவ்வளவு முக்கியமான புள்ளியாக இருந்திருப்பார் என்று பாருங்கள். அதுவும் போக, பிரிட்டிஷ் சர்க்காரே இவருக்கு சர் பட்டம் கொடுத்துக் கவுரவித்திருந்தது. அப்பேர்ப்பட்ட புகழ் வாய்ந்த இந்தத் தியாகராயர், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு அடிக்கடிப் போவது வழக்கம். அந்தக் கோயிலின் குடமுழுக்கு விழாவிற்கு இவர் எக்கச்சக்கமாய் நன்கொடை வசூலித்துத் தந்திருந்தார். இவ்வளவு இருந்தும் அந்த விழாவிற்கு அவரை வரவிட-வில்லை கோயில் பூசாரிகள். காரணம், சர் பிட்டி தியாகராயர், ஒரு பிராமணர் அல்ல என்பது மட்டுமே.

இப்படி எல்லாம் நோகடித்தால் கோபம் வராதா பின்னே? இப்படிப் பிராமணர்-களின் நாங்க எல்லாம் உசத்தி, நீங்க எல்லாம் மட்டம் என்கிற இந்த சுப்பீரியாரிட்டி சிந்தனையும் ஆதிக்கப் போக்குமே அவர்-களுக்குப் பல விரோதிகளை ஏற்படுத்த, பிராமணர்களை எதிர்த்துப் பல பெரிய புள்ளிகள் ஒன்று கூடி உருவானதுதான் இந்த சவுத் இந்தியன் லிபரல் ஃபெடரேஷன். இந்தக் கட்சி, ஜஸ்டிஸ் என்கிற ஒரு ஆங்கில நாளேட்டை வெளியிட்டு, மான உணர்வு-களைத் தூண்டியதாலேயே, இதற்கு ஜஸ்டிஸ் கட்சி, நீதி கட்சி என்கிற செல்லப் பெயர்கள் ஏற்பட்டன.

காங்கிரஸ் மாதிரியான அகில இந்தியக் கட்சிகளின் முக்கிய இடங்களில் பிராமணர்-களே சக்தி வாய்ந்திருக்க, இந்த ஜஸ்டிஸ் பார்ட்டி உருவான மூன்று ஆண்டுகளிலேயே ஆட்சியைப் பிடித்திருந்தது என்றால், பொது மக்களும் அந்தப் புதுக் கட்சியைப் பெரிதாக ஆதரித்-தார்கள் என்று தானே அர்த்தமாகும். இந்தப் பொது மக்கள் ஏன் இந்தப் புதுக் கட்சியை ஆதரித்தார்கள்? இவ்வளவு செல்வாக்கும், பிரிட்டிஷ் சர்க்காரின் ஆதரவும் இருந்துமே சர்.பிட்டி தியாகராயருக்குக் கோயில் விழாவில் பங்கு பெறத் தடை என்றால், சாமானிய மக்களின் நிலையை யோசித்துப் பாருங்கள்! எப்போதுமே, நீ மட்டம் நான்தான் கிரேட் என்று யார் சொன்னாலும், கேட்கிறவருக்கு எரிச்சல் வருவது இயல்புதானே. இதனால் பிராமண விரோதப் போக்கு தென் இந்தியாவில் மிக அதிகமாக இருந்தது.

இப்படிப் பிராமணர் அல்லாதவர்களின் கரம் வலுப்பெற்றுக்கொண்டே போனால், அரசியலில் பிராமணர்களின் நிலை தடுமாறிவிடுமே? இந்தப் பிரச்சனையைச் சரி செய்ய என்ன வழி? பொது மக்களுக்குப் பிராமணர்களின் மீது எரிச்சல் ஏற்பட்டிருந்த இந்த நிலையில் ஒரு பிராமணரே தன்னிலை விளக்கமெல்லாம் கொடுத்து மக்கள் செல்வாக்கைச் சம்பாதிப்பதென்பது கிட்டத்தட்ட முடியாத காரியம். ஆனால், ஒரு சக்திவாய்ந்த பிராமணர் அல்லாதவரை ஜஸ்டிஸ் கட்சிக்காரர்-களுக்கு எதிரில் முன் நிறுத்தினால், அவர்களுக்குள் பிரிவினை ஏற்படுமே!

அப்படி ஜஸ்டிஸ் கட்சியின் பெரும் மக்கட் செல்வாக்கை முறியடிக்கக்கூடிய மனிதன் யார்? ராஜகோபாலாச்சாரியாருக்குத் தெரிந்தவரை, இந்தத் தகுதி வாய்ந்த ஒரே மனிதர், ஈ. வே. ராமசாமி நாயக்கர் மட்டும்தான். காரணம், 1) ராமசாமியார் ஒரு கடும் வைணவ மரபைப் பின்பற்றும் குடும்பத்தைச் சேர்ந்தவர். ராஜாஜியும் வைணவர், மோகன்தாஸும் ராம நாமம் ஜபிப்பவர். ராமசாமியின் குடும்பமோ ராமபக்திக்குப் பெயர் பெற்றது. 2) ராமசாமி மிகுந்த மக்கட்செல்வாக்குப் பெற்றவர். 1910இல் ஆரம்பித்து ஈரோட்டில் அவர் சம்மந்தமில்லாமல் எந்தக் காரியமும் நடந்ததில்லை. அது, குடிநீர்க் குழாய் திறப்பதாகட்டும், வியாபாரிகளின் சண்டை-களைப் பைசல் பண்ணித் தருவதாகட்டும், வருமானவரியை நிர்ணயிப்பதாகட்டும், ராமசாமியே எல்லாவற்றிலும் முன் நின்றார். 3) மக்கட் செல்வாக்கு ஒரு பக்கம் என்றால், ஈரோடு நகரசபைத் தலைவராக இருந்து அவர் ஆற்றிய சேவைகளைப் பாராட்டிப் பிரிட்டிஷ் சர்க்கார் அவருக்கு ராவ்சாகிப் பட்டமெல்லாம் கொடுத்துக் கவுரவப்படுத்துவதாக இருந்தது. 4) ராமசாமி ரொம்பப் பெரிய பணக்காரர், ஜஸ்டிஸ் கட்சிக்கு விரோதமாகத் தொடங்கப்-பட்ட சென்னை மாகாண சங்கம் என்கிற கட்சிக்காக ஆயிரக்கணக்கில் பணத்தை நன்கொடையாகக் கொடுத்தவர். 5) இது எல்லாம் போக ராமசாமி ஒரு ஸ்வாரசியமான பேச்சாளர். எளிமையாக, நகைச்சுவையோடு, ஸ்வாரசியமாய்ப் பேசும் போக்கு அவருக்கு இளமையிலேயே உண்டே. இவரைக் கட்சிக் கூட்டங்களுக்கு அழைத்தால், மனிதர் தங்குதடையின்றிப் பேசியே எல்லோர் இதயங்களையும் அள்ளோ அள்ளு என்று அள்ளிவிட, இத்தனை தகுதிகள் வாய்ந்த இந்த மனிதரை விட்டுவிடக்கூடாது என்று தோன்றியது ராஜாஜிக்கு.

ராஜாஜி சேலம் ஜில்லா முனிசிபாலிட்டித் தலைவர், அதுவும் போக, வரதராஜூலு நாயுடுவின் வக்கீல் இந்த ரீதியில் ராம-சாமியாருக்கும், ராஜாஜிக்கும் ஏற்கெனவே நல்ல ஸ்நேகிதம் இருந்தது. ராமசாமியாரை மிகவும் நுணுக்கமாகக் கவனித்து எடைபோடும் வாய்ப்பு இதனாலேயே அமைந்துவிட, ராஜாஜிக்கு ஒரு யோசனை தோன்றியது. இத்தனை தகுதிகள் வாய்ந்த இந்த ராமசாமி நாயக்கரைக் காங்கிரஸில் சேர்ந்துக்கொண்டால், ஜஸ்டிஸ் கட்சியாவது இன்னொன்றாவது, சுலபமாய் மக்கள் மனதை ஜெயித்துவிடலாமே!

இந்த எண்ணம் ஏற்பட்டதுமே அவர் ராமசாமியாரைக் காங்கிரஸில் சேரும்படி வற்புறுத்த ஆரம்பித்தார். இதற்கிடையில் ராஜாஜிக்காக, கல்யாணசுந்தரம் முதலியாருக்-காக, லார்ட் கோவிந்ததாசுக்காக, நாகை பக்கிரிசாமி பிள்ளைக்காக, டாக்டர் பி. டி. ராஜனுக்காக என்று நண்பர்கள் அழைத்ததினா-லேயே காங்கிரஸ் கூட்டங்களில் கலந்து கொண்டிருந்த ராமசாமியாருக்கும், மெல்ல மெல்ல அது பிடித்துப் போக ஆரம்பித்தது. இவர் பேசியதைப் பற்றியும் செய்தவற்றைப் பற்றியும் பத்திரிகைகளில் ஆஹா ஓஹோ என்று எல்லோரும் புகழ்ந்து தள்ள, தொழிலைவிட, இந்தக் கட்சி நடவடிக்கைகள் ராமசாமியாருக்கு ஸ்வாரசியமாகத் தோன்ற ஆரம்பித்தன.

அதனால் ராஜாஜி அவரிடம், சேலம் முனிசிபாலிட்டித் தலைவர் பதவியை ராஜினாமா பண்ணிவிட்டு மெட்ராஸ் போய்க் கட்சிப் பணிகள்ல ஈடுபடலாம்னு இருக்கேன். நீரும் வாரும் என்று கேட்டபோது, ராமசாமியாருக்கு அந்த எண்ணம் பிடித்துப்போனது. காங்கிரஸ்ல சேர்ந்தா ஜாதியை ஒழிக்கலாம், சமநீதி கொண்டு வரலாம், மக்களுக்கு நன்மை செய்யலாம் என்று ராஜாஜி மேலும் மேலும் விளம்பரப்படுத்த, ராமசாமி உடனே முடிவு செய்துவிட்டார். தானும், தன் பதவிகள் அனைத்தையும் விட்டுவிட்டுக் காங்கிரஸிஸ் சேர்ந்து மக்களுக்குப் பணி செய்வதென்று, வேறு எதையுமே யோசிக்காமல் ஒரு காகிதத்தை எடுத்தார். ஈரோட்டில், தான் அதுவரைத் தலைமை வகித்த எல்லாப் பணிகளில் இருந்தும் விடுப்புக் கேட்டு ராஜினாமா கடிதம் எழுதித் தந்தார். காங்கிரஸில் சேர ஆயத்தமானார்.

(தொடருவார்....)


ஏழுமலையானுக்கே நாமம்

திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க அரை மணி நேர வாய்ப்புக் கிடைக்கிற-தென்றால், பல லட்சம் ரூபாய் வரையிலும் அள்ளிக் கொடுப்பதற்குப் பக்தர்கள் (?) தயாராக உள்ளனர். இந்தப் பக்தர்களின் மூடநம்பிக்-கையைத் தங்களுக்குச் _ சாதகமாகப் பயன்படுத்தி, முன்பதிவு என்ற பெயரில் ஏழுமலையானுக்கே நாமம் போட்டுள்ளனர் இடைத்தரகர்கள் சிலர்!

ஏழுமலையானுக்குத் தினமும் அர்ச்-சனை, தோமாலை, ஆராதனைகள் நடைபெறுமாம். இதில் பகவானின் அருகி-லிருந்து தரிசனம் செய்யக் கட்டணம் ரூ 480. இந்தக் கட்டணம் ரூ. 5000 வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்கள் 2019 ஆம் ஆண்டுவரை முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாம்.

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ஏழுமலையானுக்கு அபிஷேகம், வஸ்திர அலங்கார சேவை நடைபெறுமாம். இதில் கலந்து கொள்ளும் பக்தர்கள், சன்னதிக்குள் ஒரு மணி நேரம் வரை அனுமதிக்கப்படுவர். இதற்கான அனுமதிக் கட்டணம் ரூ 12 ஆயிரத்தி 500 லிருந்து 50 ஆயிரமாக உயர்த்தப்--பட்டுள்ளது. இதற்கான கட்டணம் பக்தர்களின் தேவையைப் பொறுத்து ரூ 10 லட்சம் வரை நிர்ணயம் செய்து விற்கப்-படுமாம். இதில் கலந்து கொண்டவர்களுக்கு, ஏழுமலையானுக்குச் சாத்திய பட்டு வஸ்திரமும் தீர்த்தப் பிரசாதங்களும் வழங்கப்படுமாம்.

இந்த டிக்கெட்கள் 2029ஆம் ஆண்டுவரை முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. தேவஸ்தான கூடுதல் நிர்வாகி முதல் கடைநிலை ஊழியர்-வரை ஊழல் செய்து ஏழுமலையானையே ஏமாற்றியுள்ளனர்.

இந்த டிக்கெட் விற்பனையில் கோவிலுக்-குக் கிடைத்துள்ளதோ 78 கோடி ரூபாய். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கண்டு-பிடித்த ஊழலோ 125 கோடியாம்.

send to friend
Bookmark and Share
Home | Viduthalai | The Modern Rationalist | Periyar Pinju | Periyar Webvision | Periyar Matrimonial | Periyar childrenhome