ஜூன் 01-15_2010

பொருளடக்கம்


Contant

 

அறிமுகம்

குறும்படம்

புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி என்ற Sub title _ லுடன் குறும்படம் தொடங்குகிறது. நல்ல இயற்கைச் சூழல், அதிகாலை _ சிறுவன் தனது காலைப்பணிகளை முடித்துவிட்டுப் பள்ளிக் கூடம் செல்லத் தயாரா-கிறான். மதிய உணவு டப்பாவை எடுத்துக் கொண்டு அடுப்படி நோக்கிச் செல்கிறான். அந்தோ.... நெருப்பைக் கண்டு பல நாள் ஆனது போல் அது காட்சியளிக்கிறது. பாத்திரத்தைத் திறந்து பார்க்கிறான். எதிர்பார்த்தது போலவே வெறுமை... பசியுடனே பள்ளிக்குச் செல்கிறான். அன்றைக்குத் தேர்வு. வயிற்றை அழுத்திப் பிடித்தபடியே தேர்வு எழுதுகிறான். பக்கத்தில் இருக்கும் மற்ற மாணவர்களின் உணவுப் பாத்திரத்தை ஆவலுடன் பார்க்கிறான். திடீரென்று வானத்தில் போர் விமானங்களின் ஓசை, ஆசிரியர் உள்பட அனைவரும் பதுங்கு குழிகளை நோக்கி ஓடுகின்றனர். பசியுடன் இருக்கும் மாணவன் எதைப்பற்றியும் கவலைப்படாமல் கிடைத்த உணவுப் பாத்திரத்தை எடுத்து ஆவலுடன் சாப்பிடுகிறான். அத்துடன் குறும்படம் நிறைவுபெறுகிறது.

இயக்குநரின் பெயர்: செ.தே. இமயவர்மன்
தொடர்பு எண்: 98427 40650

உடுமலை


இணையதளம்

இம்முறை நாம் ஒரு குறிப்பிட்ட இணையதள முகவரியை பார்க்கப்போவதில்லை, மாறாக இணைய மென்பொருள் சேவையான Torrent ஐ பற்றி தெரிந்துகொள்ளப்போகிறோம். இதில் என்ன சிறப்பம்சம் என்றால் நமக்கு வேண்டிய ஒளி, ஒலிக் காட்சிகள், குறும்படங்கள், ஆவணப் படங்கள், மென்பொருள்கள், புத்தகங்கள் ஆகியவற்றை இலவசமாக பதிவிறக்கம் (download) செய்து கொள்ளலாம் அதே போல் நம்மிடமுள்ள இதே மாதிரியான கோப்புகளை பதிவேற்றம் (Upload) செய்யலாம். இதற்காக நாம் முதலில் torrent download
manager ஐ பதிவிறக்கம் செய்தால் போதும். நமக்குப் பிடித்த திரைப்படங்கள், பாடல்கள் ஆகியவற்றையும் பதிவிறக்கம் செய்யலாம்.


குறுஞ்செய்தி

வீட்ட விட்டு வெளிய போகும்போது பூனை குறுக்கே போனா என்னங்க அர்த்தம்?

பூனையும் வெளிய போகுதுன்னு அர்த்தம்.

அனுப்பியவர்:
முகவை முத்து, ராமநாதபுரம்.

send to friend
Bookmark and Share
Home | Viduthalai | The Modern Rationalist | Periyar Pinju | Periyar Webvision | Periyar Matrimonial | Periyar childrenhome