ஜூன் 01-15_2010

பொருளடக்கம்


Contant

 

உலகப்பகுத்தறிவாளர் எம்.என்.ராய் - 2
தீவிரவாதி

சு.அறிவுக்கரசு

தேசியம் என்பதைக்கூட தந்தை பெரியாரின் வழியிலேயே எம்.என்.ராய் கண்டித்தார். தேசியம் என்பது அரசியல் மதம் (Political Religion) என்றார். தேசியம் என்ற போர்-வையில் அதனைக் காப்பதற்காக தேவை அரசு எனக்கூறி தேசியம் என்றால் மனித குலத்தின் நன்மைக்கும் விடுதலைக்கும் எதிரானதாகி-விட்டது தேசம்,. தேசியம், தேசியக்கொடி, தேசிய மொழி என்கிற எதையும் தந்தை பெரியார் ஏற்றுக்கொள்ளாமல் எதிர்த்து வந்தது வரலாறு. அதைப்-போலவே ராமராஜ்யம், -விக்கிரம ராஜ்யம் என்கிற காங்கிரசுக் கட்சியின் (காந்தியின்) பசப்பு மொழிகளை எதிர்த்தவர் எம்.என். ராய்.

ஆன்மிகம் என்பதை அக்கு அக்காகப் பிய்த்துப்போட்டார் ராய். இந்தியாவின் மக்களின் ஆன்மிகம் மிக உயர்ந்த நிலையில் உள்ளது எனக் கற்றறிந்த எவராலும் கூறமுடியாது. ஆன்மிகவாதிகளாகிய மக்களிடம் குடிகொண்டுள்ள அறியாமை கெட்ட நடத்தை, மூடநம்பிக்கைகள் ஆகியவை-பற்றி யாரும் எதிர்க்கருத்து கூறமுடியாது எனவே இவற்றை நீக்க வேண்டும் என்று சொன்னால் இவற்றுக்-கான காரணத்தை ஆய்வதற்-கான துணிவைப் பெற-வேண்டும். நேர்மையாக ஆய்ந்தால், மதசிந்தனைப் போக்குதான் இத்த-னைக்கும் காரணம் என்பதை புரிந்து-கொள்ளலாம்.

மதத்தைப் புதுப்பிப்பது அல்ல நம் பணி; அதனை நாணயமாக விமர்-சனம் செய்ய வேண்டும்.

மதவாதிகளேகூடத் தற்காலத்தில் கடவுள் நம்பிக்கையை விட்டுவிட வேண்டும் என்கிறார்கள்; காரணம் பகுத்தறிவின்படி சோதனை செய்தால் கடவுள் தாக்குப் பிடிக்காது. அதேபோல மதத்தைப் பகுத்தறிவின்-படி சோதனை செய்தால் சீட்டுக் கட்டினால் கட்டப்பட்ட கட்டடம் போல மதமும் இடிந்து விழுந்து விடும்.

எனவே, எதையும் பகுத்தறிவு கொண்டு நுட்பமாக, ஆய்ந்து பார்க்க வேண்டும். எல்லாச் சங்கதிகளையும் அப்படியே ஏற்றுக் கொள்ளக் கூடாது. அறிவுக்குப் புலப்படாத, உணர முடியாத சக்திகளை நம்பிக் கொண்டிருக்கும் வரை இந்த மண்ணில் விடுதலையைப் பெறவே முடியாது. காரணகாரியத்திற்கு ஒவ்வாதவற்றை போலி அறிவாளிகள் மெய்போலக் கூறுகிறார்-கள். கடந்த கால எண்ணங்களினால் சிறை வைக்கப்பட்டிருப்பவர்களால், எதிர்கால எஜமானர்களாக ஒருபோதும் முடியாது என்றெல்லாம் பகுத்தறிவின் சிறப்பை எம்.என். ராய் விளக்கமாக எடுத்துச் சொல்லி வலியுறுத்தினார்.

சுருட்டுகின்றார் தம்கையில் கிடைத்தவற்றை

சொத்தெல்லாம் தமக்கே என்று

சொல்வார் தம்மை

வெருட்டுவது பகுத்தறிவே _ -இல்லையாயின்

விடுதலையும் கெடுதலையும் ஒன்றேயாகும் என்கிற புரட்சிக் கவிஞரின் பாடல் வரிகளுக்-கேற்ப இவரின் கருத்துகளும் நம் அறிவு ஆசான் தந்தை பெரியாரின் கருத்துகளையே பேசு-கின்றன.

அதனால்தான், தாம் தொடங்கிய அரசியல் கட்சிக்குத் தலைமை தாங்க வேண்டும் என்று தந்தை பெரியாரை வேண்டிக் கொண்டார் எம்.என்.ராய்! அரசியல் கட்சி பக்கமே தலை வைக்கக் கூடாது என்ற பெரியார் அதனை ஏற்றுக் கொள்ளாததில் வியப்பேதும் இல்லை. எட்டே ஆண்டுகளில் அத்தகைய பட்டறிவை எம்.என். ராயும் பெற்றார்.

தந்தை பெரியாரைவிட 8 ஆண்டுகள் இளையவரான எம்.என். ராய் 1887 மார்ச் 21-இல் பிறந்தார். தனது 18ஆம் வயதில் அரவிந்த-கோஷ், பாரின் கோஷ் ஆகியோரின் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்தார். 1907-_இல் சாங்கிரி-போடா காவல் நிலையத்தைச் சூறையாடினார். 1908_இல் கைதாகி விடுதலை ஹரிகுமார் சக்ரவர்த்தி என்பவரோடு சேர்ந்து 1909_இல் மீண்டும் கொள்ளைச் செயல்களில் ஈடுபட்டார். ஹவுரா _ சிப்பூர் சதி வழக்குகளில் சிக்கி 1910,11இல் வழக்கில் இருந்து விடுதலை. பிறகு ஜடின் முகர்ஜி என்பாரின் புரட்சி இயக்கத்தில் 1911 முதல் 1913 வரை பங்கேற்பு. சார்லஸ் ஏ. மார்ட்டின் என்கிற மாறு பெயரில் 1915-இல் சீனா, ஜப்பான், தூரக் கிழக்கு நாடுகள் வழியாக ஜெர்மனிக்குப்போய் ஆயுதங்களை வழங்கும்படி அந்த அரசிடம் கோரல். 1916_இல் அமெரிக்கா போய் காதலி ஈவ்லின் டிரென்ட் என்பவரைச் சந்தித்தார். 1915இல் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு அமெரிக்காவில் சிறையில் அடைப்பு. ஜாமீனில் வெளிவந்து மனைவியாகி-விட்ட ஈவ்லினுடன் மெக்சிகோவுக்குத் தப்பிச் செல்லல். 1920-இல் மாஸ்கோவில் லெனினுடன் சந்திப்பு. அதே ஆண்டு அக்டோபர் 17இல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை ரஷ்யாவின் டாஷ்கண்ட் நகரில் தொடங்கினார். 1929 டிசம்பர் மாதத்தில் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். மறு ஆண்டே சட்டத்திற்குப் புறம்பான வழியில் இந்தியா திரும்பினார். மும்பையில் தலைமறைவு நடவடிக்கைகளில் ஈடுபட்டார். 1931-இல் கான்பூரில் வழக்கு; 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை. பிறகு மேல் முறையீட்டில் ஆறு ஆண்டாகக் குறைப்பு. 1940 மார்ச்சில் காங்கிரசுக் கட்சியில் அகில இந்தியத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். அதே ஆண்டு அக்டோபரில் காங்கிரசிலிருந்து விலகினார்.

தொழிற்கல்வி படித்ததும் புரட்சி இயக்கத்தில் சேர்ந்து தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டார். அப்போது வயது 18. அரவிந்த கோஷின் ஆவேசப் பேச்சுகளால் கவரப்பட்டு தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு சுமார் 31 ஆண்டுகளாகப் போராட்டமும் சிறை வாழ்க்கையுமாக 10 நாடுகளுக்குமேல் சுற்றித் திரிந்து நாட்டின் விடுதலைக்காக உழைத்தார்.

இவரைத் தீவிரவாத இயக்கத்திற்கு இழுத்த அரவிந்தகோஷ், ஆங்கிலேயர் ஆட்சியில் சதி வழக்கில் சம்பந்தப்பட்டதால் காவல்துறையால் தேடப்பட்டார். சிறை வாழ்க்கைக்குப் பயந்து, புரட்சி பேசிய அரவிந்தகோஷ் பிரெஞ்சுக்காரர் ஆளும் புதுச்சேரிக்கு ஓடிவந்து பதுங்கிக் கொண்டார். பிறகு அந்தப் புரட்சி வீரர் பண்டாரமாகி விட்டார். ஆன்மிகப் பித்த-லாட்டம் பேசி மகான் அரவிந்தர் ஆகிவிட்டார். ஆனால் எம்.என். ராயைப் போல எவ்வளவோ இளைஞர்கள் தீவிரவாதச் செயல்களில் இறக்கப்பட்டு அடையாளம் இல்லாமல் அழிந்து போனார்கள். இந்தியாவுக்-கும் காங்கிரசுக் கட்சிக்கும் நேர்ந்த கேவலமான அவலம் இது.

மதத்தால் கற்பிக்கப்படும் சர்வசக்தி வாய்ந்த கடவுள் பகுத்தறிவின் முன் நிற்காது. ஆனால், தர்க்கரீதியாகச் சர்வதேச அளவில் கற்பிக்கப்படும் செயற்கைக் கடவுள் என்பது கடவுள் இல்லை என்பதாகும். ஏழைகளின் கடவுளையும் பணக்காரர்களின் கடவுளையும் சேர்த்து உருக்கினால் _ முனைக்கும் புதுக் கடவுள் என்றாரே பாரதிதாசன் _ அதைப்போல இவரும்! கடவுளை அழித்தொழிக்கக் கூடியது நாத்திகமே, என்றார். அறியாமையும், இயற்கை அற்புதங்களுக்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் சேர்ந்து, சர்வசக்தியுடைய கடவுள்களைக் கண்டுபிடித்தன. நாள்கள் செல்லச் செல்ல, இயற்கை அற்புதங்களுக்கான காரணங்களைக் கண்டுபிடிக்கும் ஆற்றல் வளர வளர, கடவுள்களை உற்பத்தி செய்யும் தேவை அற்றுப் போனது. கடவுள்களை மனிதனே உற்பத்தி செய்தான்; தான் உற்பத்தி செய்த கடவுள்களை ஒழித்துக் கட்டவும் அவனுக்கே உரிமை உண்டு. அதுதான் அறிவியல் மனப்-பான்மை என்றார்.

இவ்வாறு பலவகைகளிலும் தந்தை பெரியா-ரைப் போலவே கருத்துகளைப் பளிச் என்று வெளியிட்டவர் ராய்.

1952 ஜூன் மாதத்தில் முசூரியில் ஒரு விபத்தில் சிக்கி அடிபட்டார். அது அவரைப் பல நாள்கள் படுக்கையில் கிடத்தி விட்டது. 1954 ஜனவரியில் அவர் தம் சொந்த ஊரான டேராடூனில் இறந்து போனார்.

தென் இந்தியப் பார்ப்பனர்கள் வெள்ளைக்-காரனைவிட அகம்பாவம் பிடித்தவர்கள் என்று அக்காலத்திலேயே கூறினார். காங்கிரசுக் கட்சியின் பெருந்தலைவர்களில் ஒருவராக விளங்கிய கவிக்குயில் சரோஜினி நாயுடு.

தென் இந்தியப் பார்ப்பனர்கள் அத்தனைப் பேரையும் கப்பலில் ஏற்றி வங்காள விரிகுடா நடுக்கடலில் கொண்டுபோய், கடலில் மூழ்-கடித்துச் சாகடிக்க வேண்டும் என்று ஆத்திரமாகக் குறிப்பிட்டார் எம்.என். ராய்.

எம்.என். ராய் வங்காளப் பார்ப்பனர் என்பதுதான் நகைமுரண்.

- நிறைவு

print
send to friend
Bookmark and Share
Home | Viduthalai | The Modern Rationalist | Periyar Pinju | Periyar Webvision | Periyar Matrimonial | Periyar childrenhome