ஜூன் 01-15_2010

பொருளடக்கம்


Contant

 

ஆசிரியர் பதிலகள்

கேள்வி : ஒரு நாட்டின் உண்மையான முன்னேற்றம் என்பது, எதன் அடிப்-படையில் அமையவேண்டும்?

- கு.நா. இராமண்ணா, சீர்காழி

பதில் : அனைவருக்கும் அனைத்தும், எல்லோருக்கும் எல்லாமும் என்ற அடிப்படையில் அமைய வேண்டும். தந்தை பெரியார் துவக்கிய சுயமரியாதை இயக்கத்தின் இலக்கு இது!

 

கேள்வி : காலாவதியான மருந்து மோசடியாளர்களைக் குண்டர் சட்டத்தில் கைது செய்வது போல, காலாவதியான மூடநம்பிக்கையைப் பரப்புவோரைக் கைது செய்யும் நிலை எப்போது வரும்?

- வெங்கட. இராசா, ம.பொடையூர்

பதில் : பகுத்தறிவுவாதிகள் முழுப்-பகுத்தறிவுக் கொள்கைகளை, வாக்கு வங்கி பயமின்றி துணிந்து செயல் பட்டால், அந்நிலை எளிதில் வரும்! காலாவதியான மூடநம்பிக்கையால், 2,400 கோடி சேது சமுத்திரத்திட்டம் முடியும் தருவாயிலே ராமனைக்காட்டி கிடப்பில் போடப்-பட்டிருப்பது, காலா-வதியான கருத்துகளால் நீதிபதிகளும்-கூட பாதிக்கப்படுகிறார்கள் என்பதைத்-தான் காட்டுகிறது.

 

கேள்வி : செம்மொழி மாநாட்டில் ஆன்மிகத்திற்கும் ஓர் அரங்கு வேண்டு மென்கிறாரே இராம கோபாலன்?

- க. தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்

பதில் : பிறகு அவர் எதற்கு இருக்-கிறார்? அதுசரி_ ஆன்மீகம் என்றால் அவரை விளக்கக்கேட்டால் என்ன செய்வார். நித்தியானந்தா, பிரேமானந்தா, காஞ்சி தேவநாதன்கள் ஆன்மீகத்தைத் தானே பரப்புவதாகச் சொன்னார்கள். அந்த ஆன்மீகமா? எது என்று வரையறுத்துச் சொல்வாரா?

 

கேள்வி : டெல்லியில் பெரியார் மய்யத்திற்கு இடம் கொடுத்த என்-னையும், முன்னாள் பிரதமர் வாஜ்-பாயையும் வீரமணி மறந்துவிட்டார். நன்றி மறப்பது நல்லதல்ல என வை.கோ. கூறியுள்ளாரே இது பற்றிய தங்களின் கருத்து?

- ஜி. குப்புசுவாமி, சங்கராபுரம்

பதில் : தவறு, பிரதமர் வாஜ்பேயி அவர்-களுக்கும் தனிக்கடிதமும், அழைப்பிதழும் அனுப்பியுள்ளோம். வைகோவிற்கு இரண்டு அழைப்பிதழ்கள் அனுப்-பினோம். செய்தியாளர் சந்திப்பில் முன்னரே கூறி, விடுதலை-யிலும் வெளிவந்துள்ளதே!

கேள்வி : தமிழகத்தில் ஆசிரமங்களே இருக்கக்கூடாது என ஒரு உத்தரவு போட்டால் என்ன சார்....?

- ஜி. குப்புசுவாமி, சங்கராபுரம்

பதில் : அருமையான யோசனை அய்யா, அந்நாள் விரைவில் வரலாம். காரணம் பக்தர்களே அப்படி வேண்டும் நிலை விரைந்து வரும்.

கேள்வி : தங்களைப் பற்றிய சுயமதிப்பீடு?

- மன்னைசித்து, மன்னார்குடி1.

பதில் : இன்னமும் ஏராளம் கற்று, உழைத்துக் (சமூகத்திற்கு) கடன் அடைக்க வேண்டியதற்குரிய ஓர் பெரியார் தொண்டன்.

கேள்வி : உச்சிக் குடுமிகளைத் தொலைத்துவிட்டு, மதமாற்றத் தடைச்-சட்டம் கேட்கும் பிராமணர்கள் ஆங்கிலேயர்களை மதமாற்றம் செய்யும் போது அவர்களுக்குப் பஞ்சகச்சம்கட்டிப் பூணூல் அணிவிப்பது; இந்து மதம் என்றால் பஞ்சகச்சம் பூ நூல் அணி-வதுதான் என்பது மாதிரியான தோற்றத்தை ஏற்படுத்துகிறார்களே, இதை மற்ற இந்துக்கள் அறியாமல் இருப்பது ஏன்?

- சே.து ரை, இளையான்குடி

பதில் : அருமையான பொறி-தட்டும் கேள்வி. முரண்பாடுகளை மூடி மறைப்பதே ஆரியம்.

 

கேள்வி : பார்ப்பனர்கள் தங்களை அந்தணர் என அழைத்துக் கொள்வது சரியா?

-பி.ஏ.வாதூர், மேட்டுப்பாளையும்

பதில் : தவறு, தவறு. பார்ப்பனர் வேறு, அந்தணர் வேறு, ஆதாரம் வள்ளுவர் குறள். அந்தணர் என்போர் அறவோர், பூணூல் போட்டவர்கள் அல்ல. மறப்பினும் ஒத்துக்கொள்ளலாம். பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றிக்-கெடின் _ குறள்.

கேள்வி : தத்துவ மேதை பெட்ரண்-டரஸல் அவர்கள் எழுதிய நான் ஏன் கிறிஸ்தவனல்ல? என்ற புத்தகத்தில் (பக்கம் 20) சரித்திர சம்பந்தமாக ஆராய்ச்சி செய்வோமானால், கிறிஸ்து என்ற ஒருவரே இருந்தார் என்பதற்கு போதிய அத்தாட்சி கிடையவே கிடையாது என்று குறிப்பிடுகிறார். இது சரிதானா? சற்று விளக்குங்கள் அய்யா. (வரலாற்று ஆசிரியர்கள் கி.மு., கி.பி., என்ற கால அளவைத்தானே பயன்படுத்துகின்றார்கள்)

- பி. அதிர்ட்டராசு, மதுரை-3

பதில் : அவரது ஆய்வு ஆழ-மானது. இப்போது அறிஞர்கள் B.C.E (Before Common Era) C.E என்றுதான் குறிப்-பிட்டு, அந்த கி.மு., கி.பி.யை மாற்றியுள்ளார்-களே!

கேள்வி : மாவோயிஸ்டுகள் ராணு-வத்தினைரையும், போலிசையும் மட்டு-மல்லாது, பள்ளிக் கூடங்களை இடிப்பதும் பொதுமக்களை கொல்லு-வதும் என்ன சித்தாந்தம்?

- கு.பழநி, புதுவண்ணை

பதில் : மக்கள் விரோதச்செயல், குழப்பத்தின் வெளிப்பாடு.

print
send to friend
Bookmark and Share
Home | Viduthalai | The Modern Rationalist | Periyar Pinju | Periyar Webvision | Periyar Matrimonial | Periyar childrenhome