ஜூன் 01-15_2010

பொருளடக்கம்


Contant

 

வளரும் செயற்கை உயிர் தகரும் கடவுள்

வீ.குமரேசன்

உலகில் வெறும் ஆன்மீக நம்பிக்கையின் பாற்பட்ட, ஆதாரமற்ற சிந்தனைகளை உடைத்து அறிவியல் வரலாற்றில் புதுப்புது பக்கங்கள் கடந்த காலங்களில் உருவாகி வந்துள்ளன. அத்தியாயம் படைத்திட்ட அந்த அறிவியல் கண்டுபிடிப்புகளின் தாக்கங்கள் பல தரப்-பட்டவை, அவை அன்றாட நிகழ்ச்சிகளை, பழக்க வழக்கங்-களை பயனற்றவை ஆக்கிவிடும். சில கண்டுபிடிப்புகள் மனித சமுதாயத்தையே உலுக்கிப்போடும் வலிமை வாய்ந்தவை. அத்தகைய உலுக்கிப்போட்ட _ -கடந்த கால கண்டுபிடிப்பு. சார்லஸ் டார்வினின் பரிணாமக் கோட்பாடு மனித இனம் என்பது சிறு உயிரினங்-களிலிருந்து படிப்படியான பரிணாம வளர்ச்சி இன்றைய நிலையாகும். இதற்கு அடுத்தாற்போல கடவுள் படைப்புத் தத்துவத்தையே புரட்டிப் போடுகின்ற அளவில் செயற்கை முறையில் உயிர்செல் உருவாக்கப்பட்ட செய்தியும் அந்த செல் இனப்பெருக்கம் செய்துள்ள முறையும் மாபெரும் பிரமிப்பை உருவாக்கியுள்ளன.

அமெரிக்காவில் ஜே. கிரெய்க் வெண்டர் ஆராய்ச்சி நிறுவனத்தினைச் சார்ந்த அறிவியலாளர்களின் அரும் பணியால் செயற்கையாக உயிர் செல்கள் உருவாக்கப்-பட்டுள்ளன. இதுவரை செயற்கையில் உயிரினங்களை ஒத்த திண்மையுடன் கூடிய வடிவங்கள் உருவாக்கப்-பட்டிருந்-தாலும், அந்த வடிவங்களில் மனிதனால் உயிரை உருவாக்க முடியவில்லை. அமெரிக்க அறிவியலாளர்கள் உருவாக்கிய செயற்கை செல்களில் உயிர் உருவாக்கப்பட்டுள்ளது. உயிர்உருவாக்கப்பட்டதன் அடையாளமாக செயற்கையாக அமைக்கப்பட்ட செல்கள் இனப் பெருக்கம் செய்து, ஒன்று பலவாகி உள்ள அதிசயம் நடைபெற்றுள்ளது. ஆன்மிகவாதி-கள் நினைக்க மறுத்த ஒரு செயலை, பகுத்தறிவாளர்கள் முடிக்க நினைத்த செயலை இப்பொழுது அமெரிக்க நாட்டு அறிவியலாளர்-கள் நிறைவேற்றி அறிவியல் வரலாற்றில் புத்தாக்கப் பக்கத்தை எழுதத் தொடங்கி விட்டனர். மானிடம் முழுவதற்கும் பொது-வான இந்த அறிவியல் உண்மையை வெளிக் கொணர்ந்த அறிவிய-லாளர்-கள் குழாமில் இந்திய வம்சாவளியினைச் சார்ந்தோர், மூவர் இருப்பது பெருமையினையும் மகிழ்ச்சியினையும் தரவல்லது.

அறிவியல் கண்டுபிடிப்பு

ஒவ்வொரு உயிரின்அடிப்படைக் கட்டமைப்பின் ஆரம்பம் செல். ஒரு செல்லிலிருந்துதான் பல்வேறு உயிரினங்களும் மனித இனமும் பெருக்கமடைகின்றன. ஒவ்வொரு செல்லிலும், உயிரினப் பண்பினை உருவாக்கும் மரபணுக்களை உள்ளடக்கிய நிரமிகள் இரட்டை எண்ணிக்கையில் உள்ளன. நிறமிகளில் உள்ள புரதச் சத்துகள் இருவகைப்படும் டி.என்.ஏ. (ஞிழிகி - ஞிமீஷீஜ்ஹ் ழிநீறீமீவீநீ கிநீவீபீ), ஆர்.என்.ஏ. (ஸிழிகி - ஸிவீதீஷீ ழிநீறீமீவீநீ கிநீவீபீ) இந்த டி.என்.ஏ. அமைப்பினை ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கு முன்னர் நாத்திக அறிவியலாளர் கிரிக் மற்றும் வாட்சன் உருவாக்கினர் உயிரியல் உலகில் தாக்கத்தினை ஏற்படுத்திய அந்த கண்டுபிடிப்-பிற்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இப்பொழுது சாதனை கண்டுள்ள செயற்கை செல், 1.08 மில்லியன் கட்டமைப்புள்ள நிறமி-களை உள்ளடக்கிய பாக்டீரியா இன வகையினைச் சார்ந்தது. அதன் பெயர் மைகோப்ளாஸ்மா மைகாய்ட்ஸ். வெள்ளாடு விலங்கின் பால் தரும் மடியில் ஒருவித நோயினை உருவாக்கும் பாக்டீரியா இது. இயற்கையில் உள்ள இந்த பாக்டீரியாவினை, கணினிமூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்க வடிவமைப்பினை நான்கு பாட்டில்கள் வேதியியல் பொருள்கள் கொண்டு அறிவிய-லாளர்-கள் செயற்கையாக உருவாக்கியுள்ளனர். பரிசோதனை கூடச் சூழலில் உருவாக்கப்பட்ட இந்த செயற்கை பாக்டீரியாவை அந்தச் சூழலில் இனப்பெருக்கம் -_ ஒன்று பலவாகும் _ செய்யும் முறையினையும் உருவாக்கியுள்ளனர். உயிரை ஒத்த அறிவியல் கண்டுபிடிப்புகள் பலப்பல. உயிரையே செயற்கை முறையில் உருவாக்கிய அறிவியல் கண்டுபிடிப்பு இது. இதே அறிவியல் கண்டுபிடிப்பு, நோய் தரவல்ல பாக்டீரியா உருவாக்கத்தில் சாத்தியப்படும் பொழுது _ இந்த அறிவியல் கோட்பாடு மற்ற உயிரினங்களில் உருவாக்கப்படும் சாத்தியம் அப்பட்டமான உண்மையே. அந்த நாள் வெகு தொலைவில் இல்லை. இப்பொழுது நடைமுறையில் மனித இனம் பயன்படுத்தும் வசதி வாய்ப்புகள், அறிவியல் சார்ந்த கருவிகள்ஆரம்ப நிலையில் சிறிய அளவில் உருவாக்கப்பட்டன. கோட்பாடு நிறுவல்தான் ஆரம்பம். கோட்பாடு அடிப்-படையில் ஆதாரங்களை பெருக்கிக் கொள்ளலாம்.

அறிவியலாளர்களுக்கு வாழ்த்து!

செயற்கை உயிர் செல்லை உருவாக்கிய அமெரிக்க அறிவியலாளர் குழாமின் தலைவர்கள் ஜே. கிரெய்க் வெண்டர் மற்றும் டாக்டர் ஹாமில்டன் ஸ்மித். மொத்த அறிவியலாளர்கள் 16 பேர். அதில் இந்திய வம்சாவளியினைச் சார்ந்தோர். மூவர் சஞ்சய் வாஸி, ராதா கிருஷ்ணகுமார் மற்றும் பிரசாந் நி. பார்மர் இம்மூவரில் இராதா கிருஷ்ணகுமார், தமிழ்நாட்டில் திருச்சி _ பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு நுண்ணு-யிரியல் பட்ட மேற்படிப்பு படித்தவர் என்பது மகிழ்ச்சிக்குரியது. மானிடம் மேம்பட விரும்புவோர் அனைவரின் வாழ்த்துதல்களும் அறிவியல் வரலாற்றில் அரிய சாதனை புரிந்-திட்ட அறிவியலாளர்களுக்கு உண்டு.

மனித இனத்தின் சிறப்பியல்பே பகுத்தறிவு-தான். அந்த பகுத்தறிவினை மழுங்கடித்த தன்மையினால் மானிடம் பெற வேண்டிய பல்வேறு ஏற்றங்கள் தடுக்கப்பட்டன; தாமதப்-படுத்தப்பட்டன. பகுத்தறிவின் முழுமையில் மானிடம் செயல்படத் தொடங்கியிருந்தால் எட்டியிருக்க வேண்டிய வெற்றிச் சிகரங்கள் பல்கிப் பெருகியிருக்கும். பகுத்தறிவின் அடிப்படையிலான அறிவியலின் வெற்றி இது. தந்தை பெரியாரின் தொலைநோக்குச் சிந்தனை பகுத்தறிவின் செயல்பாட்டை தடுக்கின்ற சக்திகளை எதிர்த்துப் போராடி சமூகத் தளத்தில் வெற்றி கண்ட தலைவர்களில் முதன்மை-யானவர் தந்தை பெரியார். சமூக, அரசியல் தளத்தில் போராடியதோடு மட்டுமல்லாமல், அறிவியல் முன்னேற்றம் பற்றி பகுத்தறிவின் அடிப்படையில் ஆயிரம் கனவுகள் கண்டார். இனி வரும் உலகம் என ஊர்தோறும் அந்நாளில் மேடைகளில் முழங்கி வந்தார். செல்பேசி, ஆண் _ பெண் சேர்க்கையின்றி சோதனைக் குழாய் குழந்தை என அவர் கண்ட கனவுகள் ஒவ்வொன்றாக நனவாகி வருகின்றன. கடவுள் இல்லை என்ற சொன்ன பெரியார் கடவுள் படைப்பினையே புரட்டிப் போட்டுள்ள செயற்கை உயிர் செல் படைப்பு, அவற்றின் இனப்பெருக்கம் பற்றி பெருமை கொண்டிருப்-பார். இன்று அவர் உடலால் இல்லை. தான் வடித்துக் கொடுத்த கொள்கையால், நிறுவிய இயக்கத்தால், இயக்கத்தினை நடத்திடும் பண்பட்டதலைமையினால் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

ஆரம்பப் பள்ளிக்கூடப் படிப்பினை முழு-வதும் முடிக்காத தந்தை பெரியார்தான் படிப்புலகில் பெரும் மாறுதலை, தாக்கத்தினைக் கொண்டு வந்தார். மனிதன் கடவுளால் படைக்கப்-பட்டனவல்ல; உயிரின பரிணாம வளர்ச்சியின் இன்றையநிலைதான் மனித இனம் - _ எனும் சார்லஸ் டார்வினின் கோட்பாட்டின் பெருமையினை அவரது 200ஆவது பிறந்த நாள் மற்றும் அவரது உயிர்களின் தோற்றம் எனும் அரிய கண்டுபிடிப்புகள் 150ஆவது ஆண்டு விழாவினை கல்வி நிறுவனங்கள் உள் அரங்கங்-களில் மட்டும் நடத்திய வேளையில், பொது மக்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் வெளி அரங்கத்திற்கு _ மக்கள் மன்றத்திற்குக் கொண்டுவந்த பெருமை தமிழர் தலைவர் கி. வீரமணி தலைமையிலான திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகத்திற்கு உண்டு. கடவுள் உயிர் கொடுத்தார் எனும் நம்பிக்கையினைத் தவிடு பொடி ஆக்கியுள்ள செயற்கை உயிர் செல் உருவாக்கப்பட்ட செய்தியினை நாடெங்கும் ஊரெங்கும், வீதியெங்கும் பிரச்சாரம் செய்து மனித இனத்திற்கு பகுத்தறிவின் மேன்மையினை, அறிவியலின் ஆக்கத்தினை புரிய வைத்திட வேண்டும் ஒத்த அமைப்புகளும் இந்த அரிய, அவசியப் பணியில் அக்கறை காட்ட வேண்டும்.

கடவுள் படைப்பு நம்பிக்கைத் தகர்ப்பின் முழு வெற்றிக் காலம் நெருங்கிவிட்டது. அறிவியல் ஆக்கத்தின் முழு வீச்சு வெளிப்பட்டு விட்டது. கடந்த காலத்தில் அறிவியல் கண்டு-பிடிப்புகள் பற்றி குறை செல்லப்பட்டன. காலம்-தான் கண்டுபிடிப்புகள் என மனித இனத்திற்கு நிறைவுகள் பலவற்றைத் தரவல்லவை நிரூபித்-துள்ளது. இப்பொழுது கண்டுபிடிக்கப்-பட்டுள்ள செயற்கை உயிர் செல் உருவாக்கமும் எதிர்மறை விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. பகுத்தறி-வின் துணை கொண்டு மானிட மேம்பாட்டிற்கு அறிவியல் கண்டுபிடிப்புகளை ஆட்படுத்திக் கொள்வதில்தான் மனிதரின் அறிவுடைமை அடங்கியுள்ளது. அறிவியல் வளரட்டும்! பகுத்தறிவுப் பயன்பாடு பெருகட்டும்!

மானிடம் மேலும் தழைக்கட்டும்!


பதறும் மதம்

கடவுளுடன் விளையாட்டு வேண்டாம் என கிறிஸ்தவ ஆலயங்கள் எச்சரித்துள்ளன.

உயிரை உருவாக்கிட கடவுளால் மட்டுமே முடியும் என அறிவியலாளர்களை எச்சரிக்கிறோம். இது ஒரு மாபெரும் அறிவியல் கண்டுபிடிப்பு. இந்த அறிவியல் கண்டுபிடிப்பு எதிர்காலத்தில் எப்படி நடைமுறையாகும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டியவர்களாக உள்ளோம். வாடிகன் நகர மேல்நிலை உயிரின நெறியாளர் மாண்சைனர் ரிணா பிஷிஷெல்லா குறிப்பிடுகையில், "இந்த கண்டுபிடிப்பு நல்லதற்கு என்றால் அனைத்திற்கும் நல்லது என்போம். இந்த கண்டுபிடிப்பு மனிதனின் கண்ணியத்திற்கும் மரியாதைக்கும் பங்கம் விளைவித்தால் நமது நினைப்புகளும் மாற்றம் பெற வேண்டிய சூழல் உருவாகும் என்று கூறியுள்ளார்.

கணினியின் குழந்தை

புதிய அறிவியல் முறையில் உருவாக்கப்பட்ட பாக்டீரியாக்கள் குளோனிங் குட்டிகளல்ல; மரபணு மாற்றப்பெற்ற உயிரின வகைகளும் அல்ல; அவை செயற்கை முறையில் உருவாக்கம் பெற்றவை. இந்த செயற்கை பாக்டீரியாக்கள் மனிதன் உருவாக்கிய மரபணு தொகுதியினால் உயிர் வாழ்கின்றன. இனப்பெருக்கம் செய்கின்றன.

செயற்கை உயிர் செல் உருவாக்கிய அறிவியலாளர் குழாமின் தலைவர் ஜெ.கிரெய்க் வெண்டர், கண்டுபிடிப்பு பற்றிய கருத்தினை பகிர்ந்து கொள்கிறார், ஒரு கோட்பாட்டின் செயல் விளக்கம் இது. இதன் மூலம் ஒரு உயிரினத்தின் மரபணு தொகுதி முழுவதையும் மாற்றிட முடியும். புதிய பண்புகளைக் கொண்ட மரபணுக்களை உருவாக்கிப் பயன்படுத்திட முடியும். தேவையற்ற மரபணுக்களை நீக்கிட முடியும். பல நிலைப்பட்ட உயிரினங்களை உருவாக்கி அவைகளின் முயற்சிகள் அனைத்தையும் நமது தேவை, விருப்பத்திற்கு ஏற்ப பணித்திட முடியும் என நன்னம்பிக்கையுடன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இந்த பூமிப்பந்தில் முதன்முதல் உருவான தானாகவே பெருக்கம்பெறும் உயிரின வகை இது. இதன் பெற்றோர் கணினிதான் என்பது கிரெய்க் வெண்டரின் கூற்று!

print
send to friend
Bookmark and Share
Home | Viduthalai | The Modern Rationalist | Periyar Pinju | Periyar Webvision | Periyar Matrimonial | Periyar childrenhome