தலையங்கம்
இலங்கை தேர்தல்
ராஜபக்சேவா?
பொன்சேகாவா?
இலங்கையில் இன்னும் சில வாரங்களில் குடி-அரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதில் தற்போது அதிப-ராக உள்ள ராஜபக்சேவும், அவரிடத்தில் இராணுவ தளபதியாக இருந்து, பதவி விலகி போட்டியிடும் சரத் பொன்சேகாவும் தேர்தலில் முக்கிய வேட்பாளர்களா-கக் களம் இறங்கியுள்ள-னர்.
ஈழத் தமிழர்களின் வாக்குகள் பெரும் அள-வுக்கு அதில் வெற்றி பெற-விருக்கும் வேட்பாளரைத் தீர்மானிக்கும் சக்தி வாய்ந்ததாக உள்ளன. இந்த நிலையில், ஈழத் தமிழர்கள் யாருக்கு வாக்-களிப்பது என்பதை மிக-வும் ஆழமாகச் சிந்தித்து முடிவு எடுக்கவேண்டிய தருணம் இது. இக்கேள்வியை, சிங்-கப்பூர் தொலைக்காட்சியி-னர் அங்கே தங்கி இருந்த என்னிடம் ஒரு பேட்டி-யின்மூலம் சென்ற ஒரு மாதத்திற்குமுன் எடுத்து, டிசம்பர் 8 ஆம் தேதி ஒளிபரப்பினார்கள். அப்போது கேட்கப்-பட்ட சிங்கப்பூர் தொலைக்-காட்சி பேட்டியாளரின் கேள்விகளுக்கு நான் அளித்த பதில்களை ஈழத் தமிழர்களின் வாழ்வுரி-மைக்குச் சோதனையான இந்த காலகட்டத்தில் முன்வைப்பது மிகவும் அவசியமாகிறது. உணர்ச்சி வாய்ந்த இந்தப் பிரச்சினைக்கு ஈழத் தமிழர்கள் தீர்வு காணுவது அவ்வளவு எளிதல்ல. காரணம், இந்த இனம் சந்தித்துள்ள, சந்-தித்துவரும் இழப்புகளும், அனுபவித்துவரும் கொடு-மை-களும் சொல்லொணா-தவை ஆகும்! இதற்கு எப்படி எப்-போது விடிவு ஏற்படுமோ என்று மனிதநேயம் உள்ள அனை-வரும் கவ-லையோடு சிந்திக்கின்ற-னர்.
ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த இருவர் இத்தேர்தலில் வேட்பா-ளர்-களாகப் போட்டியிடும் நிலை-யில், யாருக்கு வாக்-களிப்பது என்ற கேள்-விக்கு வெறும் உணர்ச்சி அடிப்படையில் பதில் அளிக்க முன்வந்தால், எரிகிற கொள்ளிகளில் எந்தக் கொள்ளியை நல்ல கொள்ளி என்று கருது-வது? எனவே, இத்தேர்த-லில் இந்த இருவருக்குமே வாக்-களிக்காமல் தேர்தலை தமிழர்கள் புறக்கணிப்பதே சரி-யானது என்று கூறக்-கூடும். ஆனால், அதைவிட, நமது ஈழத் தமிழர்-கள் வெறும் உணர்ச்சிபூர்வ-மாக இப்பிரச்-சினையை அணு-காது, அறிவுபூர்வமாக அணுகவேண்டும் என்று நாம் சிங்கப்-பூர் தொலைக்-காட்சி பேட்டியில் கூறி-னோம். அதனை முன்-வைப்பது இக்கால கட்-டத்தில் மிகவும் முக்கிய-மா-னது; தேவை-யானதும்கூட. தமிழர்கள் தேர்தலை, சென்ற தேர்தலில் புறக்-கணித்த காரணத்தால்தான் அதிபராக இராஜபக்சே வரும் வாய்ப்பே ஏற்பட்-டது. அவ்வாட்சி செய்த அக்கிரமங்களுக்கு இனப் படுகொலைகளுக்கு இட்-லரின் செயல்களால் இரண்-டாம் உலகப் போரின்போது ஏற்பட்டதை-விட மிகவும் கொடுமை-யானது என்பது உலக நாடுகள் பலவற்றிற்கும் கூடத் தெரியும். சென்றமுறை, தேர்-தலைப் புறக்-கணிக்காமல், இந்த இராஜபக்சேவை பதவிக்கு வரவிடாமல் தடுத்திருந்தால் இவ்வளவு மோச-மான நிலை ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்டி-ருக்க வாய்ப்பு வந்திருக்-காது. தவறான முடிவு, மிகப்-பெரும் இழப்புகளுக்கும், சோகத்திற்கும் அவர்-களை ஆளாக்கக் காரணமாக அமைந்தது. அதே தவறை மீண்-டும் ஈழத் தமிழர்கள் செய்துவிடக் கூடாது. நேற்று விழுந்த அதே இடத்தில் இன்றும் விழுந்து-விடக் கூடாது ஈழத் தமிழர்கள்.
இத்தேர்தலில் அவர்-களின் அணுகுமுறை எப்படி இருக்கவேண்டும் என்றால், யார் வர வேண்டும் என்பதைவிட யார் வரக்கூடாது- யார் வெற்றி பெறக்கூடாது என்பதே முக்கியமாக இருக்கவேண்டும்.
அதற்குரிய முக்கிய காரணங்கள்:
1. இராஜபக்சே மீண்-டும் வெற்றி பெற்றால் அவரது ஆட்சி செய்த அத்-தனை இனப்படு-கொலை-கள், உரிமை மறுப்புகள், முள்வேலி சோகங்கள் உலகத்தார் கண்முன் ஜனநாயக முத்-திரையுடன் நியாயப்படுத்-தப்படும். வரலாற்றின் இரத்தக் கறை மீண்டும் முக்கியமான-தொரு இடத்-தில் இருக்-கவே செய்யும்.
2. தமிழர்களின் வாக்-குரிமை, தேர்தல் வெற்-றியை நிர்ணயிக்கக் கூடி-யதாக உள்ளது _ அது சிறுபான்மையாக இருந்த-போதிலும்கூட.
இலங்கையைப் பொறுத்த-வரை, தமிழர்கள் யாரும் அதிபராக வரும் வாய்ப்பு _ வாக்கு பலம் அடிப்படையில் கிடை-யாது. இப்போது அவர்கள் இரண்டு தீமைகளில், எது தவிர்க்க முடியாத குறைந்த தீமை (to Choose the lesser evil) என்-பதைத்-தான் தேர்ந்தெடுக்க-வேண்டிய கட்டாயம் இருக்கிறது! இருவரில், யாரையுமே ஆதரிக்க-மாட்-டோம் என்றால், அது அங்குள்ள ஈழத் தமிழர்-களின் பாதுகாப்புக்கு எதிராக அமைந்து-விடும் ஆபத்து உண்டு.
(3) பொன்சேகாவும் தளபதியாக இருந்து தமிழர்களுக்குக் கொடுமை செய்தவர்தானே _ இவரை எப்படி ஆதரிக்க முடியும் என்ற கேள்வி-யில் நியா-யம் உண்டு என்றாலும், அவர் ஒரு வேலைக்காரர்_ அதிபர் இராஜபக்சேவுக்கு. முடிவு எடுத்த இடத்தில் இருந்தவர் அல்லர்; அவர் தன் செயலை நியாயப்-படுத்-தாது, ஓரளவு மனந்-திறந்து தன் செயலுக்கு வருத்தம் தெரிவிக்கும் நிலை ஒரு திருப்பமாகும். அதை தமி-ழர்கள் பயன்-படுத்திக் கொள்ளவேண்டும்.
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அவர் நிறுத்தப்பட்டிருக்-கிறார்; அவர் தமிழர்-களின் வாக்குகளைக் கேட்க, அவர்களின் முக்கிய கோரிக்கைகளை ஏற்கத் தயாராக உள்ளார் என்பது நேற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவ-ருடன் பேசி அதில் பல அம்-சங்கள் ஏற்க இசைவு தெரிவித்துள்ளார்! அந்த நிபந்தனை-களோடு அவ-ருக்கு ஆதரவு தரும் முடிவுதான் சரி-யானது, வரவேற்கவேண்டிய முடி-வாகும்.
பொன்சேகா ஒரு இராணுவப் பணியாள-ராகத்தான் செயல்பட்டார்; அவர் கீழ்ப்படிய மறுத்தி-ருந்தால்முடிவில் என்ன மாற்றம் ஏற்-பட்டிருக்கும்? அவர் சிறையில் இருந்தி-ருப்பார், அல்லது காணாது போயிருப்பார்; நிலைமை மாறியிருக்காது. எனவே, அதற்குக் காரணம் இராஜ-பக்சே தோற்கடிக்கப்படு-வதே, சரியான மக்கள் தீர்ப்பாக அமையவேண்-டும். இதற்கு தமிழர்களின் பங்களிப்பு இருப்பதே முக்கியம்; காலத்தின் கட்-டாயம். சில நேரங்களில் கசப்-பான முடிவுகள் தவிர்க்கப்பட முடியாத-வைகள்-தாம் என்றாலும், வேறு வழியில்லை என்-னும்-போது, அதனை மேற்கொள்வதே, தமிழர்-களின் வருங்காலத்திற்கு நல்லது ஆகும். எந்தத் தடியை எடுத்து அடித்து பாம்பை வீழ்த்தி-னோம் என்பது முக்கிய-மல்ல; சீறிய பாம்பை அது மீண்டும் படம் எடுத்துக் கடிக்காமல், அதனை வீழ்த்-தினோம் என்பதே அறிவுப்பூர்வச் சிந்தனை. தமிழ்த் தேசிய கூட்ட-மைப்பின் முடிவு மனித உரிமை பாது-காப்புக் கண்ணோட்டத்தில் மிக-வும் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு ஆகும்.
- கி. வீரமணி
ஆசிரியர்.