சாதித்த பகுத்தறிவாளர்
கலைஞானி கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்துள்ள "தசாவதாரம்" திரைப்பட சிறப்புக் காட்சி 22.6.2008 அன்று திரையிடப்பட்டது. உலகத் திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக 10 வேடங்களில் ஒரே நடிகர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தைப் பார்த்த தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள், "யாரும் நினைத்துப் பார்க்க முடியாத சாதனையை பகுத்தறிவுக் கொள்கை உணர்வோடு செய்திருக் கிறீர்கள். உங்கள் சாதனையை, உங்களால் மட்டுமே முறியடிக்க முடியும்" என்று பாராட்டு தெரிவித்து, நடிகர் கமல்ஹாசன் அவர்களுக்கும், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் அவர் களுக்கும் பொன்னாடை அணிவித்து சிறப்பித்தார். இருவரும் தமிழர் தலைவர் அவர்களுக்கு நெகிழ்ச்சி யோடு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.